Wednesday, June 24, 2015

ஏறாவூரில் கட்டப்பட்டது மஸ்ஜிதா? இல்லை கிறிஸ்தவ Church ஆ?

சர்ச்சைக்குரிய பென்ச் வடிவம்
முட்டாள் முல்லாக்களின் முடிவில்லாத் தொல்லை எல்லை கடந்து தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. மார்க்கத்தை ஒரு வழி பண்ணிவிட்டுத்தான் ஓய்வோம் என்று இருக்கும் முட்டாள் முல்லாக்களுக்கு ஏற்ற விதத்தில் ஆமை வேகத்தில் பீடில் வாசிக்கின்றது உலமா சபை. ஏறாவூரில் கட்டப்பட்டது பள்ளிவாசலா, சேர்ச் ஆ, அங்கே போகலாமா என்று ஊர் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.


ஏறாவூரில் அமைந்துள்ள ஆற்றங்கரை முஹீதீன் ஜும்மா பள்ளிவாசல் சுமார் 400 வருடங்கள் பழமையானது. அந்தப் பள்ளிவாசல் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு 25.06.2015 அன்று மாலை 7.00 மணிக்கு (வெள்ளிக்கிழமை இரவு) திறந்து வைக்கப்பட உள்ளதாக நிர்வாக சபையால் அறிவிக்கப் பட்டுள்ளது.


இந்த திறப்பு விழாவை புறக்கணிக்கும் படி ஏறாவூர் உலக்கை உலமா சபையும், பள்ளிவாசல்கள் சம்மேளனமும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

அதற்காக முன்வைக்கப்பட்டுள்ள காரணங்கள் இரண்டே இரண்டு ஆகும்.

1. பள்ளிவாசலின் உள்ளே உட்கார்வதற்கான நீண்ட பென்ச் போன்ற அமைப்பில் இரண்டு வரிசைகளுக்கு கட்டுக்கள் கட்டப்பட்டுள்ளன.

2. பள்ளிவாசலின் உள்ளே இரண்டு TV க்கள் பொருத்தப் பட்டுள்ளன.


இவைதான் குற்றச்சாட்டுக்கள். இதன் காரணமாக குறித்த கட்டிடம் பள்ளிவாசல் ஆக அல்லாமல், சேர்ச் போன்று உள்ளது என்று ஊரில் கதையை பரப்பி வருகின்றனர் முல்லாக்கள்.


நாளை திறப்புவிழா முன்னால் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற ஏற்பாடாகியுள்ள இந்த நேரத்தில், சர்ச்சை வெடித்துள்ளது, இதன் பின்னியில் சிறிதளவுக்கு அலிசாஹிர் மெளலானா - ஹாபிஸ் நஸீர் அஹமட் - பஷீர் ஷேஹு தாவூத் - ஹிஸ்புல்லாஹ் என்று நான்குமுனை அரசியல் பலப் பரீட்சையும் உள்ளது.

ஆனால், விடயம் அதுவல்ல, முட்டாள் புரோகித முல்லாக்களின் மடத்தனமே முக்கிய பிரச்சினை ஆகும்.

பல்வேறு அரபு நாடுகளில் முன் வரிசைகளில் இந்த பென்ச் போன்ற அமைப்பு உள்ளது. ஆனால் சேர்ச் இல் போன்று யாரும் அதில் ஏறி உட்கார்வது இல்லை. நேரத்துடன் பள்ளிவாசலுக்கு வருகின்றவர்கள், வயதானவர்கள் கீழே உட்கார்ந்து அதில் சாய்ந்து கொண்டு குர்ஆன் ஓதுதல், திக்ர் போன்ற வணக்கங்களில் ஈடுபடுவதற்கு வசதியாக அது அமைக்கப் பட்டு இருக்கும். இது கூட தெரியாத முட்டாள் கிணற்றுத் தவளைகளான புரோகித முல்லாக்கள் இதனை ஒரு பிரச்சினையாக மாற்றி விட்டனர்.

அரபு நாட்டுப் பள்ளிவாசல்களில் பென்ச் அமைப்பு

அடுத்து பள்ளிவாசலில் இரண்டு TV கள் இருக்கின்றன என்கின்ற குற்றச்சாட்டு. இந்த மடப்பயல்கள் யாருடைய வீட்டிலும் TV இல்லையா? TV இருந்தால் என்ன? TV ஹராமா? TV யில் சன்னி லியோனின் செக்ஸ் படமா காட்டுகின்றார்கள்? இல்லை டான்சிங் ஸ்டார் ஷோ காட்டுகின்றார்களா?

ஒரு இலத்திரனியல் சாதனம் எப்படி ஹராம் ஆக முடியும் என்கின்ற சிந்தனை வேண்டாமா? பள்ளிவாசலுக்கு வருகின்றவர்கள் ஸ்மார்ட் போனை தூக்கிக் கொண்டு வருகின்றார்களே, அதையும் ஹராம் என்று சொல்ல வேண்டியதுதானே?

TV யில் ஹராமான காட்சிகளை காட்டினால்தான் ஹராம் என்கின்ற விடயம் கூட, மதரசாவில் மாங்காய்க் கொட்டை சூப்பிய முட்டாள் முல்லாக்களுக்கு புரியாமல் போய்விட்டது. ஐரோப்பாவில் இரண்டு மாடிப் பள்ளிவாசல் இருந்தால்,ஒரு மாடியில்நடக்கும் ஜும்மா உட்பட அனைத்துப் போதனைகளையும், அடுத்த மாடியில் wide screen இல் Live காட்டுவார்கள், ஆனால் அங்கே முட்டாள் முல்லாக்கள் இல்லை என்பதால், அதனை யாரும் Film தியேட்டர் என்று சொல்வது இல்லை.

இத்தனைக்கும், இதுவரை கொழும்பில் உள்ள ரிஸ்வி முப்தி தலமையிலான உலமா சபை, பலமுறை கேட்டும் பதில் எதுவும் சொல்லவே இல்லையாம்.

அவர்கள் பதில் சொல்வதற்கு, ஏறாவூர் பள்ளிவாசல் என்ன பெரிய வட்டி முதலீட்டில் இயங்கும், பில்லியன் ரூபாய் டேர்ன் ஓவர் உள்ள நிதி நிறுவனமா? பள்ளிவாசலுக்கு 400 வருட வரலாறு இருக்கின்றது என்பதால் ரிஸ்வி முப்தியின்சட்டவிரோத பிஸ்னஸ்களுக்கு என்ன லாபம்?

ஒரு ஆறு கோடி ரூபாய் ஹராமாகத்தான் கிடைக்கும் என்றாலும் கூட, ரிஸ்வி முப்தி பொட்டி படுக்கையுடன் ஏறாவூருக்கே வந்து, சுடச் சுட பத்வா சொல்லி இருப்பார், காசு கொடுக்கும் பக்கத்திற்கு சார்பாக, அத்துடன் சஹர் வரை நித்திரை கொள்ளாமல் விழித்து இருந்து ரேடியோவில் வந்தும் ஏறாவூர் பள்ளியைப் பற்றி வாய் கிழியக் கத்தி இருப்பார் லோக்கல் ரவுடி போல.

உதவாக்கரை கேஸ்களையும், காவாலிகளையும் மதரசாவிற்கு அனுப்பினால், அதுகள் அங்கே மாங்காய்க் கொட்டை சூப்பிவிட்டு, உஸ்தாதின் காலையும், தொடையையும் மஸாஜ் பண்ணி காலத்தை கழித்துவிட்டு, மெளலவி என்று சொல்லி வேடம் போட்டுக்கொண்டு கொண்டு ஊருக்கு வந்தால், இந்த மாதிரியான பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்யும்.

அல்லாஹ்வை வணங்குவதற்காக கட்டப்பட்டு, புனரமைக்கப்பட்ட ஒரு பள்ளிவாசலையே புறக்கணிக்கும்படி மக்களை கேட்கும் மண்டை காய்ந்தத நிலையில் இருக்கும் முல்லாக்களையும், உள்ளூர் உலக்கை சபையையும், சுவரில் ஓடும் பல்லிவால் சம்மேளனத்தையும் மக்கள் புறக்கணித்தது, ரமழான் மாதத்தின் உச்ச பயனை அடைந்துகொள்ள வேண்டும், அதில் குறித்த பள்ளிவாசலின் பங்கும் நிச்சயமாக இருக்கட்டும்.





2 comments:

  1. இவ்வளவு நாளும் ஜமாஅத் கேம் பொய்யர்கள் எண்டு நினைத்து இருந்தேன்.
    இப்போ பார்த்தா, மவ்லவி மார் மான்காக்கொட்டை சூப்பினது உண்மை, ஜமாஅத் கேம்ஸ் சொல்றது உண்மை எண்டு புரிஞ்சு போச்சு.

    ஏறாவூர் பாயிஸ்.

    ReplyDelete
  2. https://www.facebook.com/daoud.tharik.7/videos/1634538303274103/

    ReplyDelete