Sunday, November 2, 2014

பள்ளிவாசல் இடிந்து விழுந்தது, ஒருவர் மரணம், 3 பேர் வைத்தியசாலையில்

திருகோணமலை கணேசபுரம் பகுதியிலுள்ள பள்ளிவாசல் இடிந்து விழுந்ததில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், மேலும் மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

திருகோணமலை கணேசபுரம் பகுதியில் உள்ள கணேஷ் ஒழுங்கையில் அமைந்துள்ள பள்ளிவாசலின் பழைய கட்டிடம் ஒன்றை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் 22 வயதான முகமது சாஹிபு முகமது நவாஸ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் மூன்று பேர் காயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டிடத்தை அகற்றும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



5 comments:

  1. அல்லா எல்லா வகையிலும் மக்களை கொன்று தொலைக்கின்றார்.

    பள்ளிவாசலுக்கு போனவனையும் கொலை செய்றார்.
    அல்லாஹ்க்கு இரக்கமே இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. enna thambi inda pakkam muthala kannir vadikkiringa.kaakai kuttla kuyil nulaidhal kaakaiku theriyamala pokum

      Delete
  2. அல்லாஹ் நிகரற்ற அன்புடையவன்.
    தாய் சேய்மீது கொண்ட இரக்கத்தினை காட்டிலும்காட்டிலும் 75மடங்கு பாசம் கொண்டவன்.
    என்பதை புரிந்து கெள்லுங்கள் மாற்றுமத சகோதரரே!

    பிறந்தவரெல்லாம் ஓர் நாள் இரந்தாக வேண்டும்.
    பல்லிவாயலில் அதுவும் கட்டிட இடிபாடுகளில் மரணம் என்றால் ஷஹீதுடைய அந்தஸ்து கிடைக்கப்பெரும்.

    ReplyDelete
  3. இந்த செய்தியில் என்னதான் மௌலவி லீலை இருக்கிறது சகோ? உங்கள் கொள்கையையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டீர்க்ள் போல..

    ReplyDelete
    Replies
    1. இந்த செய்திக்கு பின்னர் வந்த சினிமா விமர்சனமும் கொள்கையை தூக்கியெறிந்த செய்தி தான். இது பற்றி எனது கருத்தை அட்மின் வெளியிடவில்லை

      அசாத் கனேதன்ன

      Delete