Sunday, October 2, 2016

"மீண்டும் ஜமாத் கேம்ஸ் (மெளலவி லீலைகள்)" - புதிய நிர்வாகத்தின் கீழ் மிக விரைவில்....

அன்புள்ள வாசகர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு,

மார்க்கத்தின் பெயரால் புரோகிதர்கள், பூசாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் அநியாயங்களை மக்கள் மயப்படுத்தி நியாயங்களை நோக்கி குரலெழுப்பி வந்த வந்த உங்கள் அபிமான இணையத்தளம் தவிர்க்க முடியாத காரணங்களால் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக இயங்க முடியாத இக்கட்டான நிலமையில் காணப்பட்டது.

முஸ்லிம்கள் அதிகம் எதிர்பார்த்த முக்கியமான தருணங்களிலும் கூட செயற்பட முடியாமல் போன கஷ்ட நிலைமை குறித்து வருத்தங்கள்.

தொடர்ந்தும் இந்த இணையத்தளம் சிறப்பாக செயற்பட வேண்டும் என்கின்ற நல்ல நோக்கத்தில் இந்த இணையத்தளத்தின் பொறுப்புகள் புதிய நிர்வாகம் ஒன்றிற்கு மாற்றம் செய்யப்படுகின்றன. இது பணக் கொடுக்கல் வாங்கல் சம்மந்தப்பட்ட நிர்வாக மாற்றம் அல்ல. (அதாவது இணையத்தளம் விற்பனை செய்யப்படவில்லை.)

புதிய நிர்வாகத்தின் கீழ் உங்கள் அபிமான ஜமாத் கேம்ஸ் இணையத்தளம் மிக விரைவில் மீண்டும் தனது சேவைகளை வழங்கும், இன்ஷா அல்லாஹ்.

முஸ்லிம்களை இருட்டில் வைத்திருக்கவும், பிற்போக்குத்தனத்தை நோக்கி நகர்த்தவும் புரோகித முல்லாக்கள் கடும் முயற்சி செய்யும் ஒரு இக்கட்டான காலகட்டத்தில் நாம் இருப்பதால், முன்னரை விடவும் வாசகர்களின் பங்களிப்புகள், தகவல்கள் அதிகமாக எதிர்பார்க்கப் படுகின்றன. உங்களால் முடியுமான பங்களிப்புகள், தகவல்களை தயங்காமல் உடனுக்குடன் ஈமெயில் மூலம் தெரியப்படுத்துங்கள். உங்கள் ஆதரவிலேயே ஜமாத் கேம்ஸ் இணையத்தளத்தின் தொடர்ச்சியான இயங்குதிறன் தங்கியுள்ளது.

ஜஸாகல்லாஹு ஹைரன்

நிர்வாகம்
ஜமாத் கேம்ஸ்
(மெளலவி லீலைகள்)






2 comments:

  1. ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.

    ReplyDelete