Thursday, November 19, 2015

பொல்கஹவலையில் தப்லீக் ஜமாத் தாக்குதலில் பலர் வைத்தியசாலையில் - இயக்க மோதல்

Abu Iman Sahwi யின் முகநூலில் இருந்து

பொது பலாய் சேனாவின் பனியை தப்லீக் ஜமாஅத் பொறுப்பேற்றுள்ளதா?

பொல்காவளையில் இஸ்லாமிய பிரச்சாரப் பணியில் ஈடுபட்ட சகோதரர்களை தப்லீக் ஜமாஅத்தினர் பலர் கூடி கடுமையகத் தாக்கி பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்லீக் ஜமாஅத்தினர் செய்த இக்காடைத்தனத்தினை, அராஜகத்தினை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தஃவா என்பது மக்களை தூய மார்க்கத்தில் வாழ வைக்கும், நல் ஒழுக்கத்தை போதிக்கும் முயற்சியாகும்.
சிலர் இஸ்லாமிய இபாதத்தை ( அக்லாக்கை) மக்களிடம் கொண்டுவரப் பாடுபடுகின்றனர். சிலர் இஸ்லாமிய அரசியலை நிலைநாட்ட பாடுபடுகின்றனர். தவ்ஹீத் ஜமாஅத் இவை அனைத்தின் அச்சாணியாக அமைய வேண்டிய இஸ்லாமிய அகீதா சீர்திருத்தத்துக்கும், இஸ்லாமிய மூலாதரத்தில் அடிப்படையில் வாழவைப்பதற்க்கும், சமூகக் கொடுமைகளை ஒழிப்பதற்க்காகவும் பாடுபடுகின்றது.

மார்க்கத்தினை புரிந்துகொள்வதிலும் போதிப்பதிலும்
கருத்துக்கள் வேறுபடலாம்,
கருத்தை முறையாக கருத்தால் எதிர்கொள்வது பிரச்சினையேயில்லை. அதுவே இஸ்லாம் போதிக்கும் அழகிய வழிமுறையாகும்.

ஆனால் தப்லீக் ஜமாஅத் எனும் இயக்கம் அறிவால் வளர்த்தெடுக்கப்படாமல் வெறும் உணர்வுகளால் மட்டுமே வளர்த்தெடுக்கப்பட்டுள்ள ஒரு இயக்கம் என்பதனால் அந்த இயக்கத்தைச் சார்ந்தோர் கடந்த பல தசாப்தங்களாக இலங்கையில் ஏற்பட்டுவரும் ஏகத்துவ எழுச்சியை கண்மூடித்தனமான இயக்க வெறியினால் அராஜகத்தினாலேயே எதிர்க்க முற்பட்டுள்ளனர். நாட்டின் பல பாகங்களிலும் வன்முறையப் பாவித்துள்ளனர். இவர்களின் வழிமுறையையே தரீக்காவாதிகளும், ஹுப்புக்களும் பின்பற்றினர்.





ஜம்மிய்யதுல் உலமாவினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஜமாஅத்தின் தஃவாப் பணிகளுக்கு தப்லீக் எனும் பெயரில் அராஜகம் புரிந்த நாட்டில் அமைதிக்கு ஊருவிளைவித்த, இஸ்லாமியர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்திய தஃவாவின் பெயரில் காடைத்தனம் நடத்தியவர்கள் விடயத்தில் ஜம்மியத்துல் உலமாவும் தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்த அதன் தலைவரும் எப்படி நடந்துகொள்ளப் போகிறார்கள்.


தப்லீக் ஜமாஅத்தின் அராஜகம் தொடர்வது ஆரோக்கிமானதல்ல அதை பொலிஸ் கோர்ட் எனப் போய் அடக்குவதை விட ஜம்மிய்யத்துல் உலமாவினாலும் அதன் தலைவரினாலும் அடக்குவது இலகுவானதாகும். ஏனெனில் ஜம்மிய்யதுல் உலமா தப்லீக் ஜமாஅத் ஆதிக்கத்திலேயே உள்ளது. தப்லீக் ஜமாஅத்தினரை வெறும் உணர்வு நிலையிலிருந்து விடுவித்து அறிவு நிலைக்குக் கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


இப்படியான பிரச்சினைகள் வரும்போது போலி ஒற்றுமை கோஷம் போடும் சிலர் எப்போதும் சத்திய மார்க்கதை பேசுவோரை, ஷிர்க் பித்அத்தை அடையாளம் காட்டுவோரையே அனியாயமாக குற்றம் சாட்டுவதும் ஒற்றுமைக்குப் பாதகம், குழப்பம் என்று தத்துவம் பேசும் வழமை. இக்கண்மூடித்தனம் மண்மூடிப்போக வேண்டும். இத்தகைய சகோதரர்களிடம் ஒரு கேள்வி ?


ஷிர்க், பித்அத்தை, இஸ்லாத்தின் பெயரில் நடக்கும் அனாச்சாரன்களை நாகரிகமாக தக்க ஆதாரத்துடன் சுட்டிக்காட்டுபவன் குழப்பவாதியா ? அல்லது அதை அராஜகமாக எதிர்ப்பவன் குழப்பவாதியா ?


அனியாயமாக பாதிக்கப்பட்டோரின் பிராத்தனையை பயந்துகொள்ள வேண்டுகின்றென். அநியாயத்துக்கு ஆதரவளிப்பதும், உண்மையை மூடிமறைத்துப் பேச முற்படுவதும் அநியாயமே.
மனவேதனையுடன்
அபூ இமான் ஸஹ்வி

( முக்கிய குறிப்பு :  மேற்படி கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாசிரியருக்கே சொந்தம், அவை "மெளலவி லீலைகள்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை. )





No comments:

Post a Comment