Wednesday, February 18, 2015

"சூரியன் பூமியை சுற்றுகின்றது" முட்டாள் வஹ்ஹபிய முல்லாவின் பத்வா

வாசகர் ஆக்கம் : அபூ முப்தி
அறிவியல் உலகம் விஞ்ஞான வளர்ச்சியில் முன்னேறிய இன்றைய காலத்தில், குர்ஆன், ஹதீஸ் என்று உயிரை விட்டு, சவுதிக் காசில் ஊரை, குடும்பத்தை பிரிக்கும் வஹ்ஹாபியக் குஞ்சுகளின் பெரிய வஹ்ஹபி ஒன்று சவுதியில் அடிமுட்டாள் தனமான பத்வா ஒன்றை வழங்கியுள்ளது.

பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றி வருகின்றது என்பது இன்று சிறு பிள்ளைகளுக்கும் தெரிந்த ஒரு உண்மை ஆகும். தன்னை பெரிய மார்க்க அறிஞர் என்று சொல்லிக்கொண்டு இஸ்லாம் போதிக்கும் வஹ்ஹபிய ஷேய்க் இற்கு இந்த சின்ன விடயம் கூட தெரியாதது மட்டுமல்ல, எல்லாம் தெரிந்த  பண்டிதர் என்று நினைத்துக் கொண்டு மாணவர்களுக்கு விளக்கமும் கொடுக்கின்றது இந்த வஹ்ஹாபி.

ஷேய்க் பந்தர் அல் கைபாரி விஞ்ஞான விளக்கம் கொடுக்கும் முட்டாள் விடியோ இந்த லிங்க் இல் காணப் படுகின்றது.

https://www.youtube.com/watch?v=LJXjwzjucCU



பூமி சுற்றுவது இல்லை, பூமி ஒரே இடத்தில் அப்படியே இருக்கிறது, சூரியன்தான் பூமியை சுற்றி வருகின்றது என்று சொல்கின்றது இந்த வஹ்ஹபி. பூமி சுற்றினால் சார்ஜாவில் இருந்து விமானத்தில் ஏறி வானத்தில் அந்தரத்தில் நின்றுகொண்டு இருந்தால், சிறிது நேரத்தில் சீனா நாடு அங்கே வந்துவிடும், உடனே இறங்கி விடலாம் என்று சொல்கின்றான்.

முதலில் ஒரு விடயத்தை இந்த முட்டாள் புரிந்துகொள்ள வேண்டும், விமானத்தை ஆகாயத்தில் அந்தரத்தில் நிறுத்தி வைக்க முடியாது,விமானம் என்பது கார் மாதிரி ரோட்டில் கண்ட கண்ட இடத்தில் பார்க் பண்ணும் ஒன்று அல்ல.

 மற்றது, பூமி சுற்றும் பொழுது, பூமியை சூழ இருக்கும் வளி மண்டலமும் சேர்ந்தே சுற்றுகின்றது, இந்த அளவுக்கு சிறிய அறிவியல் விடயங்களைக் கூட புரிந்து கொள்ளும் அறிவு வஹ்ஹபிய வெறிபிடித்த மண்டைகளுக்கு இருக்குமா என்று தெரியவில்லை. அனால், விரல் ஆட்ட வேண்டுமா? யார் முஷ்ரிக், எவன் பித்தத் வாதி, எவன் நரகவாதி என்று கேட்டால் இவன்களின் அறிவை பார்க்கலாமே? வேறு என்னத்துக்குத்தான் வஹ்ஹபிகள் லாயக்கு?

பூமி  சுற்றுகின்றதா என்று கூட தெரியாத மடையர்கள், இன்டர்நேஷனல் பிறையா, லோக்கல் பிறையா என்று தீர்ப்பு சொன்னால் எப்படி இருக்கும்?

இவங்கள்தான் இப்பொழுது சூனியம் சூனியம் என்று பெரிய விஞ்ஞான ஆராய்ச்சி பண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள். கலிமாவை எழுதி, அதற்குக் கீழே கழுத்தை வெட்டும் கொலைகார வாள் படம் போட்டு, கலிமாவுக்கு வாளால் பரப்பப் பட்டது என்று அவப்பெயரை உலக அரங்கில் ஏற்படுத்திக் கொடுத்துள்ள அப்துல் வஹ்ஹாப், அல் சவூத் கூட்டமைப்பில் உருவாகிய சவூதி அரேபியாவின் வஹ்ஹபிகளிடம் வேறு என்னதான் மண்டையில் இருக்க போகிறது?


அறிவுகெட்ட வஹ்ஹாபிய முட்டாள் முல்லாக்களின் மூளைகெட்ட கூத்துக்களை பார்க்கும்பொழுது பார்க்கும் பொழுது முஸ்லிம்களுக்கு தலை சுற்றுகின்றது.


( முக்கிய குறிப்பு :  மேற்படி கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாசிரியருக்கே சொந்தம், அவை "மெளலவி லீலைகள்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை. ) 



8 comments:

  1. அண்மைகாலத்தில் இருந்து மௌலவி லீலைகள் புதிர் மற்றும் அதிரடி கதைகள் எழுது தொடங்கி விட்டது. ஒருவேளை இயக்கங்கள் பற்றி ஒழுக்கான குறைகள் சொல்ல முடியாமல் இருப்பதால்.. பக்கங்ளை நிரப்ப இப்படி எழுது தொடங்கி விட்டார்கள் போல்..
    பாயிஸ் வந்து எழுப்பி இல்லாவிட்டால் மௌலவி லீலையும் சொம்பி போய் இருக்கும்.

    மௌலவி லீலைக்கு…. உங்கள் நோக்கத்துடன் தொடர்பில்லாத செய்திகளை நான் சுட்டிகாட்டி வந்துள்ளதை கவனத்தில் கொள்ளுங்கள்..

    வாசகர்களே… இவர்கள் குறைதேடி சொல்லும் அளவுக்கு இன்று இயக்கங்கள் முட்டாள்களாக செயற்படுவதில்லைää அதனால் சவ10தியில் இருந்து ஒரு மௌலவி கதையை தேடிபிடித்து இருப்பதுடன்.. ஜமாத்தே இஸ்லாமிக்கு சேரு பச ஒரு முடிந்து போன ஆதாரம் இல்லாத இந்திய சஞ்சிகையில் வருவது போன்ற ஒரு ஜீகாத் கதை.

    அசாத் கனேதன்ன

    ReplyDelete
  2. Ԍreat web site. Plenty օf usеful informatiօn herе.
    I'm sеnding it to a fеw friends ans also sharing іn delicious.
    Аnd certainly, tҺanks in оur effort!

    Also visit my weblog ...gfgfgfghhyt

    ReplyDelete
  3. அடே எருமை மாடு அல்லாஹ் பெரிசா அல்லது அல்லாஹ்வை விட விஞ்ஞாணம் சிறந்தா. அல்லாஹ் குர்ஆணில் கூறுஹிண்றான் சூறியண் பூமியை சுத்து கிண்றது எண்று நீ எவ்வாரு இல்லை எண்று கூறுகிண்றாய்

    ReplyDelete
  4. Allah Quran la ada enga sollran, konjam adu endha sura endha ayathunnu kaata mudiyuma?

    ReplyDelete
  5. Pls look the sura 39:5 and 36: 36-40

    ReplyDelete
  6. Look at FB comments for this post. already having snap shot quran verses

    ReplyDelete
  7. tnank you i have read it. nowere it says sun rotating around earth.
    dont twist the meaning of Quran for your own religious view.

    ReplyDelete
  8. Hey fool read it clearly or go to any aalim ask explanation for that

    ReplyDelete