புற்றிநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இருந்த PJ, அண்மையில் மீண்டும் சுகவீனமடைந்தார். ஜமாத்தின் மொத்த இருப்பும் PJ என்னும் தனி மனிதரிலேயே தங்கியிருப்பதால், அவரது சுகவீனம் குறித்த அனைத்து தகவல்களையும் மிகக் கவனமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கையாண்டு வருகின்றது.
PJ யின் உயிருக்கு ஏதாவது நடந்தால், ஜமாத்தின் எதிர்காலம் காற்றில் கரைந்து போகலாம் என்பதால் PJ யின் இருப்பிலேயே ஜமாத்தின் இருப்பும் தங்கி உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இந்நிலையில் PJ மயங்கி விழுந்தது உட்பட பல விடயங்கள் மறைக்கப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது.
திடீர் என்று PJ தலைமைப் பதவியில் இருந்து விலகிய பொழுதும், அதற்கு வேறு காரணங்களே சொல்லப்பட்டன, இந்நிலையில் இவ்வருடம் ரமலான் மாதம் தலைமையகத்தில் நிகழ்த்த இருந்த உரைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, அந்த பொறுப்பு வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.
PJ தனக்கு சூனியம் செய்யுமாறு பலபேரிடம் சவால் விட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment