Thursday, October 30, 2014

மாதம்பை ஜும்மா வழக்கின் தீர்ப்பு வெளியானது : SLTJ வெற்றி; ஜமாத்தே இஸ்லாமிக்கு தோல்வி

ஜமாத்தே இஸ்லாமியினரால் மதீனா என அழைக்கப்படும் மாதம்பை நகரில், SLTJ அமைப்பினர் 5 பேருடன் ஜும்மா நடாத்த ஆரம்பித்ததை தொடர்ந்து, ஜமாத்தே இஸ்லாமியின் கிலாபத் வீரர்களால் SLTJ யின் இஸ்லாமிய நிலையம், மதரஸா என்பன தாக்கப்பட்டதுடன், ஜமாத்தே இஸ்லாமியின் பெண்கள் படையினர், மஹ்ரமாக கைக்குழந்தைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு ஜும்மா நேரம் வீதியில் இறங்கி போராடினார்கள்.


இவ்வருடம் பெப்ரவரி மாதம் நடைபெற்ற இந்த விடயங்கள் யாவரும் அறிந்ததே.

இதனைத் தொடர்ந்து, SLTJ அமைப்பினர் ஜும்மா மற்றும் மார்க்க விடயங்களில் ஈடுபடுவதை தடை செய்யக் கேட்டு ஜமாத்தே இஸ்லாமியினரால் சிலாபம் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

ஜமாத்தே இஸ்லாமியால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகள் கடந்த 7 மாதங்களாக நடைபெற்று, அதற்கான தீர்ப்பு தினம் (29.10.2014) சிலாபம் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.

SLTJ அமைப்பினர் மார்க்க விடயங்களில் ஈடுபட தடை விதிக்கும்படி கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, மத வழிபாடுகளை தடைசெய்ய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தார்.

ஜமாத்தே இஸ்லாமி சார்பில் சட்டத்தரணிகள் ஹுசைன் முஹமட் கஸ்ஸாலி, ஸுவினி பெரேரா ஆகியோரும், SLTJ சார்பில் சட்டத்தரணிகள் சிராஸ் நூர்தீன், முஹமட் மொஹிதீன், ஹிலரி பிரசன்ன ஆகியோரும் ஆஜராகி இருந்தனர். ( SLTJ சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் சூனியத்தை நம்புகின்றவர்களா என்கின்ற விடயம் தெரியவில்லை.)

நேற்றைய வழக்கில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நாளைய தினம் நடைபெறவுள்ள ஜும்மா வழமை போன்று 5 பேருடன் நடைபெறாமல், சிலாபம், கொழும்பில் இருந்து செல்லவுள்ள SLTJ முக்கிய அங்கத்தவர்களின் பங்களிப்புடன் "வெற்றி ஜூம்மா"வாக நடைபெற உள்ளதாக அறிய முடிகின்றது.

ஜமாத்தே இஸ்லாமியினரால் SLTJ அமைப்பின் பள்ளிவாசல், மதரஸா, இஸ்லாமிய நிலையம் என்பவை தாக்கி உடைக்கப்பட்டமை தொடர்பில் SLTJ அமைப்பினரால் ஜமாத்தே இஸ்லாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்னுமும் விசாரணையில் உள்ளது.




2 comments:

  1. ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டமாம்

    ReplyDelete
  2. Ithayallaam paarththuthaan matraya mathaththawarkal nammai sundi ilukka waaraarkal

    ReplyDelete