Wednesday, August 7, 2013

தலைப்பிறை மறைக்கப்பட்டதா? இலங்கையில் மர்மம், ஜமியத்துல் உலமா மெளனம், பின்னணி என்ன?

மெளலவிமார் என்று அழைக்கப்படும் மார்க்கப் புரோகிதக் கூட்டம் குறித்து பல்வேறு தகவல்களை நாம் வெளியிட்டு வருகின்றோம். இன்று புதன் மாலை பிறை காணாவிட்டாலும், சிலரின் மறைமுக அழுத்தத்தின் காரணமாக பெருநாள் கொண்டாடப்படும் என்று முதலில் ஒரு ரகசிய செய்தி கசிந்து இருந்தது, தற்பொழுது கிண்ணியாவிலிருந்து புதிய நாடகம் ஆரம்பமாகியுள்ளது.


இதனை எழுதும் நேரம், புதன்கிழமை இரவு 10.15 மணி.


சற்று முன்னர் இலங்கை ஜமியத்துல் உலமா பிறை தென்படவில்லை, வெள்ளிக்கிழமை பெருநாள் என்று அறிவித்து உள்ளது. இவ்வறிவித்தல்  ஊடகங்களிலும் வெளியாகி உள்ளது.

இது, ஏற்கனவே கசிந்த இரகசிய செய்திக்கு முரணாக உள்ளது.

இந்நிலையில் கிண்ணியாவில் தலைப்பிறை தென்பட்டதாகவும், அதனை சுமார் 20 பேர்வரை பார்த்துள்ளதாகவும் நாடு முழுவதும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போன்று புத்தளத்திலும் தலைப்பிறை தென்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




இது கிண்ணியாவில் இருந்து செயல்படும் கிண்ணியா நெட் இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தி.

lhttp://kinniya.net/2011-11-08-16-59-46/2011-11-08-17-00-45/2484-2013-08-07-14-31-14.htm

கிண்ணியாவில் ஜாவாப் பள்ளி , காக்கமுனை, ஜாமில் அஸ்கர் ஆகிய மூன்று இடத்தில் நம்பகமான சுமார் 20 பேர் பிறை காண்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொழும்பு பெரிய பள்ளி வாசளின் உத்தியோக பூர்வமான முடிவினை எதிர் பார்க்கப்படுகின்றது


(குறித்த செய்தியினை kinniya.com , kinniya.net ஆகிய இணையத்தளங்களில் காணலாம்)


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர், கிண்ணியாவில் தென்பட்ட பிறையை உறுதிப் படுத்தி, வியாழக்கிழமை பெருநாள் என்று அறிவித்து உள்ளனர். நாடு முழுவதும் உள்ள தவ்ஹீத் கூட்டங்களும், சலபி கூட்டங்களும் நாளை பெருநாள் என்று அறிவித்து விட்டன.

ஜமியத்துல் உலமா என்ன செய்யப் போகின்றது என்று தெரியவில்லை.

கிண்ணியாவில் தென்பட்ட பிறையை ஜமியத்துல் உலமா ஏன் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரியவில்லை. எவ்வித விளக்கங்களும் வழங்கப்படவில்லை.



இரண்டு ஜும்மா குத்பா வந்தால் நாட்டின் முக்கிய புள்ளிகளுக்கு நல்லதல்ல என்று சொன்ன சாத்திரம் தவறு, வெள்ளிக்கிழமை பெருநாள் வந்தால் தான் நாட்டின் முக்கிய புள்ளிகளுக்கு நல்லது என்று சாத்திரக்காரனின் கணிப்பு மாறியதால், கிண்ணியா பிறை ஜுப்பாவுக்குள் மறைக்கப் பட்டதா?

அல்லது, சஹருக்கு சாப்பிட எழும்பும் நேரம் பெருநாள் என்ற அரசியல் சப்ரைஸ் அறிவித்தல் வருமா?

எதோ ஒரு நாடகம் நடக்கின்றது என்பது மட்டும் புரிகின்றது.
ஜுப்பா போட்ட லெப்பை புரோகிதர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

உங்களுக்குத் தெரிந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


6 comments:

  1. அடேய் மவ்ளவிகலே,



    நீங்களெல்லாம் அல்லாட மார்க்கத்தை மதரசாவில படிச்சுட்டு வந்து இருக்கிறீங்களா அல்லது மதரசாவில் மாங்காக் கொட்டை சூப்பிவிட்டு கள்ள மவ்லவி செர்டிபிகேட் எடுத்துக் கொண்டு வந்தீர்களா?

    உங்களை பார்த்தால், மார்க்கம் படிச்ச மனுசர் போன்று விளங்கவில்லை.

    உங்களுக்கு மண்டைக்குள் மூளை இருக்க இல்லாட்டி வைக்கோல் இருக்கா?


    யார் உங்களை எல்லாம் மவ்லவி ஆகீனது? நீங்களெல்லாம் என்ன காரணத்துக்காக, ஏன் , எப்படி மத்ரசாவுக்கு ஓதப் போனீர்கள், முதலில் அதை மக்கள் தெரிஞ்சு கொள்ள வேண்டும்.




    எங்கள் ஊரில் ஒரு முதலாளி இருக்காரு, அவரு ஒரு ஹாஜியார். அவருக்கு மூன்று ஆம்பிள்ளை மக்கள். மூத்த ரெண்டு பெரும் நல்ல பிள்ளைகள், நல்லா படிக்கிறார்கள்.மூன்றாவது மகன் ஒரு களிசறை, அவனுக்கு சின்ன வயசுலேயே கெட்ட பழக்கங்கள் அதிகம், படிப்பு மண்டைக்கு ஏறாது, வகுப்பில் சண்டை, டீச்சர் மாரிடம் அடி வாங்குவது, வீட்டில் ஒரே சண்டை, வாப்பா சொல்றத கேக்குறதே இல்லை, பீடி அடிப்பது நிறைய பேர் கண்டும் இருக்கிறார்கள்.

    இப்பொழுது ஹாஜியார், இவனை வீட்டில் வச்சு வளர்க்க ஏலாது, படிப்பும் ஏறுதில்லை, என்னக்கு ஊர்ல தலை காட்ட எழாமல் போகும் என்று சொல்லி இப்பொழுது கண்டியில் உள்ள ஒரு மதரசாவில் கொண்டு போயி சேர்த்து இருக்கார்.


    எனக்கு இது போன்ற பல கேசுகளை தெரியும், ஒண்ணுக்கும் பிரயோசனம் இல்லாத, படிப்பு ஏறாத மக்குகள் குப்பாடிகள், பிஞ்சிலேயே பளுத்ததுகள், பீடி அடிக்கிறதுகள் எல்லாம் கொண்டுபோய் மதரசாவில் சேர்க்கும் விஷயம் எனக்கு தெரியும். எல்லா ஊர்களிலும் இதனை காணலாம். நல்ல படிக்கிற பிள்ளைகளை யாரும் மதரசாவில் சேர்ப்பது குறைவு. அதுகள் படித்து நல்ல நிலைமைக்கு வருவார்கள்.


    இப்பொழுது உங்களிடம் கேட்பது, நீங்களும் சின்ன வயசில் குப்பாடி கேசுகளாக இருந்து, ஸ்கூலில் டீச்சரிடம் அடி வாங்கி, பீடி அடித்து வாப்பாவிடம் மாட்டிப் பட்டு ஒண்ணுக்கும் சரிவராது என்று மதரசாவில் கொண்டு போயி விடப் பட்டு, மத்ரசாவிலேயும் ஒழுங்காகப் படிக்காமல் மாங்காக் கொட்டை சூப்பிவிட்டு, ஒஸ்தாதின், லெப்பையின் காலைக் கைய பிடித்து மவ்லவி செர்டிபிகேட் வாங்கிவிட்டு வந்த கேசுகளா? உண்மையை சொல்லுங்கோ, உங்களை பார்த்தல் அப்படித்தான் விளங்குது. பொய் சொல்ல வேண்டாம்.


    இப்படியே போனால் உங்களுக்கு, கல்லுச் சாமிக்கும் வித்தியாசம் தெரியாமல் போயிரும்.

    கடைசியில், மக்கள் தெளிவு பெற்று உங்களுடைய மூஞ்சியில் காறித் துப்பும் காலம் வருவதற்கு முன்னர், திருந்தப் பாருங்கள்.
    எந்தநாளும் மக்களை மடையர்களாக நினைக்க வேண்டாம். மவ்லவி என்றால், பாமர மக்கள் காலைக் கழுவி குடிச்ச காலம் மலை ஏறியாச்சு.
    இனி நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்,

    இதற்குப் பிறகாவது தவறு செய்யாமல் திருந்தப் பாருங்கள்.
    உருப்படியாக, எல்லா முஸ்லிம்களும் சந்தோசமாக பெருநாள் கொண்டாடும் படி முடிவு எடுங்கள்.
    நீங்களும் ஒரு நாளைக்கு மவ்த்தாப் போவீர்கள், இந்த நாட்டின் முஸ்லிம் மக்களை வழி கெடுத்ததற்காக, பிழையாக பெருநாள் கொண்டாட வைத்ததற்காக அல்லாஹ்விடம் தப்பவே முடியாது.
    நீங்கள் வேண்டுமென்றே எங்களை பெருநாள் விசயத்தில் சீரழித்தல் அல்லா உங்களையும் உங்கள் ச்னததிகளையும் அளித்து நாசமாக்குவானாக. ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.


    மார்க்கம் உங்களுக்கு ஒழுங்காகத் தெரியாமல் இருக்கலாம், தெரியாவிட்டால், தெரிந்தவர்களிடம் கேட்டு படியுங்கள்.
    இதற்குப் பிறகாவது திருந்தி, ஒழுங்கான உலமாக்களாக, புத்தியுள்ள மனிதர்களாக, அல்லாஹ்வுக்கு மட்டுமே பயந்தவர்களாக நடக்கப் பாருங்கள்.
    பதவி ஆசை, பணத்தாசை என்பவற்றிற்காக முஸ்லிம்களை வழி கெடுக்காதீர்கள்.

    ReplyDelete
  2. நீங்கள் கூறுவது உண்மைதான் என்றாலும் ............ இப்படியா?

    ReplyDelete
  3. pls don't right like this some mistake pls chik other people all see this mater pls chik who do this mistake in top one ok i am from india

    ReplyDelete