Fayas Abdul Razack முகநூளில் இருந்து
வெள்ளத்தில் அனைத்தையும் இழந்துபோன மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்ட செருப்புகள் பள்ளிவாசல்களில் பத்திரமாக பாதுகாக்கப்படுகின்றன. தலையணைகள் ஒன்றாகக் கட்டப்பட்டு ஓரமாக போடப்பட்டிருக்கின்றன. உலருணவு வகைகள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. பணம் சேமிப்புக்கணக்கில் சேர்ந்துக் கொண்டிருக்கின்றது. அதனை எங்ஙனம் பிரித்துக் கொடுப்பதுஎன்று புரியாணி சாப்பிட்டு ஆராய்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
நோன்பு வந்துவிட்டது.
கையில் பணமில்லாமல் தடுமாறும் அவர்களைப் பற்றிய சாதாரண முஸ்லிம் மக்களின் எண்ணம் என்னன்னு தெரியுமா?..........
'உலகம் பூரா முஸ்லிம்கள் போட்டி போட்டுக்கொண்டு நிவாரணம் சேர்த்தார்கள். நாலாபுறமிருந்தும் உதவிகள் வந்து சேர்ந்துருச்சு. அரசாங்கமும் அள்ளிக் கொடுக்குது. ஜம்மியத்துல் உலமா RCC மூலமா நல்லவிதமா நெறிபடுத்துது.
அல்ஹம்துலில்லாஹ். அவர்கள் நல்லாஇருக்கிறார்கள்' என்று மக்கள் அவர்களை சுத்தமாகவே மறந்துட்டாங்க.
நோன்புக்கு என்னசெய்வதென்று தெரியாமல் திண்டாடிக்கொண்டிருக்கும் நண்பர்கள் சிலரைக்கண்டு செய்வதறியாது தவிக்கிறேன்.
No comments:
Post a Comment