காத்தான்குடியில் இருந்து மல்வானைக்கு வந்த சஹ்ரான் மெளலவி தலைமையிலான தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பும், நபவியா தரீக்கா இளைஞர்களும் தமக்கிடையே மோதிக்கொண்டு உள்ளனர்.
வெள்ளத்தை பயன்படுத்தி இயக்கத்தை வளர்ப்பது, அதை விட முக்கியமாக தமது இயக்கம், அமைப்பு களத்தில் இருப்பதாகக் காட்டி அதன் மூலம் பெருமளவு வெளிநாட்டு நிதிகளைப் பெற்று, தம்மை வளப்படுத்திக் கொள்வது என்கின்ற நோக்கத்துடன் இயக்கங்கள் இயங்குவதால் தம்மை புகைப்படங்களில் தெளிவாக அடையாளப்படுத்த T Shirt அணிந்தே அதிகமான இயக்கங்கள் வெள்ள நீரில் காலை நனைக்கின்றனர்.
அல்லாஹ்வின் தூய மார்க்கத்தின் பெயரை பயன்படுத்தி கொள்ளை அடிப்பது போலவே, வெள்ளத்தின் கலங்கிய தண்ணீரை பயன்படுத்தி அதிகம் கொள்ளை அடிப்பது யார் என்பதில் ஏற்பட்ட போட்டிகளில் ஒன்றின் விளைவாகவே இந்த தரீக்கா- தவ்ஹீத் மோதல் இடம்பெற்றுள்ளது. இது முஸ்லிம்களுக்கு பெருத்த அவமானமாக அமைந்துள்ளது.
வெள்ள நிவாரணத்திற்காக பணமாக, பொருளாக உதவ விரும்புகின்றவர்கள் பொருத்தமான, நம்பிக்கையான அமைப்புகள், தனிநபர்கள் மூலம் தமது ஒத்துழைப்பை, உதவிகளை வழங்குவதுடன், பெயர் போட்டு, படம் காட்டி, அதன் மூலம் கொள்ளை அடிக்க காத்திருக்கும் இயக்கங்களை முற்றாக புறக்கணிக்க வேண்டும்.
No comments:
Post a Comment