புதிதாக மாறிய வீட்டில் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். திடீரென கதவு தட்டப்படும் ஓசை, அப்போதுதான் கூடி வந்து கொண்டிருந்த தூக்கத்தை கலைத்துவிட காதுகளைக் கூர்மையாக்கி மறு தட்டுதலுக்காகக் காத்திருந்தேன். மீண்டும் கதவுகள் தட்டப்பட்டன. தட்டப்பட்டது எனது வீட்டுக் கதவுதான் என்பதை உறுதி செய்த பின், இந்த நள்ளிரவு ஒரு மணிக்கு யாராக இருக்கும் என்ற கேள்வியோடு கதவை நோக்கி நடந்தேன். பல பல யோசனைகள் மனதுக்குள், என் வீட்டைச் சுற்றி மூன்று வீடுகள் சிங்களவர்களுடையது. மனதின் மூலையில் இனந்தெரியாத ஒரு பீதியும் தொத்திக் கொண்டது. தட்டுதல் சத்தம் என் குழந்தைகளையும், நோயாளி மனைவியையும் எழுப்பிவிடுவதற்கு முன்னால் யாரென்று பார்த்து விட அவசரமாக கதவை நோக்கி விரைந்தேன். என் கால் சத்தம் கேட்டதும் தட்டுவதல் சத்தம் நின்றுவிட்டது.
கதவுத்துவாரத்தினூடாக நோக்கினேன். யாரையும் காணவில்லை. பீதி அதிகமானது. அடுத்த தட்டுதலுக்காக அமைதியாய் காத்திருந்தேன். "அங்கிள்" "அங்கிள்" ஒரு சிறுவனின் குரல் கேட்டது. அவசரமாக கதவைத் திறந்தேன். 12 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் நின்றிருந்தான். வீடு மாறி வந்த நாளிலிருந்து அவனை அடிக்கடி வெளியே பைசிக்கிளில் கண்ட ஞாபகம். இந்த நள்ளிரவில் எதற்காக வந்திருப்பான் என்ற, என் மனதில் எழுந்த கேள்வியை அச்சிறுவன் ஊகித்திருக்க வேண்டும்.
"அஸ்ஸலாமு அலைக்கும் அங்கிள், உம்மாவுக்கு வருத்தம், உதவி செய்ய முடியுமா அங்கிள் என்று கேட்டான். வாப்பா எங்கே என்று கேட்டேன். வாப்பா வெளியூர் போயிருக்கிறார் அங்கிள்" என்று சொன்னான். பெண் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் அவசரமாக மனைவியை எழுப்பிக்கொண்டு பக்கத்து வீட்டிற்குச் சென்றோம்.
அங்கே அந்தச் சிறுவனுடைய தாய் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தார். அவசரமாகச் சென்று காரை எடுத்துக்கொண்டு வந்தேன். எனது மனைவியினதும் அங்கு நின்ற அந்தச் சிறுவனின் மூத்த சகோதரியினதும் உதவியுடன் அந்தப் பெண்மணியைக் காரில் ஏற்றிக்கொண்டு வைத்தியசாலையில் அனுமதித்தோம். தாமதமாகி வந்ததனாலும் நீர்ப்பை உடைந்து அதிக நேரம் கடந்து விட்டதனாலும் மிகவும் இக்கட்டான நிலமையில் பலத்த போராட்டத்தின் பிறகே அந்தத் தாய் குழந்தையை பிரசவித்தார். அல்ஹம்துலில்லாஹ்.
அழகான ஒரு ஆண் குழந்தை. வாப்பாவுக்கு கோல் பண்ணி சொல்லிடுங்க மகன் என்றேன். சொல்லியாச்சு அங்கிள், காலையில வாப்பா வந்திடுவாங்க என்றான் அந்தச் சிறுவன். வைத்தியசாலை சம்பிரதாயங்களை முடித்துவிட்டு வீடு வந்து சேர அதிகாலை 6 மணிக்கு மேலாகிவிட்டது. தேவையான நேரத்தில் ஒருவருக்கு உதவக் கிடைத்த மன நிறைவிலும் சந்தோசத்திலும் படுத்தவுடனே தூக்கம் போய்விட்டது.
பின்னேரம் அஸர் தொழுகையின் பின் வராந்தாவிலே உட்கார்ந்து தேநீர் அருந்திக்கொண்டு பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்த என் கவனத்தை அந்த "அஸ்ஸலாமு அலைக்கும்" கலைத்துவிட நிமிர்ந்து பார்த்தேன். ஒரு வெள்ளை ஜுப்பா, பெரிய தாடி, நெற்றியிலே தொழுவதால் உண்டான அடையாளம், ஒரு மனிதர் நின்றிருந்தார், அவரின் பக்கத்தில் அந்தச்சிறுவனைக் கண்டதும் இவர்தான் அந்தப்பையனின் தந்தை என்பதை ஊகித்துக்கொண்டேன். வலைக்குமுஸ்ஸலாம், வாங்க, வந்து உட்காருங்கள் என்றதும் முன்னால் அமர்ந்து கொண்ட அவர் "ஜஸாகல்லாஹுஹைர்" என்று கூறினார். "பாறகல்லாஹ்" என்று கூறி அதனை ஏற்றுக்கொண்டு, நாங்கள் வந்து 20 நாட்களுக்கு மேலாகிறது, ஒரு தரமேனும் நான் உங்களைக் காணவில்லையே என்று கேட்டேன்.
அதற்கு அவர், நான் அல்லாஹ்வுடைய பாதையில் நாற்பது நாள் சில்லா ஒன்று போயிருந்தேன் என்றதும் மனதில் ஒரு சங்கடம், சிறிதாக கோபம் வந்துவிட்டது, அத்துடன் நிற்கவில்லை அவர், பாருங்கள் அல்லாஹ்வின் ஹொதரத்தை. சுபஹானல்லாஹ், நான் நாப்பது நாள் ஜமாத் போகும் போது என் மனைவியை அல்லாஹ்வின் பொறுப்பிலேயே விட்டுச்சென்றேன், சுற்றி இருந்தவர்கள் அனைவரும் சிங்களவர்கள், ஆனால் அல்லாஹ்தான் உங்களை இங்கு கொண்டுவந்து சேர்த்திருக்கின்றான் என்றதும் கோபம் தலைக்கேறிவிட்டது.
வீட்டே வந்த விருந்தாளி என்று கூடப் பார்க்காமல், அறிவருக்குதாய்யா உனக்கு, மூளை கெட்ட ஜென்மங்களா, நிறை மாதப் புள்ளத்தாச்சிப் பொம்புளய எந்த வித முன்னேற்பாடுமின்றி தட்டத்தனியா விட்டுப்போக உங்களுக்கெல்லாம் எப்படிடா மனசு வருகுது? இன்னும் கொஞ்சம் பிந்திப் போயிருந்தாப் பொண்டாட்டியும் இல்ல புள்ளயும் இல்லை, மையத்துக்குத்தான் வந்திரிக்கோணும், புள்ளை குடுத்தா மட்டும் போதாது, குடும்பத்த பாதுகாக்கவும் தெரிஞ்சிருக்கணும், என்னமோ ஜிஹாத் போன மாதிரி பீத்திக்கிறீங்க, நல்லா வயிறு முட்டத் திண்டிட்டு தூங்கத்தானே போன, வீட்டில வயசான பெற்றோர் இருந்தா ஜிஹாத்துக்கே நபி (ஸல்) அவங்க அனுமதி குடுக்கல்ல, அதெல்லாம் எங்கே தெரியப் போகுது, குர்ஆன் ஹதீஸ் வாசிச்சாத்தானே. இதை நாளைக்கிக் கொண்டு போய் பெரியார் கதையாக்கி மக்களை முட்டாளாக்கிர வேணாம், திடீரென என் மனைவியின் கை என்னில் பட அமைதியாகிக் கொண்டேன், பாவம் வீட்டிற்கு வந்த மனிஷன் தலையைக் குனிந்து கொண்டே வெளியேறினார்.
( முக்கிய குறிப்பு : மேற்படி கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாசிரியருக்கே சொந்தம், அவை "மெளலவி லீலைகள்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை. )
Ho,,, mr.arivaali... It doesnt mean they are fools. Means tahwakkul.People think I have to do all the works for my family. Without me, nothing is gonna happen. But now Allah swt has shown us, He is doing everything. He doesnt need anyone's help..
Sahabaas gone on jihad leaving their wives and children.
In this era, this is jihad. Sacrificing our life, leaving our family, business, jobs and etc on Allah's path.. we cant go and fight with these khafir fellows. And performing stage bayaans and posting things on internet wont be considered as jihad. This is what you all are doing.
Before finding loop holes in jamath, look at yours. Dont think only you all are in the right way..
And you said about mother stuffs.Mother's law applicable only to mothers ok. Not to all.
I know you will not get what iam saying. Because, Allah has locked your heart from understanding this holy thing... Ellarum solraanga tan, naanga tan sorkawaadi endru.. Allah naalaiku Saabiqoon group, Maimoona group, Mash'ama group endru pirikkjm podu tan, unmai theriya warum.. so, ungala wittaa aal illa nu, romba thulla kudadu.
I never want to hurt anyone.. I replied to your post. Thats all. Thanks.
u think u an intelligent fellow accept first correct events and don't compare thableegh with jihad islam is not a way forming yourself I can clearly put an accusation over u your Islamic knowledge is very very poor seek the knowledge allah will show the guidance.
தம்பி நல்ல வேலை இப்ராஹீம் நபி காலத்தில் இல்ல இருந்து இருந்தால் புள்ளய அருக்கபோன நபிக்கே ஆப்பு வச்சிருபாரு அப்பறம் இவரு மனிதர்களுக்கு மத்தியில் விட்டத்துக்கே இப்படி என்றால் மனித சஞ்சாரம் அற்ற இடத்தில் விட்ட நபிக்கு செம வாங்கு வாங்கி இருப்பிங்க போல நபிகள் நாயகம் அவர்கள் ஒரு தவரே நடந்தாலும் ஏன் இப்படி ஏன் அப்படின்னு கேக்க மாட்டாங்க நானும் என் கண்னையும் வச்சிட்டு சும்மா இருந்து இருக்கனும் மனசு கேக்கல மன்னிக்கவும் மன்னிக்கவும் மன்னிக்கவும்
Ho,,, mr.arivaali...
ReplyDeleteIt doesnt mean they are fools. Means tahwakkul.People think I have to do all the works for my family. Without me, nothing is gonna happen. But now Allah swt has shown us, He is doing everything. He doesnt need anyone's help..
Sahabaas gone on jihad leaving their wives and children.
In this era, this is jihad. Sacrificing our life, leaving our family, business, jobs and etc on Allah's path.. we cant go and fight with these khafir fellows. And performing stage bayaans and posting things on internet wont be considered as jihad. This is what you all are doing.
Before finding loop holes in jamath, look at yours. Dont think only you all are in the right way..
And you said about mother stuffs.Mother's law applicable only to mothers ok. Not to all.
I know you will not get what iam saying. Because, Allah has locked your heart from understanding this holy thing...
Ellarum solraanga tan, naanga tan sorkawaadi endru.. Allah naalaiku Saabiqoon group, Maimoona group, Mash'ama group endru pirikkjm podu tan, unmai theriya warum.. so, ungala wittaa aal illa nu, romba thulla kudadu.
I never want to hurt anyone.. I replied to your post. Thats all. Thanks.
u think u an intelligent fellow accept first correct events and don't compare thableegh with jihad islam is not a way forming yourself I can clearly put an accusation over u your Islamic knowledge is very very poor seek the knowledge allah will show the guidance.
DeleteTHABLEEG karerde details poodunge, illati inthe PJ Karerde details poodunge. Summa BABA hukum news poodame!!!
ReplyDeletePaithiya kaaranuhal....
ReplyDeleteதம்பி நல்ல வேலை இப்ராஹீம் நபி காலத்தில் இல்ல இருந்து இருந்தால் புள்ளய அருக்கபோன நபிக்கே ஆப்பு வச்சிருபாரு
ReplyDeleteஅப்பறம்
இவரு மனிதர்களுக்கு மத்தியில் விட்டத்துக்கே இப்படி என்றால்
மனித சஞ்சாரம் அற்ற இடத்தில் விட்ட நபிக்கு செம வாங்கு வாங்கி இருப்பிங்க போல
நபிகள் நாயகம் அவர்கள் ஒரு தவரே நடந்தாலும் ஏன் இப்படி ஏன் அப்படின்னு கேக்க மாட்டாங்க
நானும் என் கண்னையும் வச்சிட்டு சும்மா இருந்து இருக்கனும் மனசு கேக்கல மன்னிக்கவும் மன்னிக்கவும் மன்னிக்கவும்