கிண்ணியாவில் கண்ட பிறையை ஜுப்பாவுக்குள் மறைத்தார் ரிஸ்வி முப்தி. அப்பொழுது தனது மொபைல் போனை OFF பண்ணிவிட்டு குறட்டை விட்டுத் தூங்கினார் ஹஜ்ஜுல் அக்பர்.
கிராண்ட்பாஸில் பள்ளிவாசல் தாக்கப்பட்டபொழுது தலைமறைவாகினார் ரிஸ்வி முப்தி, அதே நேரத்தில் 24 பேப்பர் துண்டுகளை (A 4 ) வைத்துக்கொண்டு முட்டையில் மயிர் பிடுங்கிக் கொண்டிருந்தார் ஹஜ்ஜுல் அக்பர்.
யாருக்கோ கூலிக்கு வேலை செய்யும் மார்க்கத் துரோகி ரிஸ்வி முப்தி பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் குரல்கள் எழுப்ப பட்டு வருகின்றன.
அதே நேரத்தில் தனது இயக்கத்தையே வழிகாட்ட இடுப்பில் சீவன் இல்லாமல் போனை OFF பண்ணிவிட்டு சுருண்டு படுத்தார் ஹஜ்ஜுல் அக்பர்.
பின்னர் ரிஸ்வி முப்திக்கு குழி வெட்ட திட்டம் போட்டார். உடனே .அறிக்கை விட்டார், ஆனால் அந்த அறிக்கை சூடு பிடிக்கவில்லை. உடனே அடுத்து இரண்டாவது அறிக்கை விட்டார், ரிஸ்வி முப்தி பதவி விலக வேண்டும், யூசுப் முப்தி ஜமியத்துல் உலமாவின் தலைவராக வர வேண்டும் என்றார்.
இதில் பல விடயங்கள் அம்பலமாகின. யூசுப் முப்தியையும், ரிஸ்வி முப்தியையும் ஒருவருக்கு ஒருவர் சீண்டு முடிக்க திட்டம் போட்டார் ஹஜ்ஜுல் அக்பர். அத்துடன் பல காலமாக உலமா சபைத் தலைவர் பதவியில் கண் வைத்துக் காரியமாற்றிக் கொண்டிருக்கும் அகார் முஹம்மதிட்கும் ஆப்படித்தார் ஹஜ்ஜுல் அக்பர். இதனால் அகார் முஹம்மதிட்கு பலத்த ஏமாற்றம் ஏற்பட்டது.
அகார் முஹம்மட் உடனடியாக தனது விசுவாசிகளை நாடினார். அவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். சில நளீமிகள் இரகசிய திட்டத்துடன் ஹஜ்ஜுல் அக்பருக்கு எதிராக களத்தில் இறங்கியுள்ளனர். மின்ஹாஜ் மெளலவியை தலைவராக பிரேரிப்பதன் மூலம் ஹஜ்ஜுல் அக்பருக்கு குழி வெட்டல் ஆரம்பமாகியுள்ளது. இதன் மூலம் இஸ்லாஹிகளின் எதிர்ப்பை சமாளிக்க முடியும் என்று நம்புகின்றனர்.
அத்துடன் ஜமாத்தே இஸ்லாமியின் சாதாரண அங்கத்தவர்கள் மத்தியில் கூட தற்பொழுது தலைவரின் செயலற்ற தன்மை குறித்து அதிருப்தி வெளிப்பட ஆரம்பித்துள்ளது.
ஜமியத்துல் உலமா செயலாளர் முபாரக் மெளலவிஇடமிருந்து ஹஜ்ஜுல் அக்பருக்கு பதிலடி வந்தது. "நீ வந்து எங்களுக்கு ஆலோசனை சொல்லத் தேவையில்லை, நீ உன்னுடைய வேலையைப் பார்த்துக் கொண்டு பொத்திக் கொண்டு போ, உன்னுடைய பேச்சையெல்லாம் நாம் கணக்கெடுக்க மாட்டோம்" என்பதுதான் முபாரக் மெளலவி ஹஜ்ஜுல் அக்பருக்கு சொன்ன அவமானமான எச்சரிக்கை.
அடுத்து யூசுப் முப்தி அறிக்கை வெளியிட்டார், அதில் ஹஜ்ஜுல் அக்பரைப் பார்த்து "உனக்கென்னடா தேவையில்லாத வேலை" என்பது போல கேட்கப் பட்டுள்ளது.
அதே நேரத்தில், தன்னை விடப் பொருத்தமான பலர் உள்ளனர் என்பதனை யூசுப் முதி சுட்டிக் காட்டியுள்ளார். அதாவது, ரிஸ்வி முப்தியை தூக்கி எறிந்துவிட்டு, அந்த பொருத்தமான பலரில் ஒருவரை தெரிவு செய்யுங்கள் என்ற செய்தியும் அங்கே உள்ளது.
தற்பொழுது ஹஜ்ஜுல் அக்பர் கடுமையான விமர்சனகளுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், ஹஜ்ஜுல் அக்பருக்கு ஆதரவாக கருத்துக் கூற முன்வந்தார் இஸ்மத் அலி நளீமி அவர்கள்.
ஜமாத்தே இஸ்லாமியின் அனைத்து அங்கத்தவர்களும் கைவிட்ட நிலையில், இஸ்மத் அலி நளீமி அவர்கள் தான் ஹஜ்ஜுல் அக்பரை காப்பற்ற முன்வந்த ஒரே ஒருவர். அவர் தனது இணையத்தளத்தில் " ஜ.உலமா தொடர்பான உஸ்தாத் ஹஜ்ஜூல் அக்பரின் கருத்தும் அது பற்றிய தவறான சித்தரிப்புகளும்" என்று ஒரு கட்டுரை எழுதினார்.
எனினும், ஜமாத்தே இஸ்லாமியின் முக்கிய உறுப்பினர்கள் சிலரும், அகார் முஹம்மதிட்கு ஆதரவாக களமிறங்கியுள்ள நளீமிகளும், இஸ்மத் அலி நளீமி அவர்களைத் தொடர்பு கொண்டு பேசியதும், குறித்த கட்டுரை நீக்கப் பட்டுள்ளது. (மாற்றங்களுடன் வேறு கருத்துக்களுடன் பின்னர் மீண்டும் வெளிவரலாம்)
கட்டுரை நீக்கப் பட்டமை குறித்த ஆதாரங்கள் இங்கே இணைக்கப் பட்டுள்ளன.
கட்டுரை தொடர்பில் இஸ்மத் அலி நளீமியின் அறிவித்தல் |
கட்டுரை காணாமல் போயிருப்பதை இங்கே காணலாம் |
அதே நேரத்தில் இஸ்லாஹிஹல் சிலர் ஹஜ்ஜுல் அக்பருக்கு ஆதரவு வழங்க முடியும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
மேலதிக தகவல்கள் கிடைத்தல் வெளியிடப்படும்.
ரிஸ்வி முப்தியும், ஹஜ்ஜுல் அக்பரும் தங்கள் தலைமைகள் ஆடிக்கொண்டு இருக்கும் இக்கட்டான நிலையில், கீழே விழுந்தால் செத்த எருமை மாட்டை கொத்தித் தின்பதற்கு கழுகுகள் காத்துக் கொண்டிருப்பது போன்று தெளஹீத் ஜமாஅத் காரர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
No comments:
Post a Comment