சுமார் 80 முஸ்லிம் விவசாயக் குடும்பங்கள் வசித்து வரும் போகஹதமன கிராமமானது, ஹிந்குராங்கொடை நகரில் இருந்து 7 km தொலைவில் அமைந்துள்ளது. நாலாபுறமும் சிங்கள பெரும்பான்மை மக்கள் சூழ, சிறுபான்மையினராக முஸ்லிம்கள் வசித்து வரும் இக்கிராமத்தில் பள்ளிவாசல் ஒன்று இதற்கு முன்னர் இருக்கவில்லை.
கடந்த மாதம், வெளிநாட்டு (அரபு நாடு) பண உதவியுடன் புதிய பள்ளிவாசல் ஒன்று நிர்மாணிக்கப்படும் வேலைகள், உரிய அனுமதியுடன் மும்முரமாக ஆரம்பமாகின. பள்ளிவாசல் பாதியளவு கட்டப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், டோசர், பெகோ இயந்திரம் மூலம் இந்த பள்ளிவாசலை பெரும்பான்மையின சிங்களவர்கள் உடைத்து தரைமட்டமாக்கி உள்ளனர்.
ஊர் மக்களையும் கொலை செய்வதாக அச்சுறுத்தி உள்ளனர்.
இது குறித்த விபரமான செய்தியும், படங்களும் சகோதர ஊடகமான மடவளை நியூஸ் இல் இடம்பெற்றுள்ளன.
குறித்த செய்தியை முழுமையாக வாசிக்கவும், அமைச்சர்கள் ஹலீம், ஹக்கீம், ரிஷாட் குறித்த விமர்சனங்களை அறிந்துகொள்ளவும் :
http://madawalanews.com/61529
நன்றி : மடவளை நியூஸ்
No comments:
Post a Comment