Tuesday, November 4, 2014

திரைவிமர்சனம் : PJ நடித்த "சூனியம்" (தெளஹீத் திரைப்படம்)

வாசகர் ஆக்கம் : M.A.S.

நேயர்களுக்கு வணக்கம். நாம இன்னிக்குப் பாக்கப் போறது "சூனியம்" படத்தோட விமர்சனத்த.


ஒரே எடத்துல இருந்து உருவான இரண்டு கோஷ்டிகளுக்கு இடையில நடக்குற அதிகார, ஆணவப் போட்டியைத்தான் டைரக்டர் படமா ஆக்கியிருக்காரு. லோ பட்ஜட் படமா இருந்தாலும் அனல் பறக்கும் வார்த்தைகளால பார்வையாளர்கள மிரள வச்சிருக்காரு.

"ஏலுமெண்டா விவாதிக்க வாங்க" எங்கிற பஞ்ச் டயலாக் திரை அரங்குல கைதட்டல்கள அள்ளுது. க்ளைமாக்ஸ் காட்சிகளில் "வாங்க" என்பது இயல்பாகவே "வாடா நாயே" என்று மாறுவது நடிகர்களின் நடிப்பின் உச்ச கட்டம்.

ரெண்டு கோஷ்டிகளுமே ஒருவர ஒருவர் செமையா திட்டிக்கிறதால யாரு ஹீரோ யாரு வில்லன் என்னு சொல்லாம இழுத்தடிச்சி ரெண்டு பேரையுமே கடைசில பக்கா காமடியன்களாகக் காட்டிருக்காரு டைரக்டர்.

முக்கியமா பேஸ்புக் எங்குற சமூக வலைத்தளத்தையே ஒரு முக்கிய கரக்டரா மாத்திக் கதையைக் கொண்டு போயிருக்கிற டைரக்டருக்கு ஒரு சபாஷ். சில சமயங்கள்ல ரெண்டு கோஷ்டியுமே வாந்தி எடுக்கிற வடிகானாகவும் பேஸ்புக் எங்குற கரக்டர் படத்துல வந்து போகுது.

பெரும்பான்மை எங்குற நிஜ வில்லன் இரைய விழுங்குறதுக்கு அகோரமாக் காத்துக்கிட்டிருக்கும் கழுகு போல பாத்துக்கொண்டு இரிக்கிறத மறந்து "நீங்க என்னடா எங்கள நாசம் பண்றது?! நாங்களே எங்கள எப்புடி அடிச்சிக்கிறம்னு பாரு" அப்புடின்னு இந்த ரெண்டு கோஷ்டியும் களத்துல குதிச்சி நாறிப்போறது ரொம்பவும் நகைச்சுவையா இருக்கு.

இருந்தாலும் ஒருவர மத்தவர அசிங்க அசிங்கமா திட்டும்போது அவர சார்ந்தவங்க புனிதமான "அல்லாஹு அக்பர்" என்ற வார்த்தையச் சொல்லிக் கூச்சல் போட்டுப் பாராட்டுற மாதிரி பின்னணி இசை அமைச்சிருக்கிறது ரொம்பவும் நெருடலா இருக்கு.

வெறும் ஏச்சுப் பேச்சோட மட்டும் நின்னுராம அருவா, வேல்கம்பு, பிச்சுவா போன்ற ஆயுதங்களோட களத்துல குதிச்சி ஆளையாள் வெட்டிக் குத்தி ஒரு பெரிய சண்டைக் காட்சியே நடக்கும் என எதிர்பார்த்து ரசிகர்கள் சீட்டோட விழிம்பில உக்காந்து ஆவலோட காத்துக்கிட்டு இருக்காங்க.

டைரக்டர் பல லோகேசன்கல்ல படத்தை விதவிதமான காட்சிகளோட நகர்த்துர முறை அருமை. அதுலயும் ஸ்ரீ லங்கால வெலிகம என்ற வில்லேஜ்ல நடக்கிற அதிரடி சண்டைக் கட்சியை தத்ரூபமா அமைச்சிருக்காரு.

இந்தியாவுல இருந்தும் சிலர் இதுல சம்பந்தப் படுறதால க்ளைமாக்ஸ் சீன் அல்லது ஒரு சண்டைக் காட்சி இந்தியாவுல படமாக்கப் படுறதுக்கும் வாய்ப்பிருக்குறதாவும் ஊகிக்க முடியுது.

ரெண்டு கோஷ்டியுமே வெச்சிக்கிட்டு இருக்கிறது ஒரே ஆதார நூல்களைத்தான். இருந்தாலும் ஆளையாள் வெளக்கமில்லாதவன் என்று திட்டுறதால "சூனியம்" என்ற பெயர விட "ஞான சூனியம்" என்ற பெயர் படத்துக்கு ரொம்பப் பொருத்தம் என்று கோலிவூட் வட்டாரத்துல பேசிக்குறாங்க.

படத்தோட காட்சிகளில் ஆபாசம் இல்லைன்னாலும், பேசுற வசனங்களில் இருக்கிற கீழ்த்தரமான ஆபாசம் காரணமா "வயது வந்தவர்களுக்கு மட்டும்" னு போட்டு இருக்காங்க.

எது எப்புடியோ, படத்த சீக்கிரமா முடிக்காம இன்னம் ஒரு 7 அல்லது 8 வருஷத்துக்கு இழுத்தடிச்சி நெறையப்பேர நாறடிச்சி நெறையப்பேர நாசமாக்கி விடுவார்னு டைரக்டர எல்லாரும் எதிர்பாகிறாங்க.

சூனியம் - ஞான சூனியம்


( முக்கிய குறிப்பு :  மேற்படி கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாசிரியருக்கே சொந்தம், அவை "மெளலவி லீலைகள்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை. )





3 comments:

  1. சினிமாவிலேயே ஊறிப்போய் மழுங்கிப்போன சிந்தனையால் விமர்சனம் செய்த மரியாதைக்குரிய ரசிகர் அவர்கள் தனது நல்லறிவை !? அனைவர்க்கும் வெளிச்சம் போட்டுக் கட்டியுள்ளார்.

    முஸ்லிம் என்று தன்னைக் கூறிக் கொள்பவனுக்கு கொஞ்சமாவது அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இருக்க வேண்டும், அவனது வேதத்தை மதிக்க வேண்டும். சூனியம் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி வீர விமர்சனம் செய்திருந்தால் அனைவரும் ஆர்வத்துடன் படித்து இருப்பார்கள். சினிமா சிந்த கொண்ட மூளை மழுங்கிய சிந்தனையால் நடுநிலை நாக்குப்பூச்சியாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு விமர்சனம் செய்கிறாராம் ஹி ஹி ஹி .... உலகில் என்ன நடக்கிறது என்பதைக் கூட அறியாமல் விமர்சனம் செய்துள்ளார் மகா மரியாதையுள்ள ரசிகர்

    ஆழ்ந்த அனுதாபங்கள் ரசிகர் அவர்களே.

    ReplyDelete
    Replies
    1. இந்தக் கருத்துக்கெல்லாம் எவ்வித முன்னுரிமியும் கொடுக்க தேவையில்லை.

      ஒரு பீஜே பக்தரின் புலம்பல் இது. பீஜே தன்னோட நல்லறிவை வெளிச்சம் போட்டு காற்றாரே, அது போதாதா?

      Delete
  2. சினிமாவினால் மழுங்கடிக்கப்பட்ட மூளையால் சூனியம் உண்டா இல்லையா என்று கூட கூற வக்கில்லாமல் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து கிடக்கும் முஸ்லிம்களுக்கு கொம்பு சீவிவிடுவதை அழகான செருப்பால் அடித்து உரைக்கும்படி பதிவிட்டுள்ளார் சகோதரர். குப்புற விழுந்தாலும் மீசையில் மண்ணை தட்டி விட்டுக் கொள்வது நல்லதா?.கொம்பு சீவும் படலம் எப்போதும் பலன் தராது.சீவப்பட்ட கொம்புகள் அனைத்தும் ஒன்றானால் குத்திக் கிழித்து விடும்

    ReplyDelete