Monday, May 23, 2016

SLTJ யின் Double Game - "தொப்புல்கொடி உறவுகளைப் பாதுகாப்போம்"

வாசகர் ஆக்கம்



"தொப்புல்கொடி உறவுகளைப்
பாதுகாப்போம்"
என்ற தொனிப் பொருளில் சிறீ
லங்கா தவ்ஹீத் ஜமாத் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களது
உதவிகளை மிகச் சிறப்பாக செய்து
வருவதை அவதானிக்க முடிகிறது.

இயக்கத்தின் உயர்மட்டம், அடிமட்டம் என்ற வேறுபாடின்றி
அனைவரும் களத்தில் நின்று
பணியாற்றுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கின்றது.
இந்த வெள்ள நிவாரணப் பணியில்
அவர்களது செயற்பாடுகளை விமர்சிப்பதை நாம் வண்மையாக
கண்டிக்கின்றோம். அந்த விமர்சனங்கள் எந்தவித அடிப்படையும் அற்றவை என்று நாம் முழுமையாக நம்புகின்றோம்.


நிற்க
ஒரு இயற்கை அணர்த்தம் வரும்போது முழு சமூகத்தையும்
தமது "தொப்புல்கொடி" உறவுகளாக
பார்க்கும் தவ்ஹீத் ஜமாத் 
ஏனைய நாட்களில் அதை ஏனோ மறந்துவிடுகிறார்கள்.


ஒரு சமூகப்பிரச்சினைக் குறித்து

ஜம்மியதுல் உலமாவோ, தேசிய
சூறா சபையோ உங்களை அழைத்தால்
அவர்களுக்கு எதிராக இரண்டு
வீடியோவை வெளியிட்டு விட்டு 
நீங்கள் ஒதுங்கி விடுவீர்கள்.
அவர்களுடன் நாம் சேரமாட்டோம்,
பேச மாட்டோம் என்று விதன்டாவாதம் புரிந்து கொண்டிருப்பீர்கள்
ஆனால் வெள்ள நிவாரணத்துக்கு
நீங்கள் நிதி சேகரிக்கும் பொழுது
உங்கள் கொள்கை சார்ந்தவர்களிடம் மட்டும் 
நீங்கள் உதவி கேட்பதில்லை
இப்படியான சந்தர்ப்பத்தில்
உங்கள் கொள்கையை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு
நீங்கள் கடுமையக விமர்சிப்பவர்களிடம் கூட உங்கள் உண்டியல்களை நீட்டுகிறீர்கள்.


உங்களுக்கு உதவி செய்பவர்களும்

உங்கள் கொள்கை கோட்பாடுகளைப்
பார்ப்பதில்லை அவர்களால் முடிந்த அளவு உங்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்குகிறார்கள்
இந்த பரஸ்பர ஒத்துழைப்பும், புரிந்துணர்வும் எப்போதும் இருக்கவேண்டும் என்பதுதான்
எமது பிரார்த்தனை.
இயக்க வேறுபாடின்றி 
அனைவரது ஒத்துழைப்பையும்
பெற்றால் ஒரு மிகப்பெரிய அணர்த்தத்துக்கூட தீர்வு காணமுடியும் என்பதை கண்கூடாக
இப்போது நாம் கண்டு வருகின்றோம்.


அப்படியிருக்க "தக்பீர் கட்டுவது

தொடக்கம் தராவிஹ் தொழுவது
வரை" சில்லரை சிக்கல்கலுக்காக
மிகப்பெரிய ஒரு சமூகப் பலத்தை
நாம் இழந்து தவிக்கின்றோம்.
இந்த நிலை மாறவேண்டும்.
"முஸ்லிம் சமூகம் சார்பாக SLTJ களத்தில்"
என்று சிங்களத்தில் வொய்ஸ் கட்
கொடுக்கும் நீஙகள் சமூகத்தின்
எல்லாத்தரப்பினருடனும் இணைந்து செயற்படும் பக்குவத்தை
வளர்த்துக் கொள்ள வேண்டும்.


நீங்கள் விளம்பரத்துக்காக
T- Shirt போட்டு வேலை செய்கிறீர்கள்
என்று யாராவது விமர்சிக்கும் 
பொழுது "உள்ளங்களை அல்லாஹ்
அறிந்தவன்" என்று பதில் சொல்லத்
தெரிந்த உங்களுக்கு
ஏனைய ஜமாத்தினரை ஷீயா, கபுருமுட்டி, முர்தத் என்று ஃபத்வா
வழங்கும் பொழுது "உள்ளங்களை
அல்லாஹ் அறிந்தவன்" என்பது
நினைவுக்கு வருவதில்லை.
எல்லா சமூக்துக்குள்ளும் கலந்துரையாடுவதற்கு விடயங்கள் இருககத்தான் செய்யும் அவற்றைத் 
தடுக்க முடியாது.


ஆனால் அவற்றைக் காரணம் காட்டி சமூகத்தை கூறுபோடுவதயைே நாம் எதிர்க்கின்றோம்.
இந்த வெள்ளம் எமக்குள் இருக்கும்
இயக்கக் கரையை கழுவிச் செல்லட்டும். உடன்படக்கூடிய விடயங்களிலேனும் ஒற்றுமையாக
செயற்படுவோம்.
முரண்பாடான விடயங்களை 
அழகாக ஆராய்ந்து உள்ளங்கள் 
நோகாத வன்னம் எத்திவைப்போம்.
இலங்கையின் இஸ்லாமிய இயக்கங்ள்தான் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பலம்.
அதுவே எமது சமூகத்தின் பலவீனமாகவும் இருக்கின்றது.
எல்லோரும் ஒன்று சேர்ந்தால்
மூழ்கப்போகும் ஒரு ஊரையே
மூன்று நாளில் காப்பற்றிவிட
முடியும் என்றால்,
எல்லா நாளும் இந்த ஒற்றுமை
இருந்தால் எத்தனை பலசேனக்கள்
வந்தாலும் எம்மை அசைக்க முடியாது.

( முக்கிய குறிப்பு :  மேற்படி கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாசிரியருக்கே சொந்தம், அவை "மெளலவி லீலைகள்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை.)






2 comments:

  1. Ellarum Quran Hadhees than padikkurange.. but atthai padikkum pothu purithalil ulle prblm ithu

    ReplyDelete
  2. அருமையான பதிவு.

    ReplyDelete