Monday, December 18, 2017

மாதர் மஜிலிஸில் மகளுக்காக நாய் பயான் பண்ணிய கிரிமினல் மரீனா


Rasmy Galle முகநூலில் இருந்து


ஆபிஸ் செல்ல ரெடியாகிக் கொண்டு காலை உணவருந்தியவண்ணம் லைட்டா முஸ்லிம் சேவைக்கு காது கொடுத்தேன். டாக்டரம்மா தனது வழமையான வசீகரக் குரலில் நாய் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடுபற்றி தெளிவுபடுத்திக் கொண்டிருந்தார். என்னடா நாய்க்கு வந்த சோதன. யாராவது ஒரு யஹூதி, நாய் ஒன்றைக் கொன்று பைத்துல் முகத்திஸில் எறிந்து விட்டானோ?
அல்லது நாய்ச் சின்னத்தில் ஏதாவது முஸ்லிம் கட்சிகள் களமிறங்கி விட்டதோ? என்று மூலையைக் கசக்கி யோசித்துக் கொண்டிருந்தேன். ஓஹ். அம்மணியின் அன்பு மகள் நாயை ஒன்றைக் கொஞ்சிக் கொண்டிருந்த புகைப்படமொன்று அம்மணியின் மகளின் கையாலேயே தனது முகநூல் பக்கத்தில் இடப்பட்டிருந்ததும் அதற்கு பலத்த விமர்சனம் வந்த்து பற்றியும் அப்பதான் நினைவுக்கு வந்தது. அடுத்த பயான் சுவராகவே கணவன்/ போய் ப்ரன்ட் கிடார் இசைக்க முஸ்லிம் மனைவி / காதலி தலை மூடாமல் ஆடி ஆடி இங்கிலீஷ் பாட்டு பாடுவது பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடாக இருக்கலாம்.



மேட்டுக் குடி வர்க்கம் மார்க்கத்தின் பெயரில் எப்படி எப்படியெல்லாம் நடுத்தர மற்றும் அடிமட்ட மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு இதனை விட வேறு என்ன வேண்டும்? நாயைக் கொஞ்சிக் கொண்டு ஒரு நடுத்தர அல்லது அடிமட்ட முஸ்லிம் பெண் முகநூலில் போட்டோ போட்டிருந்தால் இன்று என்ன நடந்திருக்கும். முஸ்லிம் சேவையில் எப்படி எப்படியெல்லாம் டாக்டரம்மா முஸ்லிம் பெண்களுக்கு ஒழுக்கம் கற்பித்திருப்பார். அப்பெண்ணுக்கு எத்தனை வசை மாறிபொழிந்திருப்பார்கள். தவக்குல் கர்மான் என்ற பெண் அரசியல் செயற்பாட்டாளர் சிங்கள பாரம்பரிய நடனக் குழுவொன்றில் சம்பந்தப்பட்டதை கீழிக் கிறித்த எமது ஏகத்துவ சகோதர்ர்கள் டாக்டரம்மா ஒரு ஸலபி என்பதனாலா கள்ள மௌனம்காக்கின்றனர்.


இப்படித்தாங்க பல மேட்டுக் குடி வர்க்கத்தினரின் தஹ்வாவின் லட்சணம். ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லடி மகளே லெவலில் தான் எல்லா உபன்னியாசங்களும் இருக்கின்றது.
சில வருடங்களுக்கு முன் நான் இட்ட பதிவொன்றும் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கின்றது. சொந்தமாக வீடு கட்ட வசதியில்லாத காரணத்தால் அரசாங்கத்தினால் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த சலுகைகளில் ஒன்றான இலகு கடன் அடிப்படையில் அமைந்த வீட்டுக்கடன்எடுப்பது பற்றி மௌலவிமார்களிடம் பத்வா கேட்டால் ஹராம்என்ற பத்வா மிகப் பயங்கரமான ஓசையில் வரும். அப்போ,மௌலவி பள்ளி கட்ட, உங்களுக்கு மாத சம்பளம் தர சல்லி தரும் இந்த ஹாஜீயாரின் நடைமுறைக் கணக்கு எல்லாம் OD யில் ஓடுதாமே. ரியல் எஸ்டேட் வணிகம் செய்வதற்கும், கார் இறக்குமதி செய்து விற்பதற்கும் இவர்களுக்கு OD பாஸ் பண்ண வங்கிகள் கியுவில் நிக்குதாமே. அப்போ இந்த ஹாஜியார்மாரின் வருமானம் ஹராம் தானேஎன்று கேட்டால் பயங்கரக் கள்ள மௌனம் தான் பதிலாக வரும்.


எங்கட ஜம்இய்யதுல் உலமா தலைவர் போற வாரது எல்லாம் ப்ளைட்ல first class யாம். சாப்பிடுற ஹோட்டல், பழகுற, பொழங்குரது எல்லாம் கொழும்பு மேட்டுக் குடிகளோடு தான். ஓடுற வாகனங்கள் எல்லாம் ஹைக்லாஸ் தான். ஆனா பாருங்க, மனிசன் மிம்பர் மேடைல ஏறினா அழுவாரு ஒரு அழுக. சுப்ஹானல்லாஹ். வீட்டிலுள்ள பொம்புளவல் எல்லாம் அதக் கேட்டு அழுவாங்க. உலகம் கொசியின் இறக்கைக்கும் சமனில்ல என்று அடிக்கடி சொல்லுவாறு. வீட்டுக்கு கஸ்த் என்று சொல்லிக் கொண்டு யாராவது ஒரு பெரிய பணக்காரனை அல்லது, டாக்டரை அழைத்து வந்து பாத்தீங்களா, இவரு பெரிய்ய்ய பிஸினஸ்மேன். எத்துன பிஸ்னஸ் ஈக்குரு தெரியுமா? அதெல்லாம் வுட்டுபோட்டு அல்லாஹ்ட பாதைல வந்திருக்காரு பாருங்கோ. என்பார்கள். இந்த மடச் சாம்பராணியும் சுபுவானல்லாஹ், அப்ப பாருங்களேஎன்று இருக்கிற தொழிலயும் விட்டு விட்டு அல்லாஹ்ட பாதைல போய் விடுவாறு. அந்த மடச் சாம்பராணிக்கு தெரியாது இந்த ஆள்ட பிஸினஸ் எல்லாம் நடாத்திச் செல்ல திறமையான முகாமையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் இவரு கொஞ்சம் ராகத்து எடுக்கத் தான் அல்லாஹ்ட பாதைல போய் இருக்கார் என்பதும். (மேட்டுக் குடியினர் எமது முஸ்லிம் சமூகத்தின் அனைத்து விவகாரங்களிலும் தமது செல்வாக்கை நுழைத்து மார்க்கத்தினை எவ்வாறெல்லாம் அவர்களுக்கு சார்பாக மாற்றியுள்ளார்கள் என்பது பற்றியும் விளக்கமான பதிவொன்றினை இட எண்ணியுள்ளேன். )


டாக்டரம்மா, நாய் ஒரு அப்பாவியான, நன்றியுள்ள பிராணி, அதனை வேட்டைக்குப் பயன்படுத்தலாம், நாய் இஸ்லாத்தின் நிலைப்பாடுகள் பற்றி எமக்கு நன்றாகவே தெரியும். உங்க மகளின் செயற்பாட்டை நியாயப்படுத்த இப்படியெல்லாம் முஸ்லிம் சேவையைப் பயன்படுத்த வேண்டாம். இருக்கிற கொஞ்ச நேர முஸ்லிம் சேவையில் பேசத் தகுதியான பலருக்கு பேச வாய்ப்பில்லாமல் இருக்கின்றார்கள். உங்களுடைய அலப்பறைகளைக் கேட்டுக் கேட்டு போதுமாகியுள்ளது.பெண்கள் மஸ்ஜிதுக்கு வருவது தொடர்பில் நாம் முகநூலில் பேசிக் கொண்டிருந்த போது இளம் பெண்கள் மஸ்ஜிதுக்கு வந்தால் பொடியன் மாருடன் பேசிக் கொண்டிருக்க வாய்ப்பு ஏற்படும். அதனால் அவர்கள் மஸ்ஷிதுக்கு போகாமல் இருப்பதே சிறந்தது என்று ஒழுக்கம் கற்பித்த உங்கள் மகள், தமது ஆண்,பெண் நண்பர்களோடு கூடிக் கூடி எடுத்த புகைப்படங்கள், ஆடல் பாடல்கள் எல்லாவற்றையும் முகநூல் பக்கத்தில் போடுவது எல்லாம் என்ன டிசைன் என்று தெரியவில்லை.மேட்டுக் குடிப் பெண்களுக்கு எதனையும் செய்யலாம், ஏனைய பெண்களுக்குத்தான் ஒழுக்க வறையறைகளா?




இவர்ளெல்லாம் எப்.பீயில எழுத மட்டும் தான் லாயக்கு. அந்தம்மா எவ்வளவு பணி செய்கின்றா? என்று ஒரு மைன்ட் வொய்ஸ் கேட்குது. நாங்களும் மிகச் சிறிய வருமானம் உழைப்பவர்களாக இருந்தாலும்,சொந்தமாக சொத்துக்கள் எவற்றையுமே கொண்டிருக்காவிட்டாலும், பல சமூக சார்ந்த நிறுவனங்களை நடாத்திக் கொண்டு அறிவாலும், உழைப்பாலும், பணத்தாலும் சமூகப் பணிகள் செய்து கொண்டுதான் இருக்கின்றோம். சில நேரம் அவை இந்த டாக்டரம்மா போன்றவர்கள் செய்யும் பணிகளை விட கனதியால் பல மடங்கு அதிகமாகும் இருக்கலாம். விமர்சனம் என்று வந்தால் அது உம்மாவாக இருந்தாலும், வாப்பாகவாக இருந்தாலும் பேசித்தான் ஆக வேண்டும்.

குறிப்பு :  மேற்படி ஆக்கத்தின் கருத்துக்கள் ஆக்கத்தை எழுதியவர்களுக்கே சொந்தம், அவை "ஜமாத்  கேம்ஸ்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை.





No comments:

Post a Comment