"பாலூட்டி வளர்த்த கிளி, பழங்க்கொடுத்து பார்த்த கிளி, நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு... " என்று சிவாஜி கணேசன் மதுக் கிண்ணத்தை கையில் ஏந்திக்கொண்டு, மனைவி செல்லம்மாவை அணைத்துக்கொண்டு கெளரவம் படத்தில் படுவது போலவும், "நீயும் நானுமா? அப்பாஸ் நீயும் நானுமா?" என்றும் பாட வேண்டி ஆகிவிட்டது விவாத உலகின் முடிசூடா மன்னன் PJ யின் நிலைமை. ஆம், PJ வளர்த்த அப்பாஸ், விவாதத்திற்கு வரும்படி PJ இற்கே பகிரங்க சவால்விட்டால் எப்படி இருக்கும் PJ யின் மனநிலை?
TNTJ யின் கெளரவம் (??) என்னாவது என்று PJ சிந்திக்க வேண்டியாகிவிட்டது.
ஒரு காலத்தில் பாதிரியார் முதல், மத்ஹபு வாதிகள், ஜமாலிகள், கோமாளிகள் வரை மாற்றுக் கருத்துள்ளவர்களை எல்லாம் விவாத அரங்குகளில் போட்டுப் புரட்டிப் பின்னி எடுத்து துவம்சம் செய்து விவாத உலகின் முடிசூடா மன்னராக திகழ்ந்த PJ, ஆனைக்கும் அடி சறுக்கும் என்று வாய் சறுக்கத் தொடங்கவே, தன்னை தற்காத்துக் கொள்ள, இலங்கையின் முஜாஹித் முதல் இந்தியாவின் காஸிமி வரை, யார் விவாதத்திற்கு அழைத்தாலும், "அப்பாஸுடன் விவாதித்துக் கொள்ளுங்கள்" என்று எந்த அப்பாஸை முன்னிறுத்தி தான் எஸ்கேப் ஆகி வந்தாரோ, அந்த அப்பாஸ், நேற்று TNTJ யிலிருந்து விலகியது மட்டுமின்றி, இன்று PJ யையே பகிரங்க விவாதத்திற்கு அழைத்தால், பாவம் எங்கே போவார் PJ?
( "யாருக்காக, இது யாருக்காக, இந்த TNTJ, சொந்த TNTJ, கனவு சூனியம் கலைந்த TNTJ, யாருக்காக, இது யாருக்காக
பாக்கரே போ........., அப்பாஸே வா.......
விவாதம் என்னும் தூது வந்தது, அது அப்பாஸ் என்னும் வடிவில் வந்தது, எனது வாரிசாக நான் நினைத்தது, இன்று சவாலாக மாறிவிட்டது...." என்று PJ யால் அப்பாஸை நினைத்து நினைத்து வசந்தமாளிகை பாட்டா பாட முடியும்? )
யாராவது ஒருவர் TNTJ யிலிருந்து விலகினால், PJ யின் சுன்னத்தான வழிமுறையைப் பின்பற்றி அவர் மீது பாலியல், பணமோசடி போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும், அப்பாஸ் அலி விடயத்திலும் இந்த PJ சுன்னத் பின்பற்றப் பட்டுள்ளது.
அது மட்டுமின்றி, அப்பாஸ் அலியின் e mail திருடப்பட்டு, அதில் முறைகேடாக உள்நுழைந்து, உள்ளே இருந்த எல்லா முக்கிய mail களையும் அழித்தும் இருக்கின்றார்கள் TNTJ செயல் வீரர்கள்.
எனினும் அசந்து விடவில்லை அப்பாஸ் அலி. பாக்கர், ஹாமித் பக்ரி போன்றவர்கள் விலகிய பொழுது, அமைதியாகச் சென்றது போல செல்லாமல், தைரியமாக PJ யையே விவாதத்திற்கு அழைத்துள்ளார்.
ஆம், PJ யின் மாணவனாக இருந்த அப்பாஸ் அலியிடம் PJ யை கவிழ்த்துப் போடக்கூடிய பெரிய துரும்புகள் நிச்சயமாக இருக்கலாம் என்றே எதிர்பார்க்கப் படுகின்றது. அதன் காரணமாகவே, தைரியமாக PJ யை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டார் அப்பாஸ் அலி.
இது வரை காலமும், தனிமனித மதக்குழு போன்று செயற்பட்டு வந்த TNTJ யின் அடிப்படைகளும், அத்திவாரமும் ஆட்டம் காண ஆரம்பித்திருப்பதனை அப்பாஸ் அலி விவகாரமும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலைமையும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
அப்பாஸ் அலியின் பகிரங்க விவாத அழைப்பிற்கு, "கடலுக்கே உப்பா" என்று தைரியமாக PJ முகம் கொடுப்பாரா, இல்லை வழமை போன்று நொண்டிச் சாட்டுக்களைச் சொல்லி எஸ்கேப் ஆகுவாரா என்பதே தற்பொழுதுள்ள முக்கிய கேள்வி ஆகும்.
இதோ, அப்பாஸ் அலி விடுத்துள்ள விவாத அழைப்பு.
சகோதரர் பீஜேவிற்கு பகிரங்க விவாத அழைப்பு.....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பான சகோதரர்களே !!!
நான் சிஹ்ர் சம்பந்தமாக நன்கு ஆய்வு செய்துவிட்டுத் தான் தவ்ஹீத் ஜமாத்திலிருந்து வெளியேறினேன். பணத்திற்காக நான் வெளியேறியிருந்தால் இவர்களை கண்டு பயந்தோடும் நிலையே எனக்கு ஏற்படும். அல்லாஹ் அப்படிப்பட்ட இழிவை எனக்குத் தரவில்லை.நான் சத்தியத்திற்காக வெளியேறிய காரணத்தால் இது பற்றி விவாதம் செய்யும் மன உறுதி எனக்குள்ளது.
தவ்ஹீத் ஜமாத்தில் உள்ள அதிகமான மக்கள் என் விளக்கத்தை அவசரமாக எதிர்பார்க்கிறார்கள். சரியான விளக்கம் தரப்பட்டால் கண்டிப்பாக அவர்களும் உலக முஸ்லிம்களை முஷ்ரிக்குகளாக ஆக்கும் இந்த வழிகேட்டிலிருந்து நிச்சயம் மீளுவார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
எனவே நான் சகோதரர் பீஜே அவர்களை விவாதத்திற்கு அழைக்கிறேன். அவருக்கு இயலாவிட்டால் தவ்ஹீத் ஜமாத்தில் உள்ள மற்ற தாயிக்களை இது பற்றி விவாதம் செய்ய அழைக்கிறேன்.
இந்த விவாதம் தெருச்சண்டையைப் போன்றில்லாமல் வெறுமனே கருத்துப்பரிமாற்றமாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஒரே நிபந்தனை. தவ்ஹீத் ஜமாத் மோதல் போக்கையும் தனிநபர் தாக்குதல்களையும் கைவிட்டு அழகிய முறையில் என்னுடைன் விவாதம் செய்ய முன்வர வேண்டும்.
தவ்ஹீத் ஜமாத்தில் சையது இப்ராஹீமைத் தவிர்த்து மற்ற யார் வேண்டுமானாலும் என்னை இதற்காக தொடர்பு கொள்ளலாம். இயக்கப் பற்றை ஒதுக்கி வைத்துவிட்டு மார்க்கப்பற்றுடன் சிந்திக்குமாறு சகோதரர்களை அன்பாய் கேட்டக் கொள்கிறேன்.
முடியல்ல.... பாவம் PJ, சூனியம் பலிக்குதோ இல்லையோ, மனுஷன் தற்கொலை செஞ்சுகொள்ள வேண்டிய நிலைமை
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteAllahuakber
ReplyDeleteஆமா இவங்களுக்குள்ள என்ன பிரச்சினை? ஒண்ணுமே புரிய மாட்டேங்குதே.
ReplyDeleteயாருக்காக, இது யாருக்காக, இந்த TNTJ, சொந்த TNTJ, கனவு சூனியம் கலைந்த TNTJ, யாருக்காக, இது யாருக்காக
ReplyDeleteபாக்கரே போ........., அப்பாஸே வா.......
விவாதம் என்னும் தூது வந்தது, அது அப்பாஸ் என்னும் வடிவில் வந்தது, எனது வாரிசாக நான் நினைத்தது, இன்று சவாலாக மாறிவிட்டது...
இது சூப்பர் பாஸ்.
யாரோ TNTJ க்கு சூனியம் வெச்சிட்டாங்க போல... அதான் இப்படி எல்லாம் நடக்குதாக்கும்
ReplyDeleteWhat a joke.. But sirippu taan varale
ReplyDeleteஹாஹா நல்ல சிரிப்பு காட்டுறாங்க அப்பாஸ் அலியின் முரண் பாட்டுக்கு அடிப்படை உறுப்பினர் கூட அதிகம்தான்
ReplyDeleteAdutha matha thinar nammai paathu sirukkum padi vaithuvidathirgal ...tntj sunath jamath maari maari Sanda potu Islam kuri thu pesuvathu illa ... avan avan 5 kadamaigalai olunga ha pinpatrinale pothum... amaithiyin maarkathai ilivu padithividathirgal...
ReplyDeleteசபாஸ் சரியான போட்டி (வினை விதைதவன் வினையறுப்பான்)பீ j அல்ல மூத்திர j வந்தாலும் இஸ்லாத்தின் எதையும் புடுங்க முடியாது ,அழ்ழாஹ் அவனது ஜோதியை சம்பூரணப்படுத்தியே தீருவான்.
ReplyDeleteI attended Abbas Ali's lecture in Jeddah a few years ago (about sorcery or Sooniyam) he challenged PJ in absence, but Abbas Ali failed to convince the audience in other words pachcha punnaakku paetchu!
ReplyDeleteOnly, this may be directed at the small kids, to provide freedom
ReplyDeletefrom varied forms of diseases. Parents should make certain that meals these are serving with their youngsters are small interval and
filled with nutrient. It is not uncommon on an orphan to undergo various therapy sessions having a psychologist.