Thursday, May 26, 2016

அக்குரனை தப்லீக் ஜமாத்தின் மாபியா மஸ்ஜித் - பழிக்குப் பழி

பள்ளிவாசல் நிர்வாகத்தினால் ஒட்டப்பட்டதாக சொல்லப்படும் நோட்டீஸ்
Rafi Sharifdeen முகநூளில் இருந்து

அக்குரனை மாநகரம் அணர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் பணியை ஆரம்பித்தது.. இந்தப் பணியில் ஊரில் பல இயக்கங்கள் சிவில் அமைப்புக்கள் தனித்தனியாக ஈடுபட்டன.. அந்த அடிப்படையில் நிவாரணத்துக்காக நிதி சேகரிப்பில் அக்குரனை பள்ளிவாயில் நிர்வாக சபையும் ஈடுபட்டது..அக்குரனை வௌ்ளத்தில் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் அடுத்த ஊர்களைக் கவனத்தில் கொண்டு நிவாரணப்பணிகளில் ஈடுபட்ட விடயம் உண்மையில் பாராட்டத் தக்க விடயமாகும்..


இந்த சந்தர்ப்பத்தில் அக்குரனை நஸ்லான் என்பவரால்
ஒரு முகநூல் பதிவு இடப்படுகின்றது.. சில காலங்களுக்கு முன்னர் பள்ளிவாயில் நிர்வாக சபை பௌத்த மதகுருமார் சிலரை பள்ளிவாயிலுக்கு அழைத்த போது ஆரவக் கோளாரில் அந்த மத குருமார் பள்ளிவாயிலினுல் பிரித் ஓதிய விடயம் அநேகர் அறிந்திருப்பீர்கள்.. அதனைத் தொடர்ந்து முகநூலில் பல பதிவுகள் சரமாரியாக இடப்பட்டன.. அந்தப் பதிவுகளின் அளவுக்கு கூட நஸ்லான் இட்ட பதிவு இருக்கவில்லை...


"அணர்த்தம் ஆரம்பித்து ஒருமாதம் கூட ஆகவில்லை எனினும் பள்ளிவாயில் நிர்வாகம் சேகரித்த நிவாரணப் பொருட்கள் ஒரு மாத காலத்துக்குள் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படும்" இது தான் நஸ்லான் இட்ட பதிவு..

இந்தப் பதிவைத்
தொடர்ந்து அக்கப்போர் ஆரம்பிக்கின்றது.. மஸ்ஜிதுல் அஸ்னா நிர்வாக சபை அங்கத்தவர்கள் பொங்கி எழுகின்றனர்.. பள்ளிவாயிலுக்கு சொந்தமான கடையைக் வாடகைக்கு எடுத்து வியாபரம் பண்ணும் பய புள்ள இப்படிப் பதிவு போடலாமா என்று சீறிப்பாய்ந்த நிர்வாக சபை அங்கத்தவர்கள். நஸ்லானின் கடைக்கு வௌிப்புறமாக பெரிய ஒரு பூட்டை இட்டுவிடுகின்றனர். பள்ளிவாயில் கடைகள் பொதுவாக நிர்வாக சபையினராலேயே வாடகைக்கு பெறப்பட்டு கூடிய தொகையில் இன்னொருவருக்கு வழங்கப்படும் வழமை அங்கு இருந்து வந்ததாகச் கதைகள் உண்டென்பது வேறுவிடயம்... ( இதே மாதிரி விடயம் தொடர்பில் ஜமாத் கேம்ஸ் முன்னைய செய்தி : https://jamathgames.blogspot.com/2014/08/blog-post_21.html )

இது போதாதென்று நஸ்லானின் படம், அவர் இட்ட பதிவு, அத்துடன் சில குறிப்புகள் இணைத்து போஸ்டர் தயாரிக்ப்பட்டு தெருக்களில் ஒட்டப்பட்டுமுள்ளது..
ஒரு பொறுப்பான் நிர்வாக சபை இப்படிப்பட்ட மட்டரக வேலைகளைச் செய்ய முன்னர் நஸ்லானை அணுகி விசாரித்திருக்கலாம்.. அல்லது அவரது குடும்பத்தாரிடம் விசாரித்திருக்கலாம்.. இவை எதையும் செய்யது நஸ்லானைப் பழி தீர்த்துக் கொள்வது எந்த வகையில் நியாயமாகும்..


அக்குரனை ஜம்மியதுல் உலமா காரியாலம் அழைந்திருக்கும் மஸ்ஜிதுல் அஸ்னா பள்ளிவாயில் நிர்வாக சபையின் இந்த நடவடிக்கை ஜம்மியதுல் உலமாவின் மீதிருக்கும் நம்பிக்கையைக் குறைப்பதுற்கு காரணமாக அமையலாம்.. ஜம்மியதுல் உலமா இது குறித்து விசாரித்து பாதிக்கப் பட்ட நஸ்லானுக்கு நீதி வழங்க முன்வருமா?

( முக்கிய குறிப்பு :  மேற்படி கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாசிரியருக்கே சொந்தம், அவை "மெளலவி லீலைகள்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை. )






2 comments:

  1. Haratha parappum inayathalam. Nalla visa yang ale poda matteerhala. Evandayawadu balay mattumethan unga
    Lukku welangutha? Sootha thondina Natham than varum . Atha vida unga kaithan Kooda natham adikkum.

    ReplyDelete
    Replies
    1. தப்லீக் காரனை புடிச்சு தாடியை நக்குங்கடா.

      Delete