ஜமாத்தே இஸ்லாமியின் தலைமைப் பதவியில் இருந்து ஹஜ்ஜுல் அக்பர் நீக்கப்படவுள்ள நிலையில், அடுத்த அமீர் யார் என்பதை தெரிவு செய்ய வேண்டிய நிலையில் அந்த இயக்கம் உள்ளது. அடுத்த அமீர் நியமிக்கப்படுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வித்தியாசமான காரணம் ஒன்றிற்காக அஷெய்க் A.C. அகார் முஹமட் இற்கு தலைமை பொறுப்பை கொடுப்பதில்லை என்று இயக்கம் தீர்மானித்து இருப்பதாக இயக்க வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
உலமா சபையில் முக்கிய பொறுப்பு வகிக்கும் A.C. அகார் முஹமட் அவர்களை எதிர்கால உலமா சபைத் தலைமைக்கு கொண்டுவருவதே ஜமாஅத்தே இஸ்லாமியின் நோக்கமாக அமைந்துள்ளதாக உள் இயக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக அவரை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைமை பொறுப்பிற்கு எக்காரணம் கொண்டும் நியமிப்பது இல்லை என்று இயக்கம் முடிவு செய்து இருக்கின்றது.
No comments:
Post a Comment