Wednesday, November 5, 2014

Breaking News : தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் - TNTJ இரண்டாக பிளவு

சூனியத்திற்குப் புகழ் பெற்ற PJ ஜமாத் ஆகிய TNTJ  இல் பாரிய பிளவு ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் மிக முக்கிய உறுப்பினரும், விவாதங்கள் பலவற்றில் TNTJ சார்பில் கலந்து வெளுத்து வாங்கியவருமான அப்பாஸ் அவர்கள், TNTJ  இலிருந்தும், PJ  இடமிருந்தும் வெளியேறிவிட்டதாக பகிரங்கமாக அறிவித்து இருக்கின்றார். இது பற்றிய மேலதிக விபரங்கள்......



TNTJ யின் பிரச்சாரச் செயலாளரும், முக்கிய பேச்சாளருமான அப்பாஸ், சற்று முன்னர் PJ  யை விட்டும் பிரிந்து சென்றுள்ளார்.


இலங்கையைச் சேர்ந்த முஜாஹித் பின் ரசீன், அன்ஸார் மெளலவி ஆகியோர் PJ  யை விவாதத்திற்கு அழைத்த  பொழுது PJ சார்பில் விவாதிப்பதற்காக PJ  யினாலேயே நியமிக்கப்பட்டவரே இந்த அப்பாஸ் அவார். இதிலிருந்து இவரின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம்.


அப்பாஸ் தான் ஏன் வெளியேறினேன் என்று தெளிவான அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார். இவரைத் தொடர்ந்து மேலும் பலர் வெளியேற தயாராகி வருவதாக TNTJ யின் இடைநிலை உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கின்றார்.

அப்பாஸ் வெளியேறியதைத் தொடர்ந்து TNTJ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "அப்பாஸ் அலி மீதான நடவடிக்கை குறித்து முழுவிபரங்கள் சற்று நேரத்தில் வெளியிடப்படும்"  என்று மட்டுமே குறிப்பிடப் பட்டுள்ளது. அப்பாஸ் மீது பாலியல் குற்றச்சாட்டு அவதூறு வெளியிடப்படுமா, செக்ஸ் ஓடியோ / வீடியோ வெளியிடப்படுமா அல்லது நிதிமோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்படுமா என்று இதுவரை ஊகிக்க முடியாமல் உள்ளது. ஆகவே, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை முதலில் :


அல்லாஹ்வை அஞ்சி எடுத்த முடிவு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....
அன்பான சகோதரர்களே! சில ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை குா்ஆனுக்கு முரண்படுகின்றது என்று சகோதரர் பீஜே முதலில் கூறினார். அவர் கூறியது உண்மை என உளப்பூர்வமாக நம்பி நானும் அந்த ஹதீஸ்களை மறுத்து வந்தேன். இது தொடர்பாக ஹதீஸ்கள் குா்ஆனுக்கு முரண்படுமா? என்ற நுாலையும் நான் எழுதினே். தவ்ஹீத் ஜமாத்தில் மற்றவர்களை விட இது பற்றி நான் அதிகமாக பேசியும் எழுதியும் இருக்கிறேன்.
இந்நிலையில் முன்பு முரண்பாடாக தெரிந்த பல ஹதீஸ்கள் தற்போது அவற்றுக்கும் குா்ஆனுக்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை என்ற உண்மை எனக்கு தெரியவந்தது. குா்ஆனுக்கு முரண்படுகிறது என்ற வாதத்திற்கு பின்னால் தேவையற்ற சந்தேகங்களும் அறியாமையும் சம்பந்தமில்லாமல் வசனங்களை மோதவிடும் போக்கும் காஃபிர் இதை ஏற்றுக்கொள்வானா என்ற மனநிலை மட்டுமே மறைந்துள்ளது என்பதை உணர்ந்துகொண்டேன்.
குறிப்பாக நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸ் குா்ஆனுடன் முரண்படவில்லை. அதை மறுப்பதற்கு எந்த நியாயமும் இல்லை. அது ஆதாரப்பூர்வமான நபிவழிதான். முஃதசிலாக்களையும் சகோதரர் பீஜேவையும் தவிர இஸ்லாமிய வரலாற்றில் யாரும் இந்த நபிமொழியை மறுக்கவில்லை. 2 102வது வசனத்தின் நேரடி பொருளை மாற்றி இஸ்லாமிய வரலாற்றில் இது வரை எவரும் கொடுக்காத சகோதரர் பீஜே கொடுத்த மாற்று விளக்கமும் குா்ஆனுக்கு மாற்றமாக உள்ளது.
இந்நிலையில் நான் சிஹ்ரை நம்பியவர்கள் முஷ்ரிக் என்று கூறினால் முதலில் நபி (ஸல்) அவர்களை நான் முஷ்ரிக் என்று கூறுவதாக அர்த்தம். (அவூதுமில்லாஹ்). அடுத்து சகோதரர் பீஜேவையும் இவ்விசயத்தில் அவருடைய கருத்தை ஏற்றுக்கொள்பவர்களைத் தவிர்த்து உலகில் உள்ள மற்ற முஸ்லிம்கள் அனைவரையும் முஷ்ரிக்குகள் என்று கூற வேண்டிய நிலை உள்ளது. முஃமின்களை முஷ்ரிக்குகள் என்று நான் கூறுவதை விட பெரிய வழிகேடு வேறு ஒன்றும் இருக்க முடியாது.
இந்நிலையில் இதுபற்றி நான் மக்களுக்கு தெளிவுபடுத்தாமல் மரணித்துவிட்டால் என்னுடைய மறுமைவாழ்வு கேள்விக்குறியாகிவிடும்? எனவே நான் வெட்கப்படாமல் எனக்கு சரி என்று படும் விசயத்தை பகிரங்கமாக அறிவிக்கிறேன்.
நான் சிஹ்ர் தொடர்பாக முன்பு தெரிவித்த கருத்துக்களுக்கும் ஹதீஸ்கள் குா்ஆனுக்கு முரண்படுமா? என்று எழுதிய நுாலுக்கும் இனி எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இது தொடர்பாக சில தினங்களுக்குப் பிறகு நான் எனது விளக்கத்தை இன்ஷா அல்லாஹ் வெளியிடுவேன்.

தவ்ஹீத் ஜமாத்தில் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் நாளுக்கு நாள் நியாயமின்றி மறுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. மறுப்பதற்கு முன்பு மற்ற அறிகர்கள் யாரிடமும் ஆலோசனை செய்வதில்லை. மறுத்தப் பிறகு மற்றவர்களும் மறுத்தாக வேண்டிய நிலை வருகின்றது. மறுப்பதற்கு முன்பு மற்ற அனைவரிடமும் ஆலோசனை செய்யுங்கள் என்று நான் கோரிக்கை வைத்தப் பிறகும் அதை ஏற்காமல் சமீபத்தில் அதிராம்பட்டிணத்தில் நடந்த விவாவதத்தில் சில ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை அநியாயமாக சகட்டுமேனிக்கு மறுக்கப்பட்டது.
தவ்ஹீத் ஜமாத்தில் இருந்து கொண்டு இதை உரியவா்களிடத்தில் தெரிவிக்க என்னால் இயலவில்லை. எனவே வெளியில் இருந்து இதுபற்றி பேச முடிவு செய்துள்ளேன். இது திடீரென அவசர கோலத்தில் நான் எடுத்த முடிவில்லை. பல பிரச்சனைகளை சந்தித்து பலமாதங்கள் சென்ற பிறகு இதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அனுபவத்தில் உணர்ந்த அடிப்படையில் எடுத்த முடிவாகும். யாரையும் காயப்படுத்துவது என் நோக்கமல்ல. பொறுமையுடனும் சகோதர உணர்வோடும் இந்தப் பிரச்சனையை நோக்குமாறு அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்.



TNTJ  வெளியிட்டுள்ள அறிக்கை இரண்டாவதாக :

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முக்கிய அறிவிப்பு:
நம் ஜமாஅத்தின் பேச்சாளராக இருந்த அப்பாஸ் அலி அமைப்பின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டது நிரூபணமானதால் அமைப்பின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்க்ப்படுகிறார்.
இயக்கம் தொடர்பாக இவருடன் யாரும் தொடர்புகொள்ளவேண்டாம் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்
அப்பாஸ் அலி மீதான நடவடிக்கை குறித்து முழுவிபரங்கள் சற்று நேரத்தில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்.
இப்படிக்கு
ரஹ்மத்துல்லாஹ்
பொதுச் செயலாளர்


மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெற்றால், வெளியிடப்படும்.






3 comments:

  1. WATCH THIS VIDEO FOR THE DECISSION MADE ON ABBAS ALI BY TNTJ ..

    https://www.facebook.com/video.php?v=880540688631613&set=vb.338454826173538&type=2&theater

    ReplyDelete
    Replies
    1. PJ வணங்கிகளை, PJ வணங்கிகள் என்று ஏன் சொல்லக்கூடாது? PJ வணங்கிகள் இணைவைப்பாளர்கள் என்று சொல்வதற்கு தயங்கக் கூடாது.

      Delete
    2. ஒரு விஷயத்தில் !

      இது விளங்கக்கூடாது,
      நமக்கு புரிந்துவிட கூடாது, இதை நாம் ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ளவே கூடாது, என்று கடமைக்கு படிக்கவும் பார்க்கவும் செய்தால் அங்கே உண்மை இருந்தாலும் (ஹக்) அது நமக்கு மறைக்கப்பட்டுவிடும்,
      எதிலும் நியாயம் சத்தியம் இருக்கிறதா என்ற நடுனிலையான தேடல் இருக்க வேண்டும்..!

      #இதுதான் ஒரு நல்ல முஃமீனின் வழிமுறை

      ஆகவே நண்பர்களே ! பிறந்துவிட்டோம் 60 ஆண்டு காலமோ அல்லது 70 ஆண்டு காலமோ நம் வாழ்க்கை மிக சிறிய வாழ்க்கை.

      ஒரு ஆமைகூட 400 ஆண்டுகள் வாழ்கிறது. அந்த வாழ்க்கைகூட நமக்கு கிடையாது. இதில் பாதி காலம் தூக்கத்திலேயே போய் விடுகின்றது. இருக்கும் சில ஆண்டுகளையாவது சகோதரத்துவத்துடன் எல்லோரையும் அரவணைத்து செல்வோம்

      Delete