Friday, October 31, 2014

ஜும்மாவின் பின் ஜமாத்தே இஸ்லாமியுடன் ஊர் மக்கள் மோதல், மாவனல்லையில் சம்பவம்

வாசகர் ஆக்கம் : ஆகிப்
மாவனல்லை முக்கிய பள்ளிவாசலாக அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹுதா வில் இன்றைய ஜும்மா தொழுகையை தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் ஜமாஅதே இஸ்லாமி அமைப்பினருக்கும், ஊர் மக்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

மஸ்ஜிதுல் ஹுதா என்னும் இந்த பள்ளிவாசல் மாவனல்லை பிரதேசத்தின் முக்கிய தாய்ப் பள்ளிவாசல் ஆகும். இந்த பள்ளிவாசலின் நிர்வாக சபையினை ஜமாஅதே இஸ்லாமி கடந்த வருடம் தேர்தல் மூலம் கைப்பற்றிக் கொண்டது.

இன்றைய ஜும்மா குத்பாவை ஜமாஅதே இஸ்லாமியின் மவ்லவியான ஹுசைன் நலீமி அவர்கள் நடத்தினார்கள். அவர்கள் இஸ்லாமிய புதுவருடம், ஹிஜ்ரத், ரசூலுல்லாஹ்வின் சூரர பற்றியும் பயான் செய்தார்கள்.

இதுவரை இந்த பள்ளிவாசலில் கூட்டு துஆ தொழுகையினை தொடர்ந்து இடம்பெற்று வந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் கூட்டுதுஆ வின் முக்கியதத்துவத்தை குறைக்க ஜமாஅதே இஸ்லாமி நிர்வாகத்தால் அறிவித்தல் வழங்கப்பட்டது.


அதன் பிரகாரம் தொழுகை முடிந்து, பொது அறிவித்தல்கள் வசித்து முடிந்த பிறகுதான் கூட்டுதுஆ இடம்பெறும் என்று அறிவித்தல் விடுக்கப்பட்டது. இன்றைய ஜும்மாவின் பின்னர் இது நடைமுறை செய்ய முயற்சி செய்த பொழுது, ஊர் மக்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவிக்கவே, பள்ளிவாசலில் சண்டை ஏற்பட்டது. தவ்ஹீத் இயக்கத்தினர் ஊரை விட்டும் வேறாக பிரிந்து காட்டுப் பள்ளியில் தனியாக ஜும்மா தொழுகை செய்வதால், அவர்கள் இந்த சண்டைகளில் பங்கெடுக்க முடியவில்லை.

சென்ற வருடம் தேர்தலின் பொழுது கூட பள்ளிவாசலில் சண்டை ஏற்பட்டது. இயக்கங்கள் இஸ்லாம் பேச ஆரம்பித்த உடனேயே சண்டை வருவது ஏன் என்று புத்திஜீவிகள் கேள்வி எழுப்புகின்றனர்.


( முக்கிய குறிப்பு :  மேற்படி கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாசிரியருக்கே சொந்தம், அவை "மெளலவி லீலைகள்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை. )



11 comments:

  1. OH.My dear MUSLIMS IN SRI LANKA ,,,

    இலங்கை முஸ்லிம் சமூகம் நிம்மதியாக , சமாதானமாக, பாதுகாப்பாக வாழ வேண்டும் எனில் முதல்ல செய்ய வேண்டியது.,,,

    """"" உடனே அமுலுக்கு வரும் வகயில் இலங்கயில் உள்ள இஸ்லாம் பேசும் சகல இயக்கங்களையும் தடை செய்ய வேண்டும்......... இது சட்ட ரீதியாக செய்யப்பட வேண்டும்....முஸ்லிம்களே இந்த இயக்க வெறியர்களை தடை செய்ய நீதிமன் றம் போக வேண்டும்..""""""""

    . அதன் பின் ... சமூகத்தின் நிம்மதி நிலையாக இருக்கும் என்பதை கண்களால் காண்பீர்கள்.... ..

    -SEYLAANE-
    .

    ReplyDelete
    Replies
    1. உங்களுடன் உடன்படுகிறேன். இயக்கங்கள் வந்ததால் இஸ்லாம் வளரவில்லை, பிரிவினை, பிரச்சினை, சீரழிவு என்று எல்லாமே நாசமாகி விட்டது, ஆனால் இது இயக்க வெறியர்களின் கண்களுக்கு தெரிவதில்லை. தான் பிடித்த இயக்கம் மட்டுமே சரி என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றனர்.

      இயக்கங்களை தடை செய்ய வேண்டும்.

      Delete
  2. Br Ulahthula ninmathi ya walratha mukkiyam
    marumaila suwanam mukkiyama br

    ReplyDelete
  3. தொழுகை முடிந்து, பொது அறிவித்தல்கள் வசித்து முடிந்த பிறகுதான் கூட்டுதுஆ இடம்பெறும் என்று அறிவித்தல் விடுக்கப்பட்டது. இன்றைய ஜும்மாவின் பின்னர் இது நடைமுறை செய்ய முயற்சி செய்த பொழுது, ஊர் மக்களில் (ஆட்டோ / army) ரிஷான் என்பவர் குறிப்பாகவும் இன்னும் 4 / 5 பேர் கூச்சலிடவே மீண்டும் துஆ கேட்கப்பட்டது
    இதைதவிர இந்தக்கட்டுரயில் உள்ளது போல் எதுவும் நடைபெறவில்லை என்பது தான் உண்மை.

    ReplyDelete
    Replies
    1. தவ்ஹீத் சிங்கங்களை காட்டுக்கே அனுப்பி விட்டதன் மூலம் அல்லாஹ் நம் சமூகத்தை பாதுகாத்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

      Delete
    2. Hah haa haaa ,This is with Masjidhul hudha trustee + o(lakka)or makkal pirachchina !Not Jamaath e islami pirachina !! Antha pallila oru base immmam irukkura awaru thaan pala kulappangala wali nadathurathaa kelvi ! Awaru oru sinna kuloo thaan kudupparu wisayam nadanthurum !

      Delete
  4. Katturai aasiriyarin katpanaihale aziham... jummawin pina4 ibdha alawuku oru pirachinaiyum etpadawillai ... katturai asiriyaruku oorla sandai mooti pakanum endu knjm aasa irukuzo ennawo.... anehamana palliwayalhalil ariwithalhalai wasitha pinbu dua ozuwazu walakamaha irukinrazu karanam ariwithalhalai sewimadupazillai enbazanal...

    ReplyDelete
  5. @SEYLAANE
    எந்த இயக்கமும் தேவை இல்லை என்று கூறும் அனைவரும் , அவர்களும் "ஒரு இயக்கமும் வேண்டாம் " என்று கூறும் ஒரு இயக்கமே .... இயக்கங்களை இல்லாமலாக்க முடியாது... அல்லாஹ்வினையுன் நபியினையும் பின்பற்றும் மக்கள் யாவரும் உண்மையான இஸ்லாமிய இயக்கத்தினை சேர்த்தவர்கள் .

    -அப்துல்லாஹ்-

    ReplyDelete
    Replies
    1. அப்துல்லாஹ், "எந்த இயக்கமும் தேவை இல்லை என்று கூறும் அனைவரும் , அவர்களும் "ஒரு இயக்கமும் வேண்டாம் " என்று கூறும் ஒரு இயக்கமே"

      ஏன்னா அறிவு தம்பி?

      தம்பி, நீங்க உண்மையாவே லூஸா? இல்ல லூஸு மாதிரி நடிக்கிறீங்களா?

      இயக்கம் வேண்டாம் என்று சொல்றவர்களே ஒரு இயக்கம் என்றால், ஹராம் வேண்டாம் என்று சொல்றவங்கள் எல்லாம் ஹராம்குட்டிகளா?

      - அபூ அப்துல்லாஹ்

      Delete
    2. இயக்கம் வேண்டாம் என்று சொல்றவர்களே ஒரு இயக்கம் என்றால், ஹராம் வேண்டாம் என்று சொல்றவங்கள் எல்லாம் ஹராம்குட்டிகளா? ஹி ஹிஹி

      சூப்பர்.... Comment

      எது எப்படியோ இந்த இயக்கங்களால சமூகத்தில நலவுக்கு விட கெடுதிகள் தான் அதிகம் - இயக்கங்கள் ஒழிக ஒழிக ஒழிக

      Delete
  6. இங்கு COMMENT எழுத்தும் சகோதரர்கள் தயவு செய்து தமிழில் எழுதுங்கள்.....
    அதுக்கு இலகுவான வழி....இந்த லிங்குக்கு போய் , அதில் தமிழில் எழுதி அதை COPY பண்ணி பின்னர் இங்கு PASTE பண்ணுங்கள்.....

    http://transliteration.yahoo.com/

    இந்த LINK போனால், அதில் ஒரு WINDOW திறக்கும் .அதில் , எழுத்த வேண்டியதை ENGLISH எழுதி , SPACEBAR ஐ தட்டுங்கள் .....உடன் தமிழ் வார்த்த்தை வரும்.....
    EXAMPLE :
    அம்மா என்று எழுத , ENGLSIH இல் , AMMAA என்று டைப் பண்ணி , SPACEBAR ஐ தட்டுங்கள்..... அம்மா என்று வார்த்தை வரும்.......

    Go to this LINK......
    http://transliteration.yahoo.com/

    << SEYLAANE>>

    ReplyDelete