Thursday, May 15, 2014

உருப்படாத உலமா சபை வாயைப் பொத்திக்கொண்டு இருந்தாலே போதும்

வாசகர் ஆக்கம்
இஸ்லாமியன் முஸ்லிமாக தலைநிமிர்ந்து வாழ்ந்தால் இஸ்லாத்திற்கு எதிராக வரும் கேவலமும் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறையும் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒழிந்துவிடும் இன்ஷா அல்லாஹ்.
மௌட்டீக காலத்தின் விளிம்பில் இருந்த மனிதனை சிந்தனா ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் உயரிய இடத்தை எட்டிப்பிடிக்க வைத்தது இஸ்லாம்.

முஸ்லிம் என்பவன் எப்போதும் இறைவனுக்கு மாத்திரமே அஞ்சுவதும் அடிபணிவதும் என்ற அசைக்க முடியாத உணர்வுகளை ஊக்கங்களை இஸ்லாம் முஸ்லிம்களுக்கு கற்றுக் கொடுத்தது.
ஆனால் துரதிஷ்டவசமாக இஸ்லாம் உள்ளங்களில் வாழாது உடைகளிலும் மேடைகளிலும் வாழ்வது மாத்திரமன்றி இஸ்லாம் என்றால், முஸ்லிம்கள் என்றால் இப்படித்தான் என்பதை முஸ்லிமல்லாதவன் முஸ்லிம்களை இழிந்து நோக்கும் நடைமுறை தற்போது தலைவிரித்து ஆடுகின்றது.

மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் இஸ்லாம் அதனை நடைமுறைப் படுத்தும் உரிமையும் அனுமதியும் தாம் வாழும் நாட்டில் இருக்கும்போது, அரசியல் சக்திகளுக்கும் பதவிமோகத்திர்க்கும் ஆளாகும் இஸ்லாமியன் இதற்காக தன்னைக் காட்டிக்கொடுப்பதற்கோ அல்லது கூட்டிக் கொடுப்பதற்கோ ஒருபோதும் தயங்குபவனாகவும் இல்லை என்பதை அவனாகவே உணர்த்துகின்றான்.

இப்போது அந்நிய சக்திகள் எம்மை ஆக்கிரமித்து அடக்குமுறை செய்யும்போது, இஸ்லாம் எமக்கு எதைக் கற்றுத்தந்துள்ளதோ அதைத்தான் செய்யவேண்டும் என்று அரசியல் தலைவர்களும் உலமா சபையும் ஆங்காங்கே எமக்குப் பாடம் புகட்டுகின்றனர்.

முதலில் முஸ்லிம் அரசியல்வாதியையும், இந்த உலமா சபையையும் சரியாகப் புரிந்து கொண்டால், எமக்குள்ள பிரச்சினையில் சரிபாதி தீர்ந்துவிடும் இன்ஷா அல்லாஹ்.

முஸ்லிம் அரசியல்வாதி எதற்க்காக குரல் கொடுப்பான்?
முஸ்லிம்களின் உரிமைக்காகவும் இஸ்லாமியனுக்காகவுமா, அல்லது தனது வயிற்றுப் பிளைப்புக்காகவா?

முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறும் உலமா சபையாவது இஸ்லாமியனுக்காக பேரம் போகின்றதா அல்லது அரசியலுக்கு சோரம் போகின்றதா? என்றால் அதுவும் அதே நிலைதான் என்றாகிவிட்டது.

இவ் உலமாசபையாகிறது இலங்கை முஸ்லிம்களுக்காக செய்து கிழித்தது என்ன?

1) நோன்புப் பிறையைப் பார்ப்பதும்? பெருநாள் பிறையைப் பார்ப்பதும்?

2) கிரிக்கட் ஆட்டத்தில் முஸ்லிம்கள் இலங்கைக்கே ஆதரவு கொடுக்க வேண்டும்.
3) பெரும்பான்மை சக்திகளால் முஸ்லிம்களுக்கு இன்னல்கள் நேரும் அச்ச சூழலில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்.

இவ் உலமாசபை அறிக்கை இஸ்லாமியனை உணர்வுள்ள முஸ்லிமாக மாற்றுகின்றதா? அல்லது இஸ்லாமிய கோழையாக அவனை மாற்றுகின்றதா?


1) நோன்பு மற்றும் பெருநாள் பிறை அறிக்கை.
வருடத்துக்கு ஓரிரு தடவை வருகின்ற முஸ்லிம்களது பண்டிகைக்காக பிறைப்பார்த்து மக்களிடம் அறிக்கைவிடும் சம்பிரதாயம் தவறாமல் நடைபெறுகின்றது.
ஷக்குடைய நாளையும் பிறையையும் முஸ்லிமுடைய வெற்றுக் கண்ணால் பார்த்து தகவல் அனுப்பினால், அது தாம் அரசாங்கத்திடம் பெற்ற விடுமுறை நாளாக இருக்கின்றதா என்பதை முதலிலும், முஸ்லிம் அரசியல்வாதிகள் அதற்கு என்ன சொல்கின்றனர் என்பதை இரண்டாவதாகவும் வைத்தே பிறை தீர்மானிக்கின்றது என்றால் அது மிகையாகாது.

அவ்வுலமா சபை எதிர்ப்பாராத நாளில் பிறை தென்பட்டால் அவர்களுடைய பிறைக்குழு அலுவலகத்தை நேரம்காலத்தோடு அடைத்துவிட்டு வீட்டுக்கு ஓடிச் செல்கின்றனர்.
அவர்கள் எதிர்ப்பார்க்கும் நாளில் பிறை வரவேண்டுமென்றால் பிறைக்குழு ஆபிசை விடிய விடிய திறக்கின்றனர். பிறையைக் கண்டாலும் பெருநாள், காணாவிட்டாலும் பெருநாளே.

அல்லாஹு அக்பர்.... அல்லாஹு அக்பர்..... அல்லாஹு அக்பர்....
லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்... அல்லாஹு அக்பர் வலில்லா.. ஹில்ஹம்து...... என்று அழகாக தக்குபீர் முழங்குகின்றனர்.

அவர்களுடைய பிறை கணிப்பு எவ்வாறு இருப்பினும் இலங்கை மண்ணில் ஒரு நோன்பில் இரண்டு நோன்புப் பெருனாட்கள் என்பது அது வழமைப் போலவே.
அதற்குப்பின் ஜம்மிய்யதுள் உலமாவின் ஒரு அறிக்கைவேறு சமர்பிக்கப் படும்.
அதாவது முந்தைய நாள் பெருநாள் கொண்டாடியதும் சரிதான், அடுத்தநாள் கொண்டாடியதும் பிழையில்லை என்ற அபூர்வ அறிக்கை. அடுத்தவருடம் இதற்காக அலாதியான ஒரு கரிசனை எடுக்கப் படும் என்று வருடா வருடம் விடும் புருடாவை கூறவும் அவர்கள் மறப்பதில்லை.

2) உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டியில் இலங்கை முஸ்லிம்கள் எவ்வாறு நடக்க வேண்டும் என்ற அறிக்கை.
உலகின் மிகப்பெரிய சூது ஆட்டமான கிரிக்கட்டுக்கு இலங்கைக் கொடியைக் நட்டிவைக்கவும் இந்த சூதாட்டத்தை விளையாடும் இலங்கை சூதாட்ட வீரர்களுக்கு உங்களுடைய "சப்போர்டை" கொடுங்கள் என்று அறிக்கை விடுதல்.

முஸ்லிம்களாகிய நாங்களும் இலங்கைக்குத் தான் "சப்போர்ட்டு" என்று கூறாவிட்டால் எங்களை என்னவென்று நினைப்பார்கள். தவறியேனும் வேறு நாட்டுக்கு முஸ்லிம்கள் கொடிபிடித்தால் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை என்னவாகும்?

இஸ்லாத்தில் இந்த சூதுக்கு அனுமதி இருக்கின்றதோ இல்லையோ அனால் இந்த விடயத்தில் அரசியல்வாதியை ஒருபோதும் பகைக்க முடியாது. நாங்களும் நாட்டுப் பற்று உள்ளவர்கள் என்பதை உணர்த்த கடமைப் பட்டுள்ளோம் என்று இஸ்லாமிய கிரிக்கட் அறிக்கை. ஏன்னா ஒரு இஸ்லாமிய உணர்வு இந்த உலமாக்களுக்கு.

3) பெரும்பான்மை சக்திகளால் முஸ்லிம்களுக்கு இன்னல்கள் நேரும் அச்ச சூழலில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிக்கை.
ஆரம்பத்தில் தர்கா ஒன்றில் கையை வைத்துவிட்டு இற்றைக்கு இருபத்து ஐந்து மஸ்ஜித்களில் தங்களுடைய கைங்கரியத்தைக் காட்டிவிட்டனர் பொதுபல சேனாவும் அதன் அடிவருடிகளும்.

ஹலால் விடயத்தை கையில் எடுத்தவுடன் உலமா சபை நேரடியாக அதில் தொடர்பு பட்டிருந்ததால் அதற்காக ஆரம்பத்தில் கொந்தளித்தவர்கள் இலங்கை ஜனாதிபதி அவர்கள் உலமா சபையை அழைத்து அவருடைய மாளிகையின் புரியாணி சாப்பாடு ஒன்றைக் கொடுத்தவுடன் ஹலால் விடயத்தில் அவர்களுக்கு இருந்த ஆவேசம் எங்கு சென்றதோ ஏது சென்றதோ தெரியவில்லை.

ஆனால் பொதுபலசேனா அவர்கள் விரும்பியவாறு ஹலாலை விட்டுக் கொடுத்து விட்டனர்.

இதற்கு ஆதாரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடன்படிக்கையின்போது பல விடயங்களை விட்டுக் கொடுத்தனர். அதனால் பொறுமையாக நாமும் விட்டுக் கொடுப்பதால் பல விடயங்களைச் சாதிக்கலாம் என்று தனது கோழைத் தனத்துக்கு அவர்களுடைய வியாக்கியானம் வேறு.

புதிதாக ஏதும் முஸ்லிம்களது உரிமைக்காக உலமா சபையான நீங்கள் ஒப்பந்தங்கள் செய்யும்போது பலவிடயங்களை விட்டுக் கொடுத்தால் அதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

ஆனால் முஸ்லிகளுக்கு இந்த நாட்டில் ஏற்கனவே இருந்த உரிமைகளை விட்டுக் கொடுப்பதற்கோ அல்லது அதனை விட்டுவிடுவதற்கோ, இதுவொன்றும் நீங்கள் அயராது பாடுபட்டு முஸ்லிம்களுக்காக அரசிடம் பெற்றுத்தந்த உரிமைகள் கிடையாது என்பதை முதலில் ஆழமாக மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள்.

ஏனெனில் முஸ்லிம்களது ஆடை வகையில் ஒரு ஆடையாம் தொப்பியை நீதிமன்றத்திநுல் கலைந்திருக்க வேண்டும் அதனை அணியக்கூடாது என்றபோது, எம்முன் வாழ்ந்த இஸ்லாமிய தலைவர்களும் அரசியல்வாதிகளும் இதற்க்கு எதிராக குரல்கொடுத்து இது முஸ்லிமின் ஆடை உரிமை என்று நீதிமன்றத்தில் வாதாடி அதனை மீட்டுப் பெற்றதன்பின்பு இஸ்லாமியனுக்கு தொப்பியைக் களையச் சொல்லக்கூடாது என்று நீதிமன்றத்தில் உத்தரவிட்டு பெற்ற உரிமையில் இது ஒரு உரிமையாகும்.

சாதாரண ஒரு தொப்பி என்ற முஸ்லிம்களது உரிமை விடையத்தையே விட்டுக் கொடுக்காத எம்முன் வாழ்ந்து மறைந்த இஸ்லாமியனின் பாரம்பரியத்தை சுமந்த முஸ்லிம்கலே நாமாவோம்.

முன்னைய இஸ்லாமிய தலைவர்கள் கடுமையாக பாடுபட்டு பெற்ற இதுபோன்ற முஸ்லிம்களது ஒவ்வொரு உரிமைகளையும் கேவலமாக இன்று உலமா சபையான நீங்கள் விட்டுக் கொடுக்க எவ்வாறு உங்களுக்கு உங்கள் மனம் இடமளித்தது?

பொதுபல சேனாவின் அவர்களது ஒவ்வொரு அடாவடிகளுக்கும் பகரமாக முஸ்லிம்களை அவர்களைப் போன்று எம்மையும் மாற்றிக் கொள்ளும் போக்கை ஷரீஅத்தில் எங்கிருந்து இதற்க்காண அனுமதியைப் பெற்றுக் கொண்டீர்கள்?

இதுகால வரைக்கும் தேசியகொடி என்பது சுதந்திரத் தினத்திற்காக விரும்பிய முஸ்லிம்கள் தொங்கவிட்டனர். ஆனால் நீங்கள் ஒருபோதும் இல்லாதவாறு இப்போது மஸ்ஜித்களிலும் தொங்கவிடுமாறு வலியுருத்துகின்றீர்கள். இது ஏன் எதற்க்காக?

பௌத்த மக்களுடன் அன்னியோன்யமாக இருக்கவேண்டும் என்பதற்காக அவர்களுடைய பௌத்தவிகாரைக்குச் சென்று கோயிலை சுத்தப்படுத்திக் கொடுக்க ஆலோசனை வழங்குகின்றீர்கள். இது ஏன் எதற்க்காக?

அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழியே என்பதுபோன்ற முஸ்லிம் மக்கள்.

முதுகெலும்பில்லாத உலமா சபையின் முறைகேடான வழிகாட்டலில் சிக்கிய எம் இஸ்லாமிய நெஞ்சங்கள் இப்போது அவரவர்களது வீடுகளிலும் இஸ்லாமிய பாடசாலைகளிலும் வெசாக் பண்டிகையைக் கொண்டாடுவது மாத்திரமன்றி தன்சல் உணவை வழங்கும் திட்டங்களிலும் மும்முரமாக இறங்கியுள்ளனர். நாமும் உங்களுடன்தான் என்பதையும் மத இணைக்கப் பாட்டையும் காட்டுகின்றனராம்.

ஆனால் பெரும்பான்மையும் பொதுபல சேனாவும் நீங்கள் எங்களைப் போன்று நடித்தும் எங்களது கொண்டாட்டங்களைக் கொண்டாடுவதாலும் இவர்களுடைய அடாவடிகள் குறைந்ததா என்றால், இல்லை என்பதே பதிலாகும்.

அல்லாஹ் என்ன கூறுகின்றான்?

(ஏக இறைவனை) மறுப்பவர்களே! "நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு" எனக் கூறுவீராக!
(சூராஹ் அல் காபிரூன் 1-6)

14/05/2014 அன்று உலமா சபையின் co existance message வழிகாட்டல் என்று ஒரு வெளியீட்டை இட்டு அவர்களுடைய கோழைத்தனத்தை மேலும் படம்போட்டுக் காட்டியுள்ளனர்.

அதாவது பெரும்பான்மையின் மதங்களைப் புண்படுத்த வேண்டாம் என்றும் அவ்வாறு பேசிய இஸ்லாமிய அமைப்புக்கு அன்பான வேண்டுதல் என்றும் கூறியவர் நம்முடைய மதத்தை நிந்தித்தும் குர்ஆனுக்கு பல அபாண்டங்கள் கூரியோருக்கு எந்த 
அறிவுறுத்தலோ கண்டிப்போ இல்லாத Co Bodubala sena message ஒன்றை முதுகெலும்பற்ற உலமா சபை பிரகடனப் படுத்தியிள்ளது.

இதிலிருந்து ஒன்றுமட்டும் ஊர்ஜிதம். இவர்கள் முஸ்லிம்களைப் பிரதிநிதுத்துவப் படுத்துகின்றார்களோ என்னவோ பெரும்பான்மை பௌத்தத்துக்கும் அரசியல்வாதிகளதும் பொதுபல செனாவினதும் பிரதிநிதிகளாக செயல்படுவதை கண்கூடாகக் காண முடிகின்றது.
உலமா சபை ஆகிய உங்களுடைய வழிகாட்டலால் முஸ்லிகளுக்கு நன்மையா அல்லது தீமையா?

தொப்பி விடயத்தில் அன்றைய எம்முன்னைய இஸ்லாமிய தலைவர்கள் முதுகெலும்புடன் நீதிமன்றத்தில் குரல் கொடுத்ததற்கு இஸ்லாமிய பின்னனியொன்று இருக்கின்றது.

அதாவது காணி தகராறு ஒன்றில் இரண்டு பேரில் ஒருவர் தனது உரிமையை விட்டுக்கொடுக்காது வாய் தகராறு ஏற்பட்டு தனது காணியின் உரிமை சண்டையில் நீதியை விட்டுக்கொடுக்காத அந்த மனிதர் இறந்தால் அவர் ஷஹீத், அல்லாஹ்வின் பாதையில் உயிர்நீத்தவருக்குச் சமம் என்கின்றார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்.

இதன் அடிப்படையில் முன்னைய முஸ்லிம் தலைவர்கள் செயல்பட்டாலும் நீங்களோ முஸ்லிம்களது ஹலால் உரிமையாக இருந்தாலும் மஸ்ஜித் உரிமையாக இருந்தாலும் அதனை விட்டுக் கொடுக்கச் சொல்லும் கோழைகளாக முஸ்லிம்களை மாற்றியது மாத்திரமன்றி அந்நியர்களுக்கு அவர்களுடைய ஆலயங்களை சுத்தம் செய்யும் ஆலோசனையையும் அவர்களது பண்டிகையை கொண்டாடுவதில் பங்களிப்புடன் நடக்குமாறும் சூதாட்டத்துக்கு அறிக்கை கொடுக்கும் இஸ்லாமிய உலமா சபையாகவும் இருந்து முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக கூறுகின்றீர்கள்.

இதுபோன்ற முதுகெலும்பற்றவர்களுக்குக் கீழ் நாம் செயல்படுகின்றோம் என்றுகூற எங்களுக்கு வெட்கமாக இருக்கின்றது. இந்த உலமா சபைக்கு என்ன நேர்ந்தது? இவர்கள் அறிக்கை விடுவதைவிட மௌனித்து இருப்பதே முஸ்லிம்களுக்கு இவர்கள் செய்யும் பேருதவியாக நான் கருதுகின்றேன்.

இவர்கள் இஸ்லாமிய உணர்வுடன் முஸ்லிம்களது உரிமைக்காக குரல்கொடுக்காது விட்டாலும் அதற்க்கு நாம் ஒன்றும் நினைக்கப் போவதில்லை.

ஆனால் முஸ்லிம்களுக்காக அல்குர்ஆணை கேவலப் படுத்தியதக்காக குரல்கொடுக்கும் இலங்கை முஸ்லிம் அமைப்புக்கும், அதற்காக ஆர்ப்பாட்டம் செய்த லண்டன் அமைப்புக்கும் எதிராக அறிக்கை விடும் உங்களது கோழைத்தனம் ஏன் எதற்கென்று மக்கள் அறிந்துள்ளனர்.

அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள விதியில் எள்முனையளவும் மாற்றமாக நடைபெறப் போவதில்லை.

அல்லாஹ்வுக்கு அஞ்சவேண்டிய நீங்கள் அரசியல் சாக்கடைக்கு அஞ்சுவதேன்?

அல்லாஹ்வின் தூதரை கார்டூன் வரைந்து உருவெடுத்ததற்கு உலகமே கொந்தளித்தது.
ஏன்? இலங்கை முஸ்லிம்களும் கொந்தளித்து எழுந்தனர்.

எம் உயிரிலும் மேலான அல்குர்ஆனை நிந்திக்கும்போதும் கேவலப்படுத்தும்போதும் இலங்கை அரசியலுக்காக வேடிக்கைப் பார்க்க எது உங்களைத் தூண்டியது?

அல்லாஹ்வுடைய தூதருக்காக ஆர்ப்பாட்டம் செய்வதைப் பார்த்து மௌனித்த உங்களுக்கு, அல்லாஹ்வுடைய வார்த்தையாம் அல்குர்ஆனை நிந்திக்கும் கூட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்துவோருக்கு மற்றும் இஸ்லாமிய அமைப்புக்கு எதிராக அறிக்கை விடுவதற்கு எது தூண்டியது உங்களுக்கு?
ஒருகணம் சிந்திப்பார்களா?

வல்லாஹு அஉலம்.
இப்படிக்கு
ஆஷிக் ரஷீத்
இங்கிலாந்து.


( முக்கிய குறிப்பு : கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாசிரியருக்கே சொந்தம், அவை "மெளலவி லீலைகள்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை. )

6 comments:

  1. Yes you re from UK one of uroookolapee member you idiot even you doesn't N what dose mean Acju ....... You saithaan if you have GU.... Just go to Acju and tell this All idiots......

    ReplyDelete
    Replies
    1. நீ சொல்லுவதை பார்த்தால் நீ ஒரு பெரிய முட்டாள் என்றும், ஒரு முட்டாளின் மகன் என்றும், இன்னொரு முட்டாளின் சூ** தை நக்குபவன் என்றும் புர்கின்றது.

      எண்டா இப்படி எருமை மாடுகளாக இருக்கின்றாய்? எழுதபப்ட்டுள்ள விடயங்களின் உண்மையை உனக்கு சிந்தித்து புரிந்துகொள்ள முடியாதா? சொறி, நீதான் எருமை மாடு ஆச்சே.....

      Delete
  2. இதனை பார்ஹ்த பின்னரும், உலமா சபையில் இருக்கும் தாடி வைத்த அரவாணிகள் சேலை அணிய வேண்டும்.

    ReplyDelete
  3. உண்மையை உறைக்கச் சொல்லி இருக்கிறீர்கள்.போராடிப் பெற்ற சுதந்திரத்தை வேரோடு அளிக்க துணை நிற்கும் இஸ்லாமிய தலைமைத்துவங்கள் என்னும் தலைப்பாகைகளே உங்கள் மண்டையில் இன்னும் உறைக்கவில்லையா? நோன்பு பிடித்தவன் பிறை கண்டபின்பும் ஹறாமான நோன்புபிடிக்கச் சொன்ன க[ன]யவான்களே. போரா சமூகம் தான் பிறையை தீர்மானிக்கும் என்றால் அல்லது மாற்று மத அரசாங்கம் தன்னுடைய தேவைக்காக இஸ்லாமிய மத நடவடிக்கைகளை தீர்மானிக்கும் என்றால் இதனை வெளியிட இப்படி ஒரு ஜமாஅத்தும் தலமைத்துவமும் தேவை இல்லை. ஜனாதிபதி மாளீகைக்கு கூப்பிட்டு பண்டி இறைச்சியிலா புரியாணி போட்டார். அதனால்தானா அப்படி ஒரு முடிவை எடுத்துள்ளீர்கள். இஸ்லாத்திற்கும் அல்லாஹ்வின் கட்டளைக்கும் மாறு செய்துள்ளீர்கள். என்பதனையும் முஸ்லீம்களையும் வழி கெடுத்துள்ளீர்கள் என்பதனையும் ஒத்துக் கொண்டீர்களா?

    ReplyDelete
  4. Enakku oru unma therinjaahanum.
    Halal Haram Piriththu kaattuhireer hale.
    Dansal thinbathu halaala? Muslimgalum kodukka laama?
    HARAM HALAL SOLVATHU VAYTRU PILEYPUKKA. MUSLIMGALUKKU WALIKAATTAVA?
    FahimZiyad

    ReplyDelete
  5. ஏனடா உங்களுக்குள் இத்தனை சண்டை ...முட்டாள்கள்.

    ReplyDelete