Monday, October 14, 2013

குர்ஆனை விற்று கிடைத்த காசில் மாணவர்களுக்கு ஆப்படித்த மெளலவிகள்

وَآمِنُوا بِمَا أَنزَلْتُ مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ وَلَا تَكُونُوا أَوَّلَ كَافِرٍ بِهِ ۖ وَلَا تَشْتَرُوا بِآيَاتِي  ثَمَنًا قَلِيلً وَإِيَّايَ فَاتَّقُو

இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது; நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி(ஒழுகி) வருவீர்களாக. (அல்குர்ஆன் 2:41)

اشْتَرَوْا بِآيَاتِ اللَّهِ ثَمَنًا قَلِيلًا فَصَدُّوا عَن سَبِيلِهِ ۚ إِنَّهُمْ سَاءَ مَا كَانُوا يَعْمَلُونَஅவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்பவிலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய பாதையிலிருந்து (மக்களைத்) தடுக்கிறார்கள் - நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்கள் மிகவும் கெட்டவை.  (அல்குர்ஆன் 9:9 )


அல்லாஹ் அவனுடைய வசனங்களை அற்ப விலைக்கு விற்றுவிட வேண்டாம் என்று சொல்லும் பொழுதும், மார்க்கத்தை பாதுகாப்பதாக கூறிக்கொள்ளும் மெளலவி பூசாரிக் கூட்டங்கள் வீடு வீடாகச் சென்று குர் ஆனை ஓதுகிறோம் என்று சொல்லி என்னவெல்லாம் கூத்துப் போடுகின்றார்கள் என்பதற்கு ஆதாரமாக வந்துள்ள ஒரு செய்தி கீழே தரப்படுகின்றது.


வேலியே பயிரை மேய்ந்த கதை: மாணவர்களின் பணத்தை ஏப்பமிட்ட உலமா!


குர்ஆன் தமாம் செய்யவென பிரமுகர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட முதலாம் குறிச்சி மீரா ஜீம்ஆப் பள்ளிவாசலில் இயங்கி வருகின்ற ஹிப்ழு குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கு, அந்த வீட்டுக்காரர் அன்பளிப்பாக வழங்கிய 20,000 ரூபாவில் 18,000 ரூபாவை மோசடியாக அபேஸ் செய்த இரண்டு மௌலவிகளின் செயற்பாடு பட்டவர்த்தனமாக அம்பலத்திற்கு வந்துள்ளது.


இப்பரபரப்புச் சம்பவம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காத்தான்குடியிலுள்ள வீடொன்றுக்கு குர்ஆன் ஓதித் தமாம் செய்வதற்காக முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலில் 2வது பேஷ் இமாமாக கடமையாற்றும் ஹாபிழ் மௌலவி எம்.ஏ. ஹாலித் ஹஸன் (பலாஹி)யின் ஏற்பாட்டில், 1ம் குறிச்சி பெரிய மீரா ஜும்ஆப்பள்ளிவாசல் ஹிப்ழு மத்ரஸாவில் உஸ்தாதாகக் கடமையாற்றும் ஹாபிழ் மௌலவி மபாஸ் என்பவரும், அப்பள்ளிவாசல் முஅத்தினாரும் 08 குர்ஆன் ஹிப்ழு வகுப்பு மாணவர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.


குர்ஆன் தமாம் செய்யப்பட்ட பின் குறித்த வீட்டுக்காரர் இவ்விரண்டு மௌலவிகளுக்கும், முஅத்தினாருக்கும் தலா 5000 ரூபா வீதம் 15,000 ரூபாவையும், சமூகமளித்த 8 மாணவர்களுடன் மேலதிகமாக 2 மாணவர்களுக்கும் சேர்த்து மொத்தமாக 10 மாணவர்களுக்கும் தலா 2500 ரூபா வீதம் 25,000 ரூபாவையும் (ஹதியா) அன்பளிப்பாக தனித்தனி ‘என்வலெப்’புகளில் இட்டு கையளித்துள்ளார்.


அங்கிருந்து வெளியே வந்த மெத்தைப்பள்ளிவாசல் 2வது பேஷ் இமாம் ஹாலித் ஹஸன் மௌலவி, 8 மாணவர்களிடமும் வழங்கப்பட்ட ‘என்வலெப்’புகளை அவர்களிடமிருந்து வாங்கிக் கொண்டு மத்ரஸாவுக்குச் சென்று பெற்றுக் கொள்ளுமாறு கூறினாராம்.


எனினும் 28.09.2013 அன்று குறித்த ஹிப்ழு மத்ரஸா உஸ்தாத் மபாஸ் மௌலவி மாணவர்களிடம் ‘என்வெலப்’புகளைக் கொடுத்தபோது அதற்குள் 250 ரூபா வீதமே பணம் இருந்ததாம்.


முதல்நாள் வீட்டுக்காரர் ‘என்வெலப்’புகளை கொடுத்தபோது அதனுள் 2500 ரூபா வீதம் பணம் இருந்ததாகக் கூறிய மாணவர்கள் மீதிப் பணம் எங்கே? என மபாஸ் மௌலவியிடம் வினவியதும் ‘உங்களுக்கு 250 ரூபாய் வீதம் கொடுக்கச் சொல்லி ஹாலித் ஹஸன் மௌலவி என்னிடம் தந்தார். மீதிப் பணத்தை காத்தான்குடி தீனிய்யா மத்ரஸாவுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருப்பதாக கூறினார்’ என பதிலளித்துள்ளார்.


இதனால் சந்தேகமடைந்த மாணவர்கள் தமது பெற்றோர்களிடம் சென்று இவ்விடயத்தைக் கூறினார்கள்.


பெற்றோரும் தீனிய்யா மத்ரஸா நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு, ‘ஹாலித் ஹஸன் மௌலவி உங்களின் மத்ரஸாவுக்கு அன்பளிப்பாகப் பணம் தந்தாரா?’ எனக் கேட்டபோது, அவ்வாறு யாரும் எமக்கு பணம் தரவில்லையென அவர்கள் பதிலளித்துள்ளனர்.


இதையடுத்து குர்ஆன் தமாம் செய்த வீட்டுக்காரரை அவர்கள் சந்தித்து மாணவர்களுக்கு எவ்வளவு பணம் நீங்கள் கொடுத்தீர்கள் எனக் கேட்டபோது, 8 மாணவர்கள் வந்ததாகவும், அவர்களுக்கும் வராத இரண்டு மாணவர்களுக்குமாக 2500 ரூபா வீதம் தான் அன்பளிப்பு வழங்கியதாகவும், மௌலவிமார்களுக்கும் முஅத்தனாருக்கும் 5000 ரூபா வீதம் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தாராம்.



இதனைத் தொடர்ந்து பெற்றோர் கடந்த 30ம் திகதி அதிகாலை ‘வார உரைகல்’லுடன் தொடர்பு கொண்டு இந்த நிதி மோசடி பற்றித் தெரிவித்தனர். பின்னர் பெற்றோர் தெரிவித்த எழுத்து மூலமான முறைப்பாடும் கிடைத்தது.


இத்தகவலையும், முறைப்பாட்டையும் பெற்றுக் கொண்ட ‘வார உரைகல்’ இம்முறைப்பாடு தொடர்பாக முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாசல் பிரதம நம்பிக்கையாளர் அல்ஹாஜ் றவூப் ஏ. மஜீத், செயலாளர் எம். ஐ.எம். உசனார் ஜே.பி ஆகியோருடன் தொடர்பு கொண்டு வினவியபோது, இவ்வாறான சம்பவம் ஒன்று நடைபெற்றிருப்பதாக தமது பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு எழுத்து மூலம் பெற்றோர் முறைப்பாடு தெரிவித்திருப்பதால் (01.10.2013) இன்றிரவு இஷாத் தொழுகைக்குப் பின் குறித்த மௌலவியிடம் இதுபற்றி விசாரணை செய்யவுள்ளதாகத் தெரிவித்தனர்.



தனித்துவமான முஸ்லிம் நகரம் என பிரமாதமாகப் புகழப்படுகின்ற இக்காத்தான்குடியில் உலமாக்கள் இவ்வாறான நிதி மோசடி, சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், கையெழுத்து மோசடி, வட்டிக்குப் பணம் வாங்கலாம் என பகிரங்கமாக மார்க்கத் தீhப்;பு (பத்வா) வழங்குதல் போன்ற மானக்கேடான செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவது குறித்து காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாது அசமந்தமாக இருந்து வருவதால் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையாவது இவ்வாறான விடயங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பிரமுகர்கள், பொதுமக்கள் வேண்டுகின்றனர்.


-vaarauraikal Vol: 275 Date: 04.10.2013-


( முக்கிய குறிப்பு : ட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாசிரியருக்கே சொந்தம், அவை "மெளலவி லீலைகள்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை. )

No comments:

Post a Comment