Wednesday, May 21, 2014

தெளஹீத் ஜமாத் பெளத்த தேரர்களின் காலில் விழுமா? அல்லது அல்லாஹ்வுக்காக ஜெயிலுக்கு போகுமா?

வாசகர் ஆக்கம் : அலியார்


அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று நமது மூதாதயைர்கள் சொன்னது எந்த அளவிற்கு சரி என்பது தற்பொழுது இன்னுமொரு விடயத்தில் நிரூபணமாகியுள்ளது. அதுதான் SLTJ பித்னா என்று சொல்லலாம். ஆப்பிழுத்த குரங்காக மாறிவிட்டது SLTJ.




தமிழ்நாட்டின் PJ என்கின்ற மார்க்க அறிஞர் என்று சொல்லப்படுகின்றவரை அறிஞர், வழிகாட்டி என்பதையெல்லாம் தாண்டி ஏறக்குறைய ஒரு நபியின் அந்தஸ்தில் வைத்து பின்பற்றும் இரண்டு அமைப்புக்களில், இலங்கையில் செயல்படும் ஒரு அமைப்புத்தான் SLTJ ஆகும்.

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் "கக்கூசுக் கலவர" நகைச்சுவைக்கு ஏற்றாற்போன்று, எடுத்ததெற்கெல்லாம் "விவாத அழைப்பு" விடும் SLTJ இனிமேல் வால் ஆட்ட முடியாதபடிக்கு, SLTJ யின் வால் நீதி மன்றத்தால் ஓட்ட நறுக்கப் பட்டுள்ளது.

இமாம்கள், மெளலவிகள் என்று யாரையும் மதிக்காமல் தான்றோன்றித் தனமாக, அடாவடி ரவ்டிகள் போன்று செயற்பட்டு அனைவரதும் வெறுப்பை சம்பாதித்துள்ள SLTJ, தற்பொழுது பெளத்த மகாநாயக்க தேரர்களை நாடிச் சென்று சிரம் தாழ்த்தி மன்னிப்புக் கேட்கவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மாபெரும் சகாபாக்களுக்கும், இமாம்களுக்கும் தெரியாத விடயங்களும், அறிவும் தனக்கு இருப்பதாக மமதையாக பேசிவரும் PJ யின் TNTJ, SLTJ என்பவை சிர்க், பித்அத் விடயத்தில் மிகவுமே கடுமையானவை என்று தம்மைக் காட்டிக் கொள்பவர்கள்.

சூனியம் இருக்கின்றது என்று சொன்ன காரணத்திற்காக, மக்கா மதீனாவின் இமாம்கள் உட்பட அனைத்து முஸ்லிம்களையும், மற்றும் ஏனைய தெளஹீத் அறிஞர்களையும் முர்தத், முஷ்ரிக் ஆக்கிய ஒரு இயக்கம், இன்று பெளத்த தேரர்களின் காலில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்குமா, இல்லை நபி இப்ராஹீம் (அலை) போன்று தைரியமாக நின்று, இணைவைப்பை எதிர்த்து, சிலை வணங்கும் பெளத்த மதகுருமாரின் காலில் விழாமல், இவ்வுலக வாழ்க்கை பெரிதல்ல, சுவர்க்கமே தமது இலக்கு என்று சொல்லி,  நபி யூசுப் (அலை) அவர்கள் போன்று சிறைக்குச் சென்று, தாம் சிறந்த ஏகத்துவ வாரிசுகள் என்பதனை நிரூபிக்குமா?

எடுத்ததெற்கெல்லாம் சிர்க் பேசும் இந்த ஏகத்துவவாதிகளான SLTJ யினர், உண்மையில் அஞ்சுவதும் அடிபணிவதும் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கா அல்லது சிலை வணங்கி இணைவைக்கும் காபிரான நீதிபதிக்கா என்பதனை பார்க்க முழு நாட்டு முஸ்லிம்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


முஜாஹித் என்கின்ற ஒரு அப்பாவி மெளலவியை, வேண்டுமென்றே set up செய்து, பாலியல் பொய்களை ரெக்கோர்ட் பண்ணி, அவரது மானத்தை விலை பேசிய SLTJ யினர், காபிர்களான பெளத்த தேரர்களிடம் வசமாக மாட்டிக்கொண்டு அவமானப் படுகின்றனர்.

புத்தளத்தை சேர்ந்த அர்ஹம் மெளலவி என்பவரை விவாத ஒப்பந்தம் என்று அழைத்து வந்து அதனை விடியோ பண்ணி, அவரை மரியாதையில்லாமல் ஏசி, அவமானப் படுத்தினார்கள். மேலும் அக்கரைப்பற்று மெளலவி அன்சார் தப்லீகி அவர்களை விவாதம் என்கின்ற பெயரில் கடிதம் அனுப்பியும், இரகசியமாக விடியோ பண்ணியும், அவரது மானத்தை வாங்கினார்கள்.

மேலும், ஒரு ஹதீஸ் தொடர்பில் விளக்கம் அளித்த காரணத்திற்காக, மெளலவி இஸ்மாயில் சலபி என்பவரை, அவர் தனது உம்மாவிடம் பால் குடிப்பாரா, சகோதரியிடம் பால் குடிப்பாரா என்றெல்லாம் மிகவும் ஆபாசமாக வசைபாடினார் SLTJ யின் துணைச் செயலாளர் மிஸக் றஸ்மின் என்பவர்.


இவ்வாறாக மற்ற முஸ்லிம்களையும், உலமாக்களையும் அவமானப் படுத்தி, இழிவு படுத்தி, தாங்கள் மட்டும்தான் 100% சுத்தமான முஸ்லிம்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் PJ, TNTJ, SLTJ ஆகியோரை, இணைவைக்கும் பெளத்த மதகுருமாரின் உயர் பீடங்களுக்கு சென்று மன்னிப்புக் கேட்க வைத்துள்ளதன் மூலம் அல்லாஹ் அவமானப் படுத்தி, இவர்களது போலி வேடங்களை அல்லாஹ் மக்களுக்கு வெளிக்காட்டியுள்ளான்.

தங்கள் கொள்கைக்கும், பேசிய பேச்சுக்கும் உண்மையாக நடந்து, SLTJ யினர் சிறை செல்வார்களா, அல்லது அல்லாஹ்வைப் புறக்கணித்து  இணைவைப்பாளர்களுக்கு அஞ்சி நடுங்கி கண்டிக்குச் சென்று பெளத்த மகானாயக்கர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பார்களா?

நபி இப்ராஹீம் (அலை) அவர்களுடைய நம்பிக்கை உறுதியாக இருந்தது, அவர்கள் தீக்குண்டத்தில் தூக்கி எறியப்பட்டார்கள், நெருப்பு அவர்களை தீண்டவில்லை, அதிலிருந்து சாதாரணமாக வெளியே வந்தார்கள். SLTJ யினரின் நம்பிக்க உறுதியாக் இருந்தால், சிறைக் கதவுகள் இவர்களை சிறைப்பிடிக்காது, இவர்கள் கதவுகளுக்குள் ஊடுருவியே வெளியே வந்துவிடுவார்கள். நடக்கின்றதா என்று பார்ப்போம்.


மகாநாயக்கர்களின் காலில் விழுகின்றார்களா? கம்பி எண்ணுகின்றார்களா? கம்பிகளைக் கடந்து வெளிவருகின்றார்களா? பார்ப்போம், பார்ப்போம், பொறுத்திருந்து பார்ப்போம்.



- அலியார்  (நீர்கொழும்பு)


( முக்கிய குறிப்பு :  மேற்படி கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாசிரியருக்கே சொந்தம், அவை "மெளலவி லீலைகள்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை. )

5 comments:

  1. sltj is a muslim ok can you sey duha

    ReplyDelete
  2. நிச்சயமாக இஸலாமிய விளக்கம் அளித்துவிட்டு மன்னிப்பு கேட்பார்கள்...

    ReplyDelete
  3. முஸ்லிம்களின் சகல பிரச்சினைகளுக்கும் முன்னிற்பதாகவும் சமூதாயத்தின் காவலராகவும் கருதும் தௌஹீத் ஜமாத்தினர் அண்மைகால அளுக்கமை.. கம்பளை.. மாவனல்லை .. பிரச்சினைகளின் போது மௌனமாகி போனது ஏன்? உலமா சபை பேசினாலும் பேசாவிட்டாலும் சுட்டிக் காட்டும் இவர்களுக்கு இப்பொழுது என்ன நடந்து விட்டது. குறைந்தபட்சம் நீதிமன்ற தீர்ப்பு பற்றியாவது நிலைபாட்டை தெரிவிக்கலாமே.

    ஒரு அறிக்கையும் இல்லையே.. உண்மையில் கம்பளையில் சிங்களவர்களை தூண்டிவிட்டதே சிறிது காலத்திற்கு முன்னர் வெசக் காலத்தில் அதனை பொறுத்படுத்தாமல் ஆதில் ஹஸன் கம்பளை சாகிராவில் செய்த முறையற்ற கண்காட்சி தான். அந்த உண்மை எத்தனை பேருக்கு தெரியுமோ??

    அதுபோல அறிக்கை மன்னன் முபாரக் மௌலவியின் நகைச்சுவை கண்டன அறிக்கைகள் எதையும் குறித்த சம்பவங்கள் குறித்து காணமே. அவரை பொறுத்தவரை இலங்கையும் முஸ்லிம்களும் கிழக்கு மாத்திரமே தான் போல


    அசாத் - மாவனல்ல

    ReplyDelete
    Replies
    1. Tayawu saitu mubarak moulaviyai wampukku ilukka wendam.eam samookattil aswaru mattum kaadar mp aakiyorin idattai awaraal mattume nirappa mudiyum.so awar paaw.

      Delete
  4. This is a very dangerous move to criticize moulavis let them belong to any group or movement. Pls cancel this account, may Allah bless you.

    ReplyDelete