Thursday, May 26, 2016

நோன்புக்கு முன்னரே துரோகம் செய்த உலமா சபை – தேவையா இந்த நாய்வேலை?


நோன்பு ஆரம்பிப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பிறை விடயத்தில் என்ன பித்னாவை உண்டாக்குவார்களோ என்று தெரியாத நிலையில், அதற்கு முன்னோட்டமாக இப்பொழுதே முஸ்லிம்களுக்குத் துரோகம் செய்து அடிவாங்கி, மூக்கை உடைத்துக் கொண்டுள்ளது உலக்கைகள் சபை.


வைக்கோற்போர் நாய் எனப்படுவது, அந்த நாய் வைக்கோலை தானும் தின்னாது, தின்ன வருகின்ற மாட்டையும் தின்ன விடாது குரைத்து விரட்டித் தடுக்கும்.


வெள்ளம் வந்தது பல முஸ்லிம் இளைஞர்கள் பல்வேறு ரீதியில் வெள்ளத்தில் இறங்கி உதவிப் பணிகளைச் செய்தார்கள். பல்வேறு இயக்கங்கள், அமைப்புகள், சங்கங்கள், பள்ளிவாசல்கள், பல்கலைக் கழக மாணவர்கள், தனிநபர்கள் என்று பல்வேறு பட்ட தரத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு இருந்தது.


கலியாணவீடு நடந்தால் நான்தான் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும், மையத்து வீடு என்றால் நான்தான் மையத்தாக இருக்க வேண்டும் என்பது போன்று வெள்ளத்தை பயன்படுத்தி தான் மட்டும்தான் ஏகபோக ஹீரோ ஆக வேண்டும் என்று திட்டம் போட்ட அகில இலங்கை உலக்கை சபை, முஸ்லிம்களது முழு வெள்ள நிவாரணச் செயற்பாடுகளையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சில அடிவருடிகளை கொண்டு தந்திரமாக உருவாக்கிய அமைப்புத்தான் “நிவாரண ஒருங்கிணைப்பு நிலையம்” (RCC).


RCC
யை உருவாக்கிய பின்னர், முஸ்லிம்கள் யாரும் நிவாரணப் பணிகளில் தனிப்பட்ட விதமாக ஈடுபடக் கூடாது, அனைத்து பணிகளும் RCC மூலமாக மட்டுமே ஒருக்கிணைக்கப்படும், RCC அல்லாத எந்த அமைப்பிற்கும் யாரும் எந்த உதவியும் செய்யக் கூடாது என்று மிகத் தந்திரமாக அறிக்கை விட்டு மற்ற அனைத்துத் தரப்புக்களையும் முடக்கியது ஜமியத்துல் உலமா. இதனால் பல தன்னார்வ தொண்டர்கள், பல்கலைக் கழக மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளானார்கள், தமது பணிகளையும் கைவிட வேண்டிய இக்கட்டான நிலைக்கு உள்ளானார்கள்.


தமக்கென ஒரு
DATA BASE  ஐ உருவாக்க வேண்டும் என்பதற்காக, பாதிக்கப்பட்ட மக்கள் கிராம சேவகர்களிடம் பதிவு செய்ய தேவையில்லை, தங்களிடம் பதிவு செய்தால் போதும், அதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும், அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டது என்று ஒரு அறிக்கையை விட்டது RCC.


இதனை உண்மை என்று நம்பிய பல்லாயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள், கிராம சேவகரிடம் பதிவு செய்யாமல்,
RCC இடம் மட்டும் பதிவு செய்தனர். பதிவு செய்யப்பட விபரங்களை DATA BASE இற்கு update செய்வதற்காக பல முஸ்லிம் இளைஞர்கள், மாளிகாவத்தையில் அமைந்துள்ள ஜமியத்துல் உலமா காரியாலையத்தில் இரவு பகலாக இலவசமாக சேவை செய்தார்கள். தமக்கான DATA BASE ஐ உருவாக்கிய பின்னர், தற்பொழுது மானம் கெட்ட தனமாக ஜமியத்துல் உலமா அறிக்கை விட்டு பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு துரோகம் செய்துள்ளது.


கிராம சேவகர்களிடம் பதிவு செய்ய விரும்பிய மக்களை, எங்களிடம் பதிவு செய்தால் போதும், அதனை ஏற்றுக்கொள்வதாக அரசாங்கம் உடன்பட்டுள்ளது  என்று பொய் சொல்லி ஏமாற்றி அவர்களின் தகவல்களை திரட்டிய எல்லாம் முடிந்த பின்னர், தற்பொழுது ஒன்றுமே தெரியாத அப்பாவி போன்று புதிய அறிக்கை வந்துள்ளது.


“பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும் கிராம சேவகர்களிடம் பதிவு செய்ய வேண்டும்” என்பதே அந்த அறிக்கை. எதற்காக இந்தத் துரோகம்? தாங்கள் சேகரித்த தகவல்களை வைத்து யாரை ஏமாற்றி, எதைக் கொள்ளை அடிக்கப் போகின்றார்கள்? ஏற்கனவே ஹலால் சேர்டிபிக்கேட் விற்பனை செய்து ஹராத்தில் சம்பாதித்து கோடிஸ்வரன் ஆகிய ரிஸ்வி முப்தியின் தலைமையில் செயற்படும் ஜமியத்துல் உலமா,
RCC மூலம் திரட்டிய தகவலகளை எந்த அரபு நாட்டிடம் கொடுத்து கொள்ளை அடிக்கப் போகின்றது என்று தெரியவில்லை. எதற்காக பாதிக்கப்பட்ட மக்களை இப்படி ஏமாற்றி அலைக்கழிய வைக்கின்றார்கள் இந்த ஈனர்கள் என்று சந்தேகமாக உள்ளது. சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது மட்டும் உண்மை.


இப்பொழுதே துரோகப் புத்தியை வெளிக்காட்டிய ஜமியத்துல் உலமா ஈனர்கள், தலைப்பிறை, பெருநாள் ஆகியவற்றில் என்ன துரோகத்தை செய்வார்களோ?


வெள்ளம் வந்த பொழுது ரிஸ்வி முப்தி லண்டனில் என்ன செய்துகொண்டு இருந்தார், யாரிடம் பணம் பெற்றார் போன்ற விபரங்கள், தகவல்கள் கிடைக்கப் பெற்றால், விரைவில் வெளியிடப்படும்.




10 comments:

  1. ஆர்.சீ.சீ யில் பதியப்படாமல் அநேக முஸ்லிம்கள் உள்ளனர். இதில் பதியப்பட்டவர்களுக்கு உலமா சபை சேகரித்த உதவிகளும் அரசாங்க உதவிகளும் கிடைக்க பெறும். முஸ்லிம்களுக்கு இரட்டிப்பு நன்மையாகும். இதுவே எனக்கு கிடைக்க விளக்கம். வீணாக முரன்பட வேண்டபம்.

    ReplyDelete
    Replies
    1. எழுதப்பட்டுள்ளதையும், நடந்ததையும் தெளிவாக அறிந்துகொள்க.

      1. தம்மைத் தவிர யாரும் நிவாரணப் பணி செய்யவோ, நிவாரணம் சேகரிக்கவோ கூடாது என்று விதித்த தடை. (இலங்கையின் சட்டங்களுக்கு முரணானது.)

      2. கிராம சேவகரிடம் பதிவு செய்ய தேவையில்லை, தம்மிடம் பதிவு செய்தால் பொது, தமது "பதிவை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது" என்று சொல்லப்பட்ட பொய், இதனை நம்பி பலர் பதிவு செய்யாமல் விட்டமை.

      3. இப்பொழுது மீண்டும் கிராம சேவகரிடம் பதிவு செய்ய சொல்லுவது.

      எதற்காக இந்த ஏமாற்று வேலை?

      Delete
    2. ACJU didnt put any controls to others
      They said only will do together as one community

      ACJU Never said don't register with GS
      When they implement the data collection system government didn't get any decision after two or three days only government said they going to collect the details


      Dont post any comments without proper knwladge

      Who sharing like theese status inspect clearly & share
      You dont know the reality mind ur iwn business

      Delete
  2. ஒரு தலைமத்துவத்தின் கீழ்தான் செயற்பட வேண்டும் என்ற நன்நோக்கில்தான் அவ்வாறு நிவாரனத்தை இனைத்து வழங்கனார்கள். இன்னும் பல மறைமுகமான நன்மைகளும் எமது சமூகத்திற்கு உண்டு.

    ReplyDelete
  3. Admin ningal summa arai kuraiyaaha therindu kondu ulamaakkalukku thewa illada vaartheihalai upeyohikka vendaam ithu ellattukkum Allah idettil kelvi kanakku irikkiradu ningal Allah vukku payandu kollungalal summa aduttavangalai paarkaamal

    ReplyDelete
  4. Admin ningel vaarthei alandu pesungal

    ReplyDelete
  5. கலநிலவரம் தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கும் பரிதாவிகளுக்கு ஒரு தகவல்

    தகவல் திரட்டல் நடந்தது என்ன?
    RCC இன் உருவாக்கம் அவசர நிலைக்கு எம் சமூகத்துக்கு பல நலவூகளை உண்டாக்க உள்ளது.
    தன் சொந்த இடங்களை விட்டு வேறு இடங்களில் குடிபெயர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது சொந்த கிராம சேவையினுடாக பதிவூசெய்ய முடியாமையால்
    RCC இனால் அவசரமாக எடுக்கப்பட்ட தகவலின் மூலமாகவே மஸ்ஜித் வாரியாக இது வரை பல நிவாரண பணிகள் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன.
    இந்த தகவலையே அரசாங்கத்துக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்ட போதிலும் பலரது ஆவணங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதால் பலர் RCC இனால் வழங்கப்பட்ட படிவத்தில் அவர்களது அடையாள அட்டை உட்பட பல முக்கிய தகவல்களை வழங்க தவரிவிட்டனர். இந்நிலையில் இப்படிப்பட்ட தகவலை அரசாங்கத்துக்கு வழங்கினாலும் முழுமையாக எம் சமூகத்திற்கு உரிய முறையில் நிவாறணம் கிடைக்காமல் போய்விடலாம் என்ற கவலையில் அனைவரையூம் மீண்டும் கிராம சேவை பிரிவினுடாக பதிவூ செய்யூமாறு வேண்டப்பட்டுள்ளது. எனினும் பல தொண்டு நிறுவணங்களின் பங்களிப்புடன் RCC இனுடாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிவாரண பணிகளுக்கு RCC இனால் எடுக்கப்பட்ட தகவல்களே இது வரை பிரயோசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete
  6. https://www.facebook.com/udhayamtv/videos/1621680831486384/

    ReplyDelete
  7. வீண்் பிரச்்சினை வேனாாம்் சகாதரர்்களே !

    ReplyDelete
  8. https://www.facebook.com/Redbana/posts/1048233031909502

    ReplyDelete