ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமியின் தலைவராக 1994 ஆம் ஆண்டு தொடக்கம் 24 வருடங்கள் அமீராக இருந்த
ஹஜ்ஜுல் அக்பர் பதவி விலகுகிறார். அவரது தம்பி ISIS மாறியது சர்ச்சையாக உள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 23 ஆம் திகதி
ஜமாத்தே இஸ்லாமியின் தேசிய மாநாடு கண்டியில் (பொல்கொல்லை) நடைபெறும் என்று
அறிவிக்கப் பட்டிருக்கிறது.
பல வருடங்கள் போட்டி இல்லாமல் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு ஆறு தடவைகள் அமீராக இருந்தவர் ஹஜ்ஜுல் அக்பர்.
ஜமாஅத்தே இஸ்லாமியில் இருந்து ஹஜ்ஜுல் அக்பரை வெளியேற்றுவதற்கான முயற்சியாக “ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் அமீராக பதவி வகிக்க முடியாது” என்று யாப்பில் புதிதாக மாற்றம் செய்யப்பட்டது. முன்னர் அப்படி ஒருபோதும் இருக்கவே இல்லை, எத்தனை தடவை வேண்டுமானாலும் ஒரே நபரே தலைவராக இருக்கலாம். அதன் அடிப்படையில் ஹஜ்ஜுல் அக்பர் ஆறு தடவைகள் அமீராக தெரிவு செய்யப்பட்டார். ஆனால் இப்பொழுது அவரை வெளியேற்ற ஜமாஅத்தே இஸ்லாமி தயாராகி விட்டது.
ஹஜ்ஜுல் அக்பரின் தம்பியான மெளலவி இப்ராஹீம் அண்மைக்காலமாக ISIS அமைப்பை சரி என்று ஏற்றுக்கொண்டு பிரச்சாரம் செய்து ஒரு கூட்டத்துடன் சென்று அதில் இணைந்து போராட முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இப்பொழுது ஹஜ்ஜுல் அக்பரின் சீட்டு கிழிக்கப்படுகின்றது. அமீராக இருந்த காலத்தில் அக்குரனையை சேர்ந்த கோடிஸ்வர பெண் ஒருவரை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்தார். மேலும் தனது மகன்களை துருக்கி நாட்டிற்கு புலமைப் பரிசிலில் அனுப்பி உயர்கல்வி வழங்கினார். இப்பொழுது அடுத்த அமீருக்கான தேவை உருவாகி விட்டது. அடுத்த அமீர் யார் என்பது குறித்து தகவல்கள் கிடைத்தல் இங்கே வெளியிடுவோம்.
No comments:
Post a Comment