எனக்கு சூனியம் செய்தால் 50 லட்சம் பரிசு, சாத்திரம் சொன்னால் 60 லட்சம் பரிசு, கூட்டு துஆ இருக்கின்றது என்று ஹதீஸ் காட்டினால் 20 லட்சம் பரிசு என்று TNTJ யும், PJ யும் சவால் விட்டு வந்ததே இதுவரை காணப்பட்ட நடைமுறையாக இருந்து வந்தது.
இப்பொழுது கடலுக்கே உப்பு காட்டும் வேலையாக, PJ யை சூனிய விவாதத்திற்கு அழைத்து வந்தால் ஒரு கோடி பரிசு என்று முஸ்லிம் சமுதாயப் பேரியக்கம் என்கின்ற அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
ஒரு காலத்தில் பாதிரியார் முதல், மத்ஹபு வாதிகள், ரஷாதிகள், ஜமாலிகள், கோமாளிகள் வரை மாற்றுக் கருத்துள்ளவர்களை எல்லாம் விவாத அரங்குகளில் போட்டுப் புரட்டிப் பின்னி எடுத்து துவம்சம் செய்து விவாத உலகின் முடிசூடா மன்னராக திகழ்ந்த PJ, ஆனைக்கும் அடி சறுக்கும் என்று வாய் சறுக்கத் தொடங்கவே, தன்னை தற்காத்துக் கொள்ள, இலங்கையின் முஜாஹித் முதல் இந்தியாவின் காஸிமி வரை, யார் விவாதத்திற்கு அழைத்தாலும் ஓடி ஒழிந்துகொண்டு, அப்பாஸை அனுப்பி வந்தார்.
சில காலங்களுக்கு முன்னர் அப்பாஸ் TNTJ யிலிருந்து வெளியேறி, PJ யையே விவாதத்திற்கு அழைத்து வந்தார். எனினும் PJ அதற்கு சம்மதிக்காமல், சாக்குப் போக்கு சொல்லி வந்தார்.
இலங்கையில் இருக்கும் PJ ரசிகர் மன்றமான (Fan Club) SLTJ யின் மிக முக்கிய தலைமை பிரச்சாரகராக சில வருடங்களுக்கு முன்னர் இருந்த முஜாஹித் அவர்களும் PJ யை விட்டு பிரிந்து சென்று, PJ யை சூனிய விவாதத்திற்கு அழைத்து வருகின்றார்.
தற்பொழுது PJ யின் முன்னாள் மாணவரான அப்பாஸும், முன்னால் பிரச்சாரகரான முஜாஹித் ரசீனும் PJ யை சூனிய விவாதத்திகு அழைக்கின்றனர்.
வழமையாக விவாதம் என்றால் சிங்கம் போன்று சீறி வரும் PJ, இவர்களின் விவாத அழைப்பைக் கண்டு எலி போன்று பொந்துக்குள் ஓடி ஒழிந்து பதுங்கிக் கொண்டார். இந்த நிலையிலேயே 1 கோடி ரூபாய் சவால் வெளியாகியுள்ளது.
PJ விவாதத்திற்கு சென்று வசமாக மாட்டிக்கொண்டால், திண்ணை காலியாகிவிடும் என்பதால், "எமக்கு பணத்தாசை எல்லாம் கிடையாது, மார்க்கம்தான் முக்கியம்" என்று சொல்லி TNTJ அறிக்கை விட்டு, விவாத சவாலில் இருந்து PJ யை காப்பாற்ற முயல்வார்கள் என்று இப்பொழுதே ஊகிக்கலாம்.
இதோ, இது தொடர்பில் வெளியாகியுள்ள ஒரு நக்கல் உரையாடல்.
அப்பாவி தொண்டன் :
அண்ணே!! நீங்க ஜமாலியை சந்திச்சீங்க .. ரஷாதியை சந்திச்சீங்க .. ஏன் அகோரி, தீன் என்ற சூனியகாரர்கள் லாம் சந்திச்சீங்க. ஏன் உங்க கூடயே இருந்த அப்பாஸ் அலியை சந்திக்க வில்லை ??
பீ.ஜே :
ஜமாலி , ரஷாதி இவர்கள் கூட நான் விவாதம் செய்து எவ்வளவோ கேவலபட்டேன் என்று தெரிந்துமா... இந்த கேள்வியை கேட்கிறீங்க ?? நான் இனிமேல் விவாதம் செய்து கேவலப்படவேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன். அதிரையில் நம்ம ஜமாஅத் அடி வாங்கியதே தாங்க முடியாமல் வெளியே தலை காட்ட முடியாமல் வீட்டில் அடங்கி ஒதுங்கி கிடக்குறேன். என் கூட இருந்து , என் வண்டவாளம் எல்லாம் தெரிஞ்ச அப்பாஸ் அலி கூட நான் விவாதம் செய்ய வருவது தற்கொலைக்கு சமம்.
அப்பாவி தொண்டன் :
அண்ணே!! அப்ப அப்பாஸ் அலி TNTJ அறிஞர் ஒருவரை தானே கேட்டார் ??? நீங்க ஏன் அரபி தெரியாத சையத் இப்ராஹீமை அனுப்ப பார்தீங்க ?
பீ.ஜே:
சையத் இப்ராஹீம்க்கு அரபி தெரிய வில்லை என்றாலும், நல்ல அசிங்கமாக பேசுவதில் தேர்ச்சி பெற்றவர். அப்பாஸ் அலி, சத்தியத்தை சொன்னால் அதை முரியடிக்க நம்மால் முடியாது. அதனால் அசிங்கமாக பேசி அப்பாஸ் அலியை கேவலபடுத்த தான் சையத் இப்ராஹீமை அனுப்ப நாடுகிறோம். TNTJ அறிஞர்கள் யாராவது அனுப்பி அவர்கள் தோற்று விட்டால் என்ன செய்வது ?சையத் இப்ராஹீம் ஒரு வேலை தோற்றுவிட்டால், அவர் ஒரு அறிஞர் இல்லை என்று சொல்லி மக்களை ஏமாற்றி சமாளித்து விடலாம்.
மயிரை கட்டி மலையை இழுக்க பாக்குறோம். வந்தா மலை. போனா மயிரு தானே !!!
No comments:
Post a Comment