Monday, August 5, 2013

ரமளானில் தப்லீக் - தவ்ஹீத் மோதல், இதற்கும் செய்த்தான் காரணமா?

அல்லாஹ் அழகாக இறக்கி வைத்த மார்க்கத்தை, ஆளுக்கொரு இயக்கம் பிரித்து , சந்தியில் நின்று அடிதடிப் பட்டு, காபிரின் போலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்யும் வெட்கம் கெட்ட நிலைக்குக் கொண்டு சென்றது மதகுருக்களான மெளலவிகள் ஆகும். எல்லா இயக்கங்களையும் இயக்குவது மெளலவிகளே. நாங்கல்லை பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.



ஆம், தவ்ஹீத், தப்லீக் என்று முஸ்லிம்களை கேடுகெட்ட பூசாரிக் கூட்ட மெளலவிகள் பிரித்து உள்ளதனால், புனித ரமளான் மாதத்தில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.


இலங்கையின் நாங்கல்லை என்னும் சிறிய முஸ்லிம் ஊரிலும், மெளலவிகளால் அவர்களின் சொந்தத் தேவைக்காக ஊட்டப் பட்ட இயக்க வெறி தலைக்கேறி, பேயாட்டமாக தலை விரித்தாடியுள்ளது.


தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த மெளலவி பிர்தவ்ஸ் என்பவருக்கும், நாங்கல்லை தப்லீக் ஜமாஅத் அமீர் முஹம்மது கிஸார் என்பவரும், நாங்கல்லை ஜும்மா மஸ்ஜித் நிர்வாகியும், தப்லீக் ஜமாஅத் அங்கத்தவருமான நிஸ்பர் என்பவருக்கும் இடையில் அடிதடி நடைபெற்றுள்ளது.

இரண்டு தப்லீக் காரக்ளின் தாக்குதலுக்கு தவ்ஹீத் மெளலவியால் ஈடுகொடுக்க முடியவில்லை என்று அறிய வருகின்றது.

மேலும் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் கெட்ட தூசன வார்த்தைகளால் அர்ச்சனைகளும் நடைபெற்றுள்ளன. தாடியும் தொப்பியுமாக காணப்படும் தாயிகள் ரமளான் மாதத்தில் கேவலமாக செயல்பட்டுள்ளனர்.


தவ்ஹீத் ஜமாஅத் போலிஸ் முறைப்பாடு செய்ய இருப்பதாக அறிகின்றோம்.


இயக்கப் பிரிவினைகளுக்கும், மோதல்களுக்கும் காரண கர்த்தாக்கள் மதகுருமாரே என்பதில் சந்தேகமில்லை.


செய்த்தான்களுக்கு விலங்கிடப் பட்டுள்ள இந்த ரமளான் மாதத்தில் இப்படியான சம்பவங்கள் செய்த்தான் இல்லாத நிலையிலும் நடைபெற்றுள்ளன என்றால், இவர்கள் எல்லாம் செய்த்தானை விடவும் கொடியவர்கள் என்பதையே சுட்டிக் காட்டுகின்றன.

உங்களுக்கு தெரிந்த மெளலவி லீலைகளை நீங்களும் எங்களுக்கு தெரிவிக்கலாம்.

2 comments:

  1. எட்டு வருசம் மத்ரசாவில் பிச்ச சோறு திண்டவர்களை எல்லாம் மார்க்க மேதைகளாக எண்னுவது உங்கள் தவறு.
    இவர்கள் எல்லாம் பொது பள சேனாவையும் விட மோசமான பேர்வழிகள்.

    ReplyDelete