வாசகர் ஆக்கம்
நீங்கள் ஜமாத்தே இஸ்லாமியின் தலைவர் ஹஜ்ஜுல் அக்பருக்கு எழுதிய மடலை வாசிக்கக் கிடைத்தது.
நன்றாக நக்கலும் குத்தலும் அடிக்கிறீர்கள்.
உங்களது மறுப்புக் கட்டுரையிலிருந்து தெரிய வருவது என்னவென்றால், பிறை விவகாரத்தை வைத்து நீங்கள் மீண்டும் தப்லீக் ஜமாஅத்தில் இடம் பிடிக்கவும் றிஸ்வி முப்தியின் மனதை வென்று விடலாம் என்ற அரசியலைத் தவிர வேறொன்றும் இருக்க முடியாது.
உங்கள் உள்ளத்தைத் தொட்டு நீங்களே மீண்டும் மீண்டும் கேட்டுப் பாருங்கள். நீங்கள் மறுப்பு ஆக்கம் எழுதிய நோக்கத்தை அறிந்து கொள்வீர்கள்.
தப்லீக் ஜமாத்திலிருந்தும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிலிருந்தும் ஓரங்கட்டப்பட்ட நீங்கள், சமூகத்தில் உங்களது பெயரைப் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, உங்களையும் மக்கள் மதிக்க வேண்டும் என்பதற்காக யாருடனும் கூட்டுச் சேர நீங்கள் தயார் என்பதை உங்களது செயற்பாடுகள் காட்டுகின்றன.
மொத்தத்தில் உங்களுக்கு என்று ஒரு கொள்கையே கிடையாது. உங்களது பெயர் சமூகத்தில் பிரபலமானால் போதும்! அவ்வளவுதானே!
தப்லீக்கின் தறுதபை; பிள்ளையான உங்களுக்கு தப்லீக் ஜமாஅத்திலிலிருந்து ஓரம் கட்டப்பட்டபோது தப்லீக் ஜமாஅத்தையும் ஜம்இய்யதுல் உலமா சபையையும் கடுமையாக விமர்சித்து திரிந்தீர்கள். றிஸ்வி முப்தி அவர்களின் தனிப்பட்ட, சமூக வாழ்க்யை கொச்சைப்படுத்தித் திரிந்தீர்கள்.
உங்களது பேரைப் போட்டுக் கொள்வதற்காக தேசிய ஷுரா சபையில் இணைந்து கொண்டு பெரிய சமூக நோக்கம் கொண்டவராக காட்டிக் கொள்கிறீர்கள்.
உங்களைப் போன்றவர்களின் முகத்திரையை சமூகம் கிழித்து எறியட்டும்.
நீங்கள் றிஸ்வி முப்தியைத் தூற்றித் திரிந்ததை நீங்கள் மறுக்கவும் மாட்டீர்கள். மறக்கவும் மாட்டீர்கள்.
ஆனால், இப்போது நல்ல பிள்ளை போல கருத்துச் சொல்கிறீர்கள்.
என்னவோ உங்களுக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என்ற நினைப்பு!
சமூக ஆய்வாளர் என்று வேறு பெயரைப் போட்டுக் கொள்கிறீர்களே!
இல்லை தெரியாமல்தான் கேட்கிறேன். சமூகத்தில் எதனை ஆராய்ந்து கிழித்தீர்கள்?
நீங்கள் தௌஹீத் ஜமாஅத்காரர்களையும் கடுமையாக விமர்சித்து திரிந்ததை உங்களோடு இருந்தவர்கள் நன்கு அறிவார்கள.
பேஸ்புக்கில் நாலு கருத்துச் சொல்லி விட்டால் நாலு கட்டுரை எழுதி விட்டால் சமூக ஆய்வாளர் என்ற நினைப்பா?
உங்களது நினைப்பு உங்களது பிழைப்பைக் கெடுக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்.
உங்களது வண்டவாளங்களையெல்லாம் (எனக்குத் தெரிந்த ஒரு சிலவற்றை) தோண்டினாலே உங்களது மானம், மரியாதை எல்லாம் தண்டவாளம் ஏறும் என்பதற்காக இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
உங்களைத் தெரிந்தவன்
(முக்கிய குறிப்பு : கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரியாயாசிரியருக்கே சொந்தம், அவை "மெளலவி லீலைகள்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை. )
i observing your Blog, But i feel blogger is supporter of " Mewath Quilt" thatsmeen "Thableek Buffelo"
ReplyDelete