Sunday, July 21, 2013

மெளலவி லீலைகள் ஏன் எதற்காக ...........

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கப் படுகின்றது.


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹு தாலா தனனுடைய மார்க்கத்தை பிரச்சாரம் செய்ய பல இறை தூதர்களை அனுப்பினான். அதில் இறுதியானவர்களாக கண்மணி நாயகம் ரசூலுல்லாஹி சல்லால்லாஹு அலைஹிவசல்லாம் அவர்களை அனுப்பி வைத்தான்.


அனுப்பப் பட்ட ஒவ்வொரு நபிமார்களும், அல்லாஹு தாலா அவர்களுக்கு அருளிய மார்க்கத்தை மிகவும் நேரிய வழியில் சீரிய முறையில் அழகாகவும், முழுமையாகவும் பிரச்சாரம் செய்து, தங்களுடைய காலத்து மக்களுக்கு முறையாக வழங்கிச் சென்றார்கள்.

ஒவ்வொரு நபிமார்கள் இவ்வுலகத்தை விட்டும் சென்ற பின்னர், அந்த மார்க்கங்களில் மதகுருக்கள், புரோகிதர்கள் உருவாக ஆரம்பித்தனர். இவர்களால் மார்க்கங்கள் மாற்றியமைக்கப் பட்டு மாசடைந்து போயின.

தங்களது சொந்த தேவைகளுக்காக இறைவனின் மார்க்கத்தில் விளையாடி, மக்களை ஏமாற்றி, மார்க்கங்களையே மண்ணாக்கியவர்கள் இந்த மதகுருக்களாகும். இன்ஜீல் மற்றும் தவ்ராத் வேதங்கள் மதகுருமார்களால் மாற்றியமைக்கப் பட்டு, அல்லாஹ்வையே அடையாளம் மறந்த நிலைக்கு ஆக்கப் பட்டுள்ளதனை நாம் இன்று காண்கின்றோம்.

இன்று இஸ்லாத்திலும் மதகுருமாரின் அடாவடிகளும், அக்கிரம் ஆதிக்கங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த மதகுருக்கள் மெளலவிமார் என்று அழைக்கப் படுகின்றனர்.

பள்ளிவாசலிலும், ஏனைய மார்க்க சம்மந்தமான இடங்களிலும் குடியேறி, ஊரான் காசில் உடலை ஊதி வளர்த்து, உருப்படியாக தொழிலேதும் செய்யாமல், அடுத்தவனை பல்வேறு வழிகளில் ஏமாற்றி காலத்தை விடும் உல்லாசப் பிரியர்களான மெளலவிகளால் மார்க்கம் மட்டுமல்ல, மற்ற சகோதரனின் குடும்பங்கள் கூட சூறையாடப் பட்டு, சீரழிக்கப் படுகின்றன.


"இவன் மெளலவி, மார்க்கத்தை படித்தவன், இல்மை சுமந்தவன்" என்று மக்களிடம் காணப்படும் குருட்டு நம்பிக்கையின் பலவீனத்தை பயன்படுத்தியே மெளலவிகள் தங்களின் லீலைகளை அரங்கேற்றுகின்றனர்.

பல்வேறு இயக்கங்களாக, குழுக்களாக, ஜமாத்துக்களாக மக்களை பிரித்து, தங்களை தலைவர்கள் என்று ஆக்கிக் கொள்ளும் அனைவருமே மெளலவிகளாகவே உள்ளனர்.

சமூகத்திற்கு மத்தியில் போலியாக ஒற்றுமை என்று வாய் கிழிய பயான் பண்ணும் அதே நய வஞ்சக மெளலவிகள் எதோ ஒரு இயக்கத்தில் தலைவர்களாக, முக்கிய உறுப்பினர்களாக உள்ளனர்.

இன்று தமிழ் பேசும் இஸ்லாமிய உலகில் இஸ்லாத்தை நாசமாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பவர்களாக மெளலவிகளே உள்ளனர். இந்த மெளலவி புரோகித மதகுருக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கின்றனர். மக்களோ இவர்களுக்கு எதிராக பேச அஞ்சுகின்றனர்.

இஸ்லாத்தை மட்டுமல்ல, முஸ்லிம்களின் குடும்பத்தின் படுக்கையறை வரை புகுந்து குடும்பங்களை நாசமாக்குவதிலும் மெளலவிகளே முன்னணியில் உள்ளனர்.

பகலில் பப்ளிக்கில் எடுத்ததற்கெல்லாம் "அல்லாஹ், அல்லாஹ்" என்றும், இன்னும் அரபு சொற்களையும் அடிக்கடி சொல்லும் மெளலவிகளின் நாவுகள் இரவின் இருட்டில் எங்கே புகுந்து எதனை நக்குகின்றன என்பதனை மக்கள் அறிந்தும் அறியாமல் உள்ளனர்.

கெளரவம், மார்க்கம் படித்தவர் என்ற மரியாதை காரணமாக பலபேர் வாய்மூடி மெளனிகளாக இருந்து விடுகின்றனர். நீண்ட ஜுப்பா, நீண்ட தாடி, தலையில் தொப்பி, தலைப்பாகை போன்ற புறத் தோற்றத்தின் மாயங்களால் அறிவுள்ள மனிதனையும் மயக்கி விடுகின்றனர் இந்த மதகுருக்கள்.

முஸ்லிம்கள் முஸ்லிம்களாகவும், மனிதர்கள் மனிதர்களாகவும் வாழ முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணியாக இருப்பவர்களும் இந்த மெளலவி மத குருக்களே.


ஆகவே, மெளலவிகள் குறித்த உண்மைகளை அலசி ஆராயும் சத்தியக் குரலாக இந்த இணையம் ஒலிக்கும்.

9 comments:

  1. dnt forget
    hazarath sallallahu alaihi wasallam said
    "ulamaakkal en waarisuhal"

    ReplyDelete
    Replies
    1. Ulamakkal en waarisuhal as long as they follow Quran and Sunnah

      Delete
    2. Its not a SAHEEH hadees, its a LAIF hadees.

      Delete
  2. ullangalai arindhawan allah mattume.... aduththawarhalin kurayhalai alasi aarayum nee yellam oru thaqwa ulla unmayana muslima??!! indha webside il nee weliyidum aduththawarhalin kurayhal kurippaha ulamaakkalai patriya iliwaana waarththaihal unakku edhiraha qiyamath naalil saatshi koorum enbadhai marandhu widadhe....

    ReplyDelete
    Replies
    1. காலா காலமாக மவ்லவிப் பயல்களால் சமூகத்தில் பல்வேறு அநியாயங்கள் செய்யப்படுகின்றன. ஆனால், மவ்லவி என்று சொல்லி யாரும் வெளியில் சொல்லுவதில்லை. இதனை கட்டாயம் பேச வேண்டும்.

      மவ்லவிகளின் அட்டகாசங்களி அம்பலப் படுத்துங்கள்.

      Delete
  3. பொதுவாக மௌலவிகள் எல்லோரையும் சாடாது தவறு செய்பவர்களை மட்டும் தோலுரித்துக் காட்டுங்கள்
    மௌலவிமார்களில் எத்தனையோ தக்வாதாரிகளும் இல்லாமல் இல்

    ReplyDelete
  4. "ulamaakkal en waarisuhal"
    brother check hadees this is not sahih hadees

    ReplyDelete
  5. ungalukku kashta kaalam aarambam nu nenachchikonga :(

    ReplyDelete
  6. உலமாக்கள் (அனைத்து இயக்க உலமாக்கள்) இல்லை என்றால்???? நீங்கள் முழுக்குடன் தான் மரணிப்பீரோ என்னவோ???? அல்லாஹ்வே போதுமானவன்.........

    ReplyDelete