Thursday, May 26, 2016

இஸ்ரவேல் யஹூதியின் வெள்ள உதவி, சிங்கள – முஸ்லிம் கலவரத்திற்கு திட்டமா?

இலங்கை இந்தியாவிற்குப் பொறுப்பான இஸ்ரவேலிய அதிகாரி டானியல் கார்மன் நிவாரணப் பொருட்களுடன்


வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டவுடன் பெருமளவு களத்தில் இறங்கி, தண்ணீரில் நின்று அயராது பணிகள் செய்த பெருமை முஸ்லிம் இளைஞர்களுக்கே சாரும். இதற்கு இயக்கங்கள், அமைப்புக்கள் பெயர் போட்டுக்கொண்டு புகழ் தேட நினைத்தாலும், இறைவனின் உண்மையான கூலி முஸ்லிம் இளைஞர்களுக்கே தவிர, இயக்கங்களுக்கோ அமைப்புக்களுக்கோ அல்ல.


இயக்கங்களோ, அமைப்புகளோ சொந்தமாக என்று எதுவுமே செய்யவில்லை, ஊரான் கோழியைப் பிடித்து தமது உம்மாவின் பெயரில் கத்தம் ஓதிக்கொண்டன என்பதே உண்மையாகும். ஊரில் உள்ளவர்களிடம் நிவாரணம், காசு சேர்த்தும், உம்மா வாப்பா முஸ்லிமாக பெத்துப்போட்ட முஸ்லிம் இளைஞர்களைப் பிடித்து களத்தில் இறக்கிவிட்டும் தமது இயக்கத்தின் பெயரில் படம் காட்டினார்களே தவிர, இயக்கங்கள் சொந்தமாக எதுவுமே செய்யவில்லை, ஒவ்வொரு இயக்கமும் பயன்படுத்திய வளம் என்னவென்றால் இலங்கை முஸ்லிம் பெற்றோருக்கு பிறந்த முஸ்லிம் இளைஞகர்களும், இலங்கை முஸ்லிம்களிடம் சேகரிக்கப்பட்ட பொருள் மற்றும் பணம் என்பவையே ஆகும். இவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால், இயக்கங்களின் சொந்தச் சரக்கு என்று இருப்பது, பெயர் போட்ட டீசேர்ட், கொடிகள், போட்டக்களுடன் பூச்சியங்கள் மட்டுமே.

என்னதான் இயக்க அடையாளங்களுடன் இலங்கையின் முஸ்லிம் உம்மா வாப்பாக்களுக்கு பிறந்த முஸ்லிம் இளைங்கர்களை களத்தில் இறக்கி விட்டாலும், சிங்கள மக்கள் மனங்களில் உள்ளதெல்லாம் இயக்க பெயர்கள் அல்ல, “முஸ்லிம்கள் உதவி செய்தார்கள், அவர்கள் மிகவும் நல்லவர்கள்” என்னும் நல்ல அபிப்பிராயம்தான்.

வெள்ளத்துடன் வெள்ளமாக புகழ் தேடும் படலத்தில் முஸ்லிம் குழுக்கள் ஒருபக்கம் நபவியா, தேசிக்காய் தெளஹீத் ஜமாஅத் என்று அடித்துக்கொண்டு, செய்த்தானுக்கு கல்லெறிவது போன்று சக முஸ்லிமுக்கு கல்லெறிந்து,  குப்பை விறாண்டியால் சகோதரனுக்கு தலைவாரி விட்டுக்கொண்டும், அதற்கு அறிக்கை மறுப்பு அறிக்கை என்று கட்டப்பஞ்சாயத்து பண்ணிக்கொண்டும் இருக்க, வெள்ளம் வந்ததோ வந்தது என்று கலியாண வீட்டுக்கு மாப்பிள்ளை போவது போன்று புத்தம் புது டீசேர்ட் எல்லாம் போட்டு PJ யின் தறுதலைக் குஞ்சுகள் தண்ணீரில் இறங்கி பயான் பண்ணி வீடியோ எல்லாம் எடுத்துக்கொண்டு இருக்க, தங்களை விட்டால் வேறு யாரும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என்று ஜமியத்துல் உலமா மற்ற அனைத்து அமைப்புக்களுக்கும் சர்வாதிகாரிகள் போன்று நிவாரணத் தடை போட்டு குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டு இருக்க, சத்தமே இல்லாமல் வந்து இறங்கிவிட்டான் இஸ்ரவேலிய யஹூதி.

பாலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திறந்த வெளி சிறைச்சாலை போன்று துன்பத்திலும், வறுமையிலும் இருக்க, அதைப் பற்றி கொஞ்சமும் மனிதாபிமானம் காட்டாத இஸ்ரவேலிய யஹூதி, இலங்கையில் நிவாரணப் பொருட்களுடன் வந்து இறங்கி இருக்கின்றான் என்றால், சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று அர்த்தம்.

வெள்ள நிவாரண, மீட்புப் பணிகளில் ஈடுபட்ட முஸ்லிம் இளைஞர்கள்
காரணமாக சிங்கள மக்கள் மனங்களில் இருந்த கசப்புக்கள், துவேசங்கள் நீங்கி, ஒரு நட்பான, அன்பான, நல்லபிப்பிராயங்கள் ஏற்பட்டு உள்ள நிலையில், இஸ்ரவேலிய யஹூதியின் பிரசன்னம் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

ஏற்பட்டுள்ள சிங்கள – முஸ்லிம் நல்லுறவுக்கு கத்தம் ஓதும் முயற்சியாக இது இல்லாமல் இருக்க முடியாது. பல்லாயிரம் கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்து இஸ்ரவேல் யஹூதி வருகின்றான் என்றால், மிகவும் விழிப்பாக இருக்க வேண்டியது முஸ்லிம்களின் கட்டாயமான பொறுப்பு ஆகும். மகியங்கனையில் சில முஸ்லிம் முட்டாள் இளைஞர்கள் பெளத்த கொடிகளை தீயிட்டு எரித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலை குறித்தும் ஞாபகப் படுத்திக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

எல்லாம் செய்துவிட்டோம் என்று புரியாணி திண்டவன் போன்று சந்தோசமாக தூங்காமல், முஸ்லிம்கள் மிகவும் எச்சரிக்கையாக, விழிப்பாக இருக்க வேண்டிய தருணம்.





2 comments:

  1. u have changed the photo caption with out letting it in comment.. ne oru kallappayal.....
    அடுத்தவன் குறையை தேட முதல் தனது தவறை ஒத்துக் கொள்.....

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சுட்டிக் காட்டிய தவறு திருத்தப் பட்டதால், கொமண்டை வெளியிட வேண்டிய தேவை இல்லாமல் போனது. தவறை ஏற்றுக் கொண்டதால் தான் அது திருத்தப் பட்டது.
      உங்களது நோக்கம் தவறு திருத்தப் பட வேண்டும் என்பதா? அல்லது உங்களது கொமன்ட் பிரசுரமாக வேண்டும் என்பதா?

      இங்கே விம்ரசிக்கப் படுபவர்கள் தங்களைத் திருத்திக் கொண்டால், இங்கே எழுதி வெளியிட வேண்டிய தேவையும் வராது.

      Delete