Wednesday, February 4, 2015

எச்சரிக்கை : முஸ்லிம்களால் பரப்ப படும் 7 தவறான செய்திகள், பொய்கள்


தேசிக்காயில் அல்லாஹ், வாழைப்பழத்தில் முஹம்மத், பராத்து ரொட்டியில் மக்காப்படம் என்று வதந்திகளையும், ஆதாரமில்லாத செய்திகளையும் பரப்பிக் கொண்டு இருந்த முஸ்லிம் சமுகத்தின் சமூக ஊடகங்கள், தற்பொழுது 7 வதந்திகளை, பொய்களை பரப்பி வருவதாக கிடைத்துள்ள செய்தி.



அஸ்ஸாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
சகோதரர்களின் கவனத்திற்கு....!!

கடந்த 10 நாட்களாக பரவும் தவறான செய்திகளின் தொகுப்பை இங்கே வழங்குகிறோம்...

1) ரியாத்தில் பாம்பு கொத்தி இறந்ததாக பரவுவது தவறான செய்தி, அவர் கத்தாரில் நெஞ்சு வலியின் காரணமாக இறந்து விட்டார்...


2. சவூதி அரேபியாவின் புதிய மன்னர் சல்மான் பொதுமக்களுடன் உம்ரா செய்வதாக வரக்கூடிய வீடியோ தவறான வீடியோ, அது 2012 ல் சல்மான் இளவரசராக இருந்த போது செய்த உம்ராவின் வீடியோ...


3. இலங்கையை சேர்ந்த முஸ்லிம் பெண்ணின் ஆபாச வீடியோவை கணவர் இணையதளத்தில் பரப்பி விட்டார் என்ற செய்தியின் பின்னணியில் நிறைய திடுக்கிடும் சம்பவம் இருக்கிறது,  அது இருவரும் இணைந்து மேற்கொண்ட தொழில், ஆகையால் அதையும் யாரும் பரப்ப வேண்டாம்.


4. சவூதி அரேபியாவில் இறந்து விட்ட மன்னர் அப்துல்லாஹ் அவர்களின் எளிமையான நல்லடக்கத்தின் காரணமாக 500 சீனர்கள் இஸ்லாத்தை தழுவியதாக வரக்கூடிய வீடியோவும் ஆதாரம் இல்லாதது, அதாவது நூற்றுக்கணக்கானோர் இஸ்லாத்தை தழுவியது உண்மையான நிகழ்வு தான், ஆனால் அது அப்துல்லாஹ்வின் மரணத்திற்கு பின்னர் நிகழ்ந்த சம்பவம் என்று சவூதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனங்கள் எதுவும் செய்தி வெளியிடவில்லை.


5. உலகின் முன்னணி பிரபலங்களுக்கு ஓட்டு போடச்சொல்லி பரவக்கூடிய தனியார் இணைய தளத்தின் வாக்கெடுப்பு போலியானது, யாரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்,


6. இங்கிலாந்தில் ஹிஜாபுக்கு எதிராக வாக்கெடுப்பு நடந்து வருகிறது, உடனே ஓட்டு போடுங்கள் என்று வரக்கூடிய தனியார் இணையதள லிங்கும் போலியானது, ஏனென்றால் அந்த வாக்கெடுப்பு 2013 ல் நடந்தது.

7. துபாயில் புராஜ் அல் கலிபாவில் தீப்பிடித்துள்ளது என்கின்ற செய்தி பொய்யானது, அது காலை  பனிப்புகாரின் புகைப்படம்.


முஸ்லிம்கள் ஒரு செய்தியை சொன்னால் அதிலே உண்மை இருக்கும் பட்சத்திலே செய்தி வெளியிட வேண்டும். அவசரப்பட்டு உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அவதூறை பரப்பி விடக்கூடாது.
ஏனென்றால் இஸ்லாம் கேள்விப்பட்டதையெல்லாம் பரப்பிவிடக்கூடாது என்று கட்டளையிட்டுள்ளது.


ஆகையால் சகோதரர்கள் அவசரப்பட்டு எதையும் பரப்பாமல் உண்மை தன்மைகளை ஆராய்ந்து செய்தி வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வஞ்சிக்கப்பட்ட சமுதாயத்தின் வாஞ்சையாகவும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமைக்குரலாகவும் ஓங்கி ஒலிக்கும்...
முகநூல் முஸ்லிம் மீடியா



1 comment:

  1. இதுல என்ன மௌலவி லீலை ஈக்கு? ஏன்ட ரஹுமானே!

    ReplyDelete