Friday, November 7, 2014

மாவனல்லை பள்ளிவாசலில் பாரிய மோதல், ஜமாத்தே இஸ்லாமி உறுப்பினர்கள் காயம் , பொலிசார் களத்தில்


வாசகர் ஆக்கம் : ஆகிப்
இன்று ஜும்மாவின் பின்னர் மாவனல்லை மஸ்ஜிதுல் ஹுதா .பெரிய பள்ளிவாசலில் பாரிய அடிதடி சண்டை ஏற்பட்டு  மிகப்பெரும் குழப்பம் ஏற்பட்டதுடன், சிலர் காயமடைந்து, பொலிசார் வந்து நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டது.

இன்றைய ஜும்மா குத்பாவை பள்ளிவாசலின் பேஷ் இமாம் மெளலவி இக்பால் நிகழ்த்தினார். தக்வா, தலைமைத்துவம், அளுத்கமை, அல்லாஹ்வின் உதவி, மஷூரா, சரியா சட்டம், அற்புதம், ஜமியத்துல் உலமா, ஹலால் சான்றிதழ், குனூத், துஆ, அமேரிக்கா, ஒற்றுமை, குரான் மொழிபெயர்ப்பு என்று ஒரு நோக்கமில்லாமல் ஒரு அச்சாறு குத்பாவை வழமை போன்று நிகழ்த்தினார், இல்லை இல்லை அலட்டினார்.


அவர் தனது அலட்டல்  குத்பாவில் முக்கியமான ஒரு விடயத்தையும் குறிப்பிட்டார். நிர்வாகத்திற்கும், தலைமைக்கும் வருபவர்கள், "எங்களுக்கு தலைமைத்துவத்தை தாருங்கள்" என்று கேட்டு வரக்கூடாது, பொறுப்பு  அவர்களைத் தேடி வர வேண்டும் என்றுதான் நபி (ஸல்) சொல்கின்றார்கள் என்று கூறினார்கள். இது தற்பொழுதைய நிர்வாகத்திற்கு கொடுக்கப்பட்ட மறைமுக அடி என்று சொல்லப்படுகின்றது.

ஏனெனில் தற்பொழுது உள்ள ஜமாத்தே இஸ்லாமி நிர்வாகம், தேர்தலில் போட்டியிட்டு, தங்களுக்கு வாக்களிக்கும்படி கேட்டுத்தான் வெற்றிபெற்றார்கள்.

ஜும்மா தொழுகை முடிந்ததும், கடந்த வெள்ளிக்கிழமை போன்று இன்றும் துஆ விற்கு முன்னதாக அறிவித்தல் வாசிக்கப்படவே, மாறாவை பகுதியை சேர்ந்தவர்களும், ஆர்மி ரிஷான் என்பவரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, அவர்களை ஜமாத்தே இஸ்லாமியின் முக்கியஸ்தர்கள் அவர்களைத் தடுக்கவே மோதல் ஆரம்பமானது.

இதே விடயத்தில் கடந்த வெள்ளிக்கிழமையும் மோதல்  இடம்பெற்றது. எனினும் இன்றைய மோதல் பாரிய மோதலாக இடம்பெற்றது.





ஆர்மி ரிஷானுடன் மோதிய ஜமாத்தே இஸ்லாமி முக்கியஸ்தர்களான இம்தியாஸ், முஹமத், பர்ஹான்,  ஆகியோர் முன்னிற்கவே, ஆத்திரமடைந்த ஊர் மக்கள்  அனைவரும் இணைந்து ஜமாத்தே இஸ்லாமியின் மீது தாக்குதல் நடாத்தினார்கள். ஜமாத்தே இஸ்லாமியினரும் மற்றவர்களை தாக்கினார்கள். கடந்த வெள்ளிக்கிழமை மோதலை வீடியோ செய்த ஜமாத்தே இஸ்லாமியின் பர்ஹான் என்பவரும் இன்று தாக்குதலில் ஈடுபட்டார்.

இதன்பொழுது இம்தியாஸ் கடும் தாக்குதலுக்கு உள்ளானார். மேலும், சாதிக் என்பவரும் காயமடைந்தார்.

இதன்பொழுது பொலிசார் வரவழைக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

கடந்த சில தினங்களாகவே மாவனல்லையில் இவ்வாறான விடயங்கள் நடப்பது குறித்து பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.


( முக்கிய குறிப்பு :  மேற்படி கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாசிரியருக்கே சொந்தம், அவை "மெளலவி லீலைகள்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை. )




9 comments:

  1. ஷியாக்கள் அல்லாஹ்வின் மாளிகையில் புகுந்து நிர்வாகம் செய்ய முற்பட்டாள் இது மட்டுமள்ள இதை விட மோசமான விளைவுகள் ஏற்படும்.

    ReplyDelete
  2. மாவனல்லை குரல்November 8, 2014 at 4:59 AM

    மாதம்பையில் போட்ட பொன்ன விளையாட்டுக்கள் எல்லாம் மாவனல்ல்லையில் சரிவராது என்பதை ஜமாத்தே இஸ்லாமி புரிந்து கொள்ள வேண்டும், இல்லை புரிய வைக்கப்படும்.

    ReplyDelete
  3. There was a bad situation at the mosque after the jumma but as the writer said பொலிசார் வந்து நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டது. Nothing happens like this. May be a wrong information brother. May god bless us with a solution..😊

    ReplyDelete
  4. பேக்கரி இம்தியாஸ், சோடா பர்ஹான் போன்ற இயக்க வெறிபிடித்த முட்டாள் பைத்தியகார கேஸ்களே ஊரில் பிரச்சினை உருவாக முக்கிய காரணம்.

    ReplyDelete
  5. சோடா பர்ஹான் பெரிய முட்டாள், அமீர் வைன் கொடுத்தால் மடையன் மாதிரி ரோட் எல்லாம் கத்தி கத்தி திரிவான். இவனுக்கு அல்லாஹ் அமீர் மாடும்தான்.

    இவன் முன்னர் கஞ்சா, சிகரட், கல்லு, கசிப்பு, குட்டி கேஸ், களவெடுப்பது என்று இருந்தவன், ஜமாத்தே இஸ்லாமியில் சேர்ந்த பின்னரும் அதே புத்திதான் வேலை செய்யிறது. இதனால் ஊருள் வீண் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

    ReplyDelete
  6. முஸ்லிம்களை காவி உடையினர் கேவலப் படுத்தினார்கள், இப்பொழுது நாங்களே எங்களை கேவலப் படுத்தி கொள்கிறோம் .யா அல்லாஹ் எங்களுக்கிடையில் ஒற்றுமையை தருவாயாக, ஆமீன்

    ReplyDelete
  7. Shame! shame!! shame!!! send all these people before a firing squad.

    ReplyDelete
  8. {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَىٰ مَا فَعَلْتُمْ نَادِمِينَ} [الحجرات : 6]

    ( 6 ) முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்

    ReplyDelete
  9. மௌலவி லீலை தேவையற்ற விடயங்களில் தலையிடுவதாக தெரிகிறது.

    அசாத் கனேதன்ன

    ReplyDelete