Sunday, February 16, 2014

ஜமாத்தே இஸ்லாமி அமீரினால் வளர்க்கப்பட்ட ஹமீர்கள் (கழுதைகள்)

வாசகர் ஆக்கம் : றஸ்மின் / ரஸ்மி




//// குட்டி மதீனாவில் அபூ ஜஹில்களினால் உருவாக்கப்பட்ட குட்டி அபூ லஹபுகள். ////

//// பொது பல சேனாவை பின்பற்றி தொழுகைக்கான தஃவா நிலையத்தை உடைத்து, தளபாடங்களுக்கு தீ வைத்து பொது மக்களை தாக்கிய ஜமாத்தே இஸ்லாமி சேனைகள். /////


ஜமாத்தே இஸ்லாமி காடையர்களின் இஸ்லாத்திற்கெதிரான வெறித்தனம்.

இன்று 14.02.2014 ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக மாதம்பையில் நடைபெற்ற ஜும்மா உரையில் கலந்து கொள்வதற்காக சென்ற வேலை ஜமாத்தே இஸ்லாமியின் ஜம்மிய்யதுத் தலபா - (தறுதலை) மாணவர் இயக்கம் ஜும்மாவை தடுப்பதற்கு முயற்சி செய்தது. இறைவனின் மாபெரும் கிருபையினால் ஜும்மா உரையும் தொழுகையும் இனிதே நிறைவு பெற்றது.

ஜும்மா தொழுகைக்கு பள்ளிக்கு செல்ல வேண்டியவர்கள் நமது தொழுகையையும், ஜும்மாவையும் நிறுத்துவதற்காக இன்று பள்ளிக்கு லீவு விட்டு விட்டு நம்மைத் தாக்க வந்தார்கள்.

ஜும்மாவில் இன்னல் ஹம்தலில்லாஹ்....... சொல்லும் போதே பச்சையாக கெட்ட வார்த்தைகளை பேசிக்கொண்டு கற்களைக் கொண்டு வீச ஆரம்பித்தவர்கள் சுமார் 12.35 ல் ஆரம்பித்தவர்கள் கிட்டத்தட்ட 2.30 வரைக்கும் தொடர்ந்து தாக்கினார்கள்.

நாம் தொழுகை நடத்திய தொழுகைக் கூடம் முற்று முழுதாக சேதமாகும் வரைக்கும் தாக்கி உடைத்தார்கள்.

ஜமாத்தே இஸ்லாமி என்ற பெயரில்.....

தலைமைத்துவப் பயிற்சி,

05 நாள், 06 மாதம் என்று இவர்கள் இளைஞர்களுக்கு கொடுக்கும் பயிற்சிகள் இவை தாம் என்பதை இன்று இந்தக் காடையர்கள் நடந்து கொண்ட முறையிலிருந்து முழு உலகும் தெரிந்திருக்கும்.

தொழுகைக்கு வந்திருந்த பெண்கள், சிறுவர்கள் என்று பாராமல் கருங்கற்களை கொண்டு தாக்கி தொழுகைக் கூடம் மற்றும் நமது சகோதரர்களின் மோட்டார் சைக்கில் போன்றவற்றை தாக்கி அழித்த இவர்கள் தான் ஒற்றுமையை நிலைநாட்ட வந்த உத்தமர்களாம்.

போலி ஒற்றுமை கோஷமிடும் குள்ள நரிகள்.

மார்க்கத்தை இறைவனும், அவனுடைய தூதரும் காட்டிய அடிப்படையில் பின்பற்றும்படி கூறும் நம்மைத் கொலை செய்யத் துடிக்கும் இந்தக் காடையர் கூட்டம், ஊரில் உள்ள அயோக்கியர்களுக்கெல்லாம் கூடாரமாக திகழ்கின்றார்கள் என்பதை இவர்களின் வார்த்தைகளைப் பார்த்தாலே புரிந்து கொள்ள முடிகின்றது.

ஒங்கும்மா....... ஒண்ட ...... நாயே... என்று ஆரம்பித்தவர்கள் கடைசி வரை இதே வார்த்தைகளை “மரணத் தருவாயில் கலிமா சொல்வதைப் போல் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்”

ஒற்றுமையாக இருக்க வேண்டும் “தவ்ஹீத் வாதிகள்” ஒற்றுமையை சீர்குழைக்கின்றார்கள் என்று “வேகமாக ஓடும் ரயிலைப் பார்த்து வெற்று வயலில் நின்று கத்தும் எறுமைகளைப் போல” கத்தியவர்கள் இன்று ஒற்றுமைக்காக பட்ட பாட்டை மாதம்பை என்ற ஓர் ஊர் மக்கள் மட்டுமல்ல உலகே அறிந்து கொண்டது.

சத்தியத்தின் எதிரிகள், சாக்கடைகளின் சங்கமம், சர்வதேச சாக்கடைகள், சமுதாய துரோகிகள், சந்தி சிரிக்கும் சக்கிளியர்கள் இவர்கள் தான் இன்று ஒற்றுமை பேசும் அமீர்களாக வலம் வருகின்றார்கள்....

இவர்கள் ஆட்சி பிடித்தால்.....

இவர்கள் கையில் ஆட்சி கிடைத்தால் மீண்டுமொரு ஹிட்லரிஸம் தான் இலங்கையில் உருவாகும் என்பதை இந்தக் காடையர் கூட்டத்தின் நடத்தையிலும் அராஜகத்திலும் இன்று தெளிவாக புரந்து கொண்டோம்.

எகிப்திய மக்கள் இந்த காடையர் கூட்டத்தின் தலைவர் முர்சியை குர்சியை விட்டும் (ஆட்சிக் கதிரை) அகற்றியதின் நியாயம் நாளும் நாளும் இவர்களின் நடத்தையில் இருந்து வெளிப்படுகின்றது.

நமது தஃவா நிலையத்தை முற்று முழுவதுமாக தகர்த்தவர்கள் அங்கிருந்த குர்ஆன் மத்ரஸா தளபாடங்களை தீ வைத்து கொழுத்தியதுடன், ஜமாத்தின் ஆவணங்களையெல்லாம் ரோட்டில் கிளித்து வீசினார்கள்.

இலங்கையில் பள்ளிகளை உடைக்கும் காவிகளை விடவும் படு பயங்கரமான அயோக்கியர்களையும், கடையர்களையும் கொண்ட ஒரு அமைப்பு தான் இந்த ஜமாத்தே இஸ்லாமி என்பவர்கள் என்பதை இன்று உலகு தெளிவாக கண்டு கொண்டது. அல்ஹம்துலில்லாஹ்.

இலங்கையில் ஷீயா மதத்தைத் பரப்பும் தொழிலை லாவகமாக முன்னெடுத்துவரும் இந்த நவீன ஷீயாக்களின் வண்டவாலங்களை தண்டாவாளம் ஏற்றி சமுதாயத்தில் இந்த துரோகிகளை அடையாளம் காட்டும் பணியை தொடந்தும் முன்னெடுப்போம்.

இன்ஷா அல்லாஹ் தொடருவோம் எமது பணியை ஓயமாட்டோம், ஓநாய்களின் ஓலங்களைக் கண்டு...




அமீர் வரைந்த கோடுகளில் ஒரு நீண்ட முடிவை நோக்கி....



எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் அதற்கு என்று ஒரு கொள்கை இருக்கும். கொள்கைதான் அந்த இயக்கத்தின் அச்சாணி. கொள்கையை விட்டுக் கொடுப்பது என்பது அவ்வியக்கத்தை விட்டுக்கொடுப்பது போன்றது என்பதால் பொதுவாக எந்த அமைப்பும் கொள்கையை விட்டுக்கொடுக்காது.

இஸ்லாத்தைப் பொருத்தவரை அதன் அடிப்படைக் கொள்கை அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நபிகளாரைப் பின்பற்றுவதே. ஜமா அதே இஸ்லாமியின் அடிப்படைக் கொள்கை " கொள்கையை விட்டுக்கொடுத்தல்" என்ற கொள்கையே. இது நாம் அவர்களின் இயக்கத்துக்குள் நுழைந்து கண்டுபிடித்த வழிகேடு அல்ல. அவர்களே பப்ளிக்காக பறைசாற்றும் ஒன்றுதான்.


கொள்கையை விட்டுக்கொடுத்தல் என்பதை சில அழகான வார்த்தைகளால் அவர்கள் சொல்வது வழக்கம். நளினமான போக்கு. விட்டுக்கொடுப்பு. மார்க்கம் என்பது நெகிழ்வுத் தன்மையானது. அடக்கமான அமைதியான பேச்சு. எதையும் கண்டுகொள்ளாமல் விடுவது. தர்க்கம் செய்யக் கூடாது. பாவம் ஒன்றைக் கண்டால் நாமும் செய்து விட்டு அவர்களின் மனம் நோகாமல் பார்த்துக்கொள்வது. ஒற்றுமையை எப்போதும் வலியுறுத்துவது. இந்த வார்த்தை பிரயோகம்தான் இவர்களின் மூல மந்திரம்.

நோகாமல் தாவா செய்ய வேண்டும். கை நீளமான லைட் கலர் சேட்டுப் போட்டு அதை வெளியில் விடவேண்டும். மறக்காமல் பாக்கெட்டில் ஒரு பேனா இருக்க வேண்டும். அனைவரையும் பிரதர் என்று கூப்பிட வேண்டும். பிடித்த கையை விடாமல் பேச வேண்டும். அதிகம் படித்து கண் கெட்டுவிட்டது என்பதைக் காட்ட ஒரு கண்ணாடி இருப்பது கூடுதல் அந்தஸ்து. இந்த அங்க அடையாளங்களை நீங்கள் யாரிடமாவது பார்த்தால் அவர் ஒரு ஜமா அதே இஸ்லாமி என்று விளங்கிக் கொள்ளுங்கள்.


சமூகத்தில் அந்தஸ்தோடும் மதிப்போடும் இருக்க விரும்புபவர்கள் எங்களோடு சேர்ந்து கொள்ளுங்கள். உங்கள் மதிப்புக்கு எந்தப் பங்கமும் வராமல் சுவனம் கூட்டிச் செல்வோம். யாருடைய பழிச்சொல்லும் ஏச்சுப்பெச்சும் அடிஉதையும் வராத வண்ணமே எமது கொள்கை உள்ளது என்று நாட்டியமாடத்தான் இந்தக் கலா பூஷனிகள் இவ்வாறு நடக்கிறார்கள்.



இவர்களின் சந்தையில் மதிப்பு மிக்க மந்திரிகள், பொறுமையுள்ள பொறியியலாளர்கள், காக்கும் வைத்தியர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், மாண்புமிகு பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியப் பெருந்தகைகள், தோல்வி காணா தொழிலதிபர்கள் ஆகியோர் வாங்கும் சரக்குத்தான் விற்கப்படும்.



யாருக்கும் புரியாத மிகநீண்ட தலைப்பிட்டு, கேள்விப்படாத வார்த்தைகளையெல்லாம் பேச்சாக்கி, பெரும் அறிஞர்களின் கூற்றையெல்லாம் சாறாகப் பிழிந்து, அரசியல் விழுமியங்களைக் கருவாக்கி, அதில் கொஞ்சம் உலக வலம் வந்து இஸ்ரேலையும் அமெரிக்காவையும் கலந்து உசுப்பேற்றி சந்தைப்படுத்தும் இவர்களின் உத்தியே தனி. எதுவும் விளங்காவிட்டாலும் அமீருக்கு என்ன அறிவு என்று அடிமட்டத் தொண்டனும், விளங்கவில்லை என்றால் மானம் போகும் என்பதால் "என்ன பேச்சி" என்று மதிக்கப்படும் மந்தைகளும் தங்களுக்குள் பேசுவதை பேச்சாளர் கேட்டுவிட்டு அடுத்த தத்துவத் தலைப்பை அப்போதே அசைபோட்டுக் கொள்வார்.



இந்த மொத்தக் கொள்கைக்கும் நேர் மாற்றாமன செயலொன்று காதலர் தினமன்று மாதம்பையில் நடந்தேறியது. காதலர் தினம் என்று நான் குறிப்பிடக் காரணம் உள்ளது. ஏனென்றால் குனிந்த தலை நிமிராமல் தலைமைத்துவ பாசறைகளில் வளர்க்கப்பட்ட பத்தரைமாற்றுத் தங்கங்கள் அன்று காதலையும் தாண்டிப் பேசிய கள்ளக் காமப் பேச்சுக்கள்தான்.


மறைக்கப்படவேண்டிய மனித உறுப்புக்கள் நாய்களினால் குரைக்கப்பட்டது. தாய்ப்பாசம் அதிகரித்து அம்மாக்கள் வார்த்தைகளினால் துகிலுரிக்கப்பட்டார்கள்.

மர்ம உறுப்பு மோதலின் வியாக்கியானம் காதைக் கிழித்தது. தூஷனக் கூர்ப்பு முற்றி புதிய இனம் ஒன்று பிரசவமானது. இன்னல் ஹம்த லில்லாஹ் என்று ஆரம்பித்த சகோதரனின் சொல்லுக்கு அ.. ஓ..சூ.. பு.. போன்ற மூவெழுத்துச் சொற்களால் நளினமாக மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.


ஜமா அதே இஸ்லாமியின் மாணவர் அணி ஒற்றுமையாக ஒவ்வொரு கல்லாக எரிந்து பள்ளியைத் தாக்கினார்கள். பள்ளியை உடைக்கும் போது மொத்த அங்கத்தவர்களும் காட்டிய ஒற்றுமை மெய் சிலிர்க்க வைத்தது.



பேசவந்த மவ்லவியை தா. அவனைக் கொல்லவேண்டும் என்று அவர்களுக்கே உரித்தான விளங்கா மொழியில் அமைதிப் போராட்டம் நடந்தது.


இலங்கையில் பல பள்ளிகள் சேனாவினால் சேதமாக்கப்பட்ட போது களத்திற்கு வராதவர்கள் பள்ளியை உடைக்க களம் இறங்கியது அவர்களின் ஒற்றுமைக் கோஷம் முஸ்லிம்களையும் தாண்டி சேனாக்களையும் இணைத்துள்ள பரந்த மனது தெரிய வந்தது.


அமைதி, அடக்கம், நளினம், விட்டுக்கொடுப்பு, ஒற்றுமை போன்ற ஜமா அதே இஸ்லாமியின் அத்தனை அகீதாக்களையும் விட்டுக்கொடுத்ததால் தான் " கொள்கையை விட்டுக் கொடுத்தலே இவர்களின் கொள்கை" என்று நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன். கொள்கையை விட்டுக் கொடுத்தல் என்ற கொள்கையில் இவர்கள் உறுதியாக இருப்பதால் இவர்கள் கொள்கைக் குன்றுகளா இல்லையா என்று இந்தக் கழுதைகளை வளர்க்கும் அமீர்தான் முடிவெடுக்கணும்.

(முக்கிய குறிப்பு :  கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரியாயாசிரியருக்கே சொந்தம், அவை "மெளலவி லீலைகள்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை. )

6 comments:

  1. romba thaan kasttappattu irukkiraar br (oh sorry iwarukku br sonna pidikkathu) sister rasmin allah iwarathu intha aakkaththai porunthikkollattum paawam thaane rasminum

    ReplyDelete
  2. ஜமாத்தே இஸ்லாமியின் முகத்திரை கழிகின்றது. இயக்கத்துக்குள்ளேயே பூட்டி மறைக்கப்படும் சிறுவர் துஸ்பிரயோகம், மாணவிகளை பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்துவது குறித்தும் எழுத வேண்டும்.

    ReplyDelete
  3. Eppadi oru page. Muslimgal thirayai kilikka muslimanawar seyatpada maattar. Kalima sonna oruwarai kewalappaduthuwadhu unmayo poiyo pawamana kariyam.. adu enda eyakkawadiyanalum sari.. eppdippatta seidihal thewaya..? Edhanal muslim samuhatthukku enna laafam !!! Thayawu seidu edupondrawatril akkarai kaattadhu samuhathukku nalladhai seiveeraha.. ewatrukkellaam Allah wkku badhil solliyaaha wendum

    ReplyDelete
  4. Masha allah Rasmin Niraiyap Perudaiya Paavankalaiyum, Dua'kalaiyum, Saafaththaiyum Paetruttaar..Ithatku Avarin Ilivaana Mouth'e Saanru In sha Allah...

    ReplyDelete
  5. தம்பி இது பள்ளியா ? அழைப்பு மையமா?... Dawa office?... இவங்க SLTJ பள்ளி அல்லாத எந்த பள்ளிளையும் தொழ மாட்டங்க.. அது பித்அத்/ ஷிர்க் இல்லாத பள்ளியாக இருந்தாலும் சரி... பள்ளில தொழாம... Dawa office ல ஜும்மா தொலுபாவர்கல்.... கேவலம்...
    நடுநிலையான நண்பர்கள் அனைவருக்கும் நான் விடுக்கும் அழைப்பு... தயவு செய்து... ஒரே ஒரு தடவை... மாதம்பக்கி வந்து பாருங்க... யாரி குழப்பம் செய்ரார்கள் என்று நன்றாக தெரியும்...

    இந்த பிரச்சினைக்கும்... ஜமாத்தே இஸ்லாமிக்கும் எந்த தொடர்பும் இல்லை....

    ReplyDelete
    Replies
    1. ஜமாத்தே இஸ்லாமி செய்றதையும் செய்துபோட்டு, பொது பல சேனா விற்கு புது வழி காட்டிக் கொடுத்துவிட்டு, இங்கே வந்து கதை பேசுறீங்க.

      நாளை நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும், இது வீடு, இது ஒபீஸ் என்று சொல்லி உடைக்கப் போகின்றார்கள். BBS கு நல்ல முன்மாதிரியை காட்டியுள்ளது ஜமாத்தே இஸ்லாமி.

      அதுல வேறு, இந்த பிரச்சினைக்கும், ஜமாத்தே இஸ்லாமிக்கும் தொடர்பே இல்லையாம். இதை நம்புவதற்கு நாட்டுல இருக்கின்றவன் எல்லாம் கேனப்பயல்கள் என்றா உங்கள் அமீர் நினைத்துக் கொண்டு இருக்கின்றார்?

      Delete