Saturday, July 12, 2014

Jamath Games மெளலவி லீலைகள் ஏன் எதற்காக? ஒரு விளக்கம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கப்படுகின்றது.


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹு தஆலா தன்னுடைய மார்க்கத்தை பிரச்சாரம் செய்ய காலத்துக்குக் காலம் இறை தூதர்களை அனுப்பினான். அதில் இறுதியானவர்களாக கண்மணி நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லால்லாஹு அலைஹிவசல்லாம் அவர்களை அனுப்பி வைத்தான்.



இறைவனால் அனுப்பப் பட்ட ஒவ்வொரு நபிமார்களும், அல்லாஹு தஆலா அவர்களுக்கு அருளிய மார்க்கத்தை மிகவும் நேரிய வழியில் சீரிய முறையில் அழகாகவும், முழுமையாகவும் பிரச்சாரம் செய்து, தங்களுடைய காலத்து மக்களுக்கு முறையாக வழங்கிச் சென்றார்கள்.

ஒவ்வொரு நபிமார்களும் இவ்வுலகத்தை விட்டும் சென்ற பின்னர், அந்த மார்க்கங்களில் மதகுருக்கள், புரோகிதர்கள், பூசாரிகள் உருவாக ஆரம்பித்தனர். இவர்களால் மார்க்கங்கள் மாற்றியமைக்கப் பட்டு மாசடைந்து, பாழடைந்து உருமாறிப் போயின.

தங்களது சொந்த தேவைகளுக்காக இறைவனின் மார்க்கத்தில் விளையாடி, மக்களை ஏமாற்றி, மார்க்கங்களையே மண்ணாக்கியவர்கள் இந்த மதகுருக்களும், புரோகிதர்களும், பூசாரிகளுமாகும். இன்ஜீல் மற்றும் தவ்ராத் வேதங்கள் அல்லாஹ்வால் ஈஸா (அலை), மூஸா (அலை) ஆகியோருக்கு அருளப் பட்ட வேதங்களாகும். ஆனால் குறித்த நபிமார்களுக்குப் பின்னால் மதகுருமார்களால் இந்த வேதங்கள் முற்றாக மாற்றியமைக்கப் பட்டு, அல்லாஹ்வின் அடையாளமே மறைக்கப்பட்ட  நிலைக்கு ஆக்கப் பட்டு சிலை வணக்கங்கள் கூட புகுத்தப் பட்டு,கிறிஸ்தவம் என்றும் யூதம் என்றும் வேறு மதங்களாகவே மாற்றப் பட்டு இருப்பதனை இன்று நாம் காண்கின்றோம்.

நபி (ஸல்) அவர்களினதும், சஹாபாக்களினதும், நேர்வழி வந்த இமாம்களினதும் மறைவுகளைத் தொடர்ந்து படிப்படியாக இன்று இஸ்லாத்திலும் மதகுருமாரின் அடாவடிகளும், அக்கிரமங்களும், ஆதிக்கங்களும், ஊடுருவல்களும், கையாடல்களும் அதிகரித்து வருவதனை காணக் கூடியதாக உள்ளது. இந்த மதகுருக்கள் மெளலவிமார் என்று அழைக்கப் படுகின்றனர்.

பள்ளிவாசலிலும், ஏனைய மார்க்க சம்மந்தமான இடங்களிலும் குடியேறி, ஊரான் காசில் உடலை ஊதி வளர்த்து, உருப்படியாக தொழிலேதும் செய்யாமல், அடுத்தவனை பல்வேறு வழிகளிலும் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி ஏமாற்றி காலத்தை கழிக்கும் உல்லாசப் பிரியர்களான மெளலவிகளால் மார்க்கம் மட்டுமல்ல, மற்ற சகோதரனின் குடும்பங்கள் கூட சூறையாடப் பட்டு, சீரழிக்கப் படுவதனை நாம் கண்கூடாகக் காண்கின்றோம்.


"இவன் மெளலவி, மார்க்கத்தை படித்தவன், இல்மை சுமந்தவன், நபி மார்களின் வாரிசு" என்று மக்களிடம் காணப்படும் குருட்டு நம்பிக்கையின் பலவீனத்தை பயன்படுத்தியே மெளலவிகள் தங்களின் லீலைகளை அரங்கேற்றுகின்றனர்.

யாரோ சொல்கின்றார்கள் என்பதற்காக நாமும் இவர்களை நபிமார்களின் வாரிசு என்று சொல்லிவிட்டுப் போகின்றோமே தவிர, உண்மையிலேயே இவர்கள் நபிமார்களின் வாரிசுகளாக இருக்க முடியுமா என்று நாம் எப்பொழுதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா? ஒரு நபி எப்படி வாழ்ந்தார் என்பது தெரியாதவன் தான் ஊரை ஏமாற்றிப் பிழைக்கும் மெளலவியை நபிமாரின் வாரிசு என்று சொல்லுவான், மார்க்கம் தெரிந்தவன் ஒரு பொழுதுமே ஒரு புரோகிதனை வாய் தவறிக் கூட நபிமாரின் வாரிசு என்று சொல்லவே மாட்டான்.


உலமாக்கள் நபி மாரின் வாரிசுகள் என்று மீண்டும் மீண்டும் இவர்கள் சொல்லி, அதனை அப்பாவி மக்களின் மனங்களில் பதிய வைப்பதன் நோக்கமே, தாங்கள் எவ்வித தடையும் இன்றி தங்கள் திருவிளையாடல்களை நிகழ்த்த வேண்டும் என்பதனால் ஆகும்.

வீட்டிலே வைத்துக் கொள்ள முடியாது என்பதற்காக மதரசாவிற்கு அனுப்பப் படும் ஒருவன், அங்கே பல்வேறு பாவங்களில் மட்டுமின்றி உஸ்தாத், சக மாணவர்களுடன் தன்னினச் சேர்க்கைகளிலும் ஈடுபட்டு, காலத்தைக் கழித்துவிட்டு, வெளியில் நல்லவன் மாதிரி நடித்துவிட்டு, ஒரு நீண்ட ஜுப்பாவைப் போட்டு, இலவசமாக வளரும் தாடியை வைத்துக்கொண்டு தலையில் ஒரு தொப்பியைப் போட்டுக் கொண்டு வந்தால், இவன் நபிமாரின் வாரிசு ஆகிவிட முடியுமா?

இப்படித்தான் இன்று இருக்கும் 99% ஆன மெளலவிகளின் நிலைமை இருக்கின்றது. இப்படிப்பட்டவர்களை நபிமாரின் வாரிசுகள் என்று சொல்வது, நபிமாரை இழிவு படுத்துவதாக அமைந்துவிடும்.


ஒரு நபி தனது உம்மத்தை எமாற்றுவாரா? காட்டிக் கொடுப்பாரா? தனது உம்மத்திற்கு துரோகம் செய்வாரா? அடுத்தவன் சொத்தை ஏமாற்றி அபகரிப்பாரா? ஹஜ்ஜுக்குக் கூட்டிக்கொண்டு சென்று உள்ளதை எல்லாம் அபகரிப்பாரா? காபிரின் தேவைக்கு ஏற்ப பெருநாளை விலை பேசி விற்று வேறு நாளுக்கு மாற்றிக் கொடுப்பாரா? வட்டிக்கு ஹலாலை விற்று கோடி கோடியாக காசு சம்பாதிப்பாரா? சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்வாரா? அடுத்தவன் மனைவியுடன் சல்லாபிப்பாரா? உம்மத்தை பிரிப்பாரா? சமூகத்தை கூறு போடுவாரா? உம்மத் பிரச்சினையிலும், கஷ்டத்திலும் இருக்கும் பொழுது ஓடி ஒழிந்து கொண்டு தான் மட்டும் சொகுசாக இருப்பாரா? ......................................... .      .......................................... (நஊதுபில்லாஹ்)  இப்படியெல்லாம் செய்யும் மெளலவி புரோகிதர்களை, நா கூசாமல் "நபிமார்களின் வாரிசுகள்" என்று சொல்வது, நபிமார்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமும், இழிவும் ஆகும். இவ்வாறு தெரியாமல் சொல்பவர்களை அல்லாஹ் மன்னிக்க வேண்டும்.


உண்மையிலேயே மெளலவிகளின் பேச்சுக்கும் - பயானுக்கும், அவர்களின் செயல்பாட்டுக்கும் சம்மந்தமே இருக்காது.

பல்வேறு இயக்கங்களாக, குழுக்களாக, ஜமாத்துக்களாக மக்களை பிரித்து, தங்களை தலைவர்கள் என்று ஆக்கிக் கொள்ளும் அனைவருமே மெளலவிகளாகவே உள்ளனர்.

சமூகத்திற்கு மத்தியில் போலியாக ஒற்றுமை ஒற்றுமை என்று மூச்சுக்கும் பேச்சுக்கும் வாய் கிழிய பயான் பண்ணும் நய வஞ்சக மெளலவிகள் எதோ ஒரு இயக்கத்தில் தலைவர்களாக, முக்கிய உறுப்பினர்களாக உள்ளனர்.

இன்று இந்த சமுதாயம் பிரிந்து, பிளவுபட்டு இருக்கின்றது என்றால், ஒவ்வொரு பிரிவின் பின்னணியிலும், பிளவின் பின்னணியிலும் ஒரு மெளலவியைத் தவிர வேறு யார்தான் இருக்கின்றார்கள் என்று சிந்தித்துப் பார்த்ததுண்டா? ஒவ்வொரு பிரிவும், பிளவும், இயக்கமும் ஒரு மெளலவியினாலேயே தலைமை தாங்கப் படுகின்றது. இவர்கள் எல்லாம் நபிமார்களின் வாரிசுகள் என்றால், இப்படி நடக்குமா?

இவர்கள் நபிமாரின் வாரிசுகளா, இல்லை சைத்தான்களின் வாரிசுகளா?

இன்று தமிழ் பேசும் இஸ்லாமிய உலகில் இஸ்லாத்தை நாசமாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பவர்களாக மெளலவிகளே உள்ளனர். இந்த மெளலவி புரோகித மதகுருக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கின்றனர். மக்களோ இவர்களுக்கு எதிராக பேச தயங்குகின்றனர்.

இஸ்லாத்தை மட்டுமல்ல, முஸ்லிம்களின் குடும்பத்தின் படுக்கையறை வரை புகுந்து குடும்பங்களை நாசமாக்குவதிலும் மெளலவிகளே முன்னணியில் உள்ளனர்.

பகலில் பப்ளிக்கில் எடுத்ததற்கெல்லாம் "அல்லாஹ், அல்லாஹ்" என்றும், இன்னும் அரபு சொற்களையும் அடிக்கடி சொல்லும் மெளலவிகளின் நாவுகள், இரவின் இருட்டில் யாரின் வீட்டில் புகுந்து எங்கே எதனை நக்குகின்றன என்பதனை சிலர் நன்றாகவே அறிந்தும் அறியாதது போன்று உள்ளனர்.

கெளரவம், மார்க்கம் படித்தவர், நபிமாரின் வாரிசு என்ற போலி மாய மரியாதை காரணமாக பலபேர் வாய்மூடி மெளனிகளாக இருந்து விடுகின்றனர். நீண்ட ஜுப்பா, நீண்ட தாடி, தலையில் தொப்பி, தலைப்பாகை போன்ற புறத் தோற்றத்தின் மாயங்களால் அறிவுள்ள மனிதனையும் மயக்கி விடுகின்றனர் இந்த மதகுருக்கள்.

முஸ்லிம்கள் முஸ்லிம்களாகவும், மனிதர்கள் மனிதர்களாகவும் வாழ முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணியாக இருப்பவர்களும் இந்த மெளலவி மத குருக்களே.


ஆகவே, மெளலவிகள் குறித்த உண்மைகளை அலசி ஆராய்ந்து, புரோகித வேடதாரிகளின் முகமூடிகளைக் கிழிக்கும் சத்தியக் குரலாக இந்த இணையம் தொடர்ந்தும் ஒலிக்கும்.

முஸ்லிம்களுக்கு தலைமை தாங்குகின்றோம், மார்க்க விடயங்களை நாம் தான் தீர்மானிக்கின்றோம் என்று சபைகளின் முக்கிய பொறுப்புகளுக்கு வரும் மெளலவிப் புரோகிதர்கள், பெரிய அளவில் சமூகத்தையும், மார்க்கத்தையும் விலை பேசி, நடுத்தெருவில் விட்டுவிட்டு, கோடி கோடியாக சம்பாதிப்பதையும், வெளிநாடுகள் என்று உல்லாச பயணங்கள் செல்வதையும், நட்சத்திர ஹோட்டல்களில் தில்லாலங்கடி வேலைகளில் ஈடுபடுவதையும் காணலாம்.

இவை குறித்த விழிப்புணர்வு முஸ்லிம்கள் மத்தியில் வராத வரையில் , இந்த மெளலவிகள் என்கின்ற போர்வையில் இருக்கின்ற பசுத்தோல் போர்த்திய புலிகள் குறித்த உண்மைகளை உணராத வரையில், முஸ்லிம் சமூகத்திற்கு ஈடேற்றம் எப்படி வரும்?

முஸ்லிம் உம்மத்திற்கான ஈடேற்றம் இஸ்லாத்தில் மட்டுமே இருக்கின்றது. ஆனால் துரதிஷ்டவசமாக இன்று இஸ்லாத்தை ஒரு கெட்ட புரோகிதர்கள் கூட்டம் சொந்தம் கொண்டாடி வருகின்றது. இந்த நிலை மாறாத வரை, புரோகிதம் ஒழிக்கப்பட்டு, முஸ்லிம்கள் இஸ்லாத்தில் ஒன்றிணையாத வரை, ஐக்கியப்படாத வரை, முஸ்லிம் உம்மத்திற்கு ஈடேற்றம் என்பது சாத்தியமில்லை.



புரோகிதத்திற்கும், போலி உலமாக்களிற்கும், செயத்தானின் வாரிசுகளுக்கும் எதிரான விழிப்புணர்வுப் பணி தொடரும், இன்ஷா அல்லாஹ்.


வாசகர்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் கீழே உள்ள Comments பகுதியில் தெளிவான பதில் வழங்கப்படும்.

8 comments:

  1. Appa yarthan namaku walikati

    ReplyDelete
  2. இதை பார்த்து படித்து எல்லோரும் காதியானி சிறந்தவன் என் பிரச்சாரத்தை கண்டு ஏமாந்து அவன் பின்னால் போகிறாரகள் . நீங்கள் கூட அப்படி தானா ?

    ReplyDelete
    Replies
    1. மெளலவிகள் என்று அழைக்கப்படும் பூசாரிப் புரோகிதர்களால் தூய மார்க்கத்திற்கு ஏற்படும் அநியாயங்கள் தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அவற்றைப் புரிந்துகொள்ளமுடியாமல், கள்ள நபியான நேரடி நரகவாதியைப் பின்பற்றும் காதியானியை நோக்கி எவனாவது ஒருவன் செல்வானாக இருந்தால், அவன் மிகப்பெரிய பைத்தியகாரனாகவே இருப்பான்.

      கோளாறு இஸ்லாத்தில் இல்லை, இஸ்லாத்தை ஏக போக உரிமை கொண்டாடும் மெளலவி என்னும் பூசாரிக் கூட்டத்திடமே கோளாறு உள்ளது.

      Delete
  3. This guy is cteazy.why don't u show your fase Mr ABOO JAHL.

    ReplyDelete
  4. உங்கள் பார்வையில் சிறந்த மௌளவிகள் இருக்கின்றார்களா?

    ReplyDelete
    Replies
    1. அவன்ங்க பார்வையில் ஷியா மௌலவிகள் தான் சிறந்தவர்கள்

      Delete
    2. இவர்களின் பார்வையில் ஜமாஅத்துல் முஸ்லிமீன் சிறந்தவர்கள்.

      Delete
  5. நீங்களெல்லாம் கபுறு வணங்கி அசாத் சாலி ஆதரவாளர்களா நல்லா வருவீங்க

    ReplyDelete