நாங்கள்
ஒருவாறாக அல்-பத்ர் 1 கேம்பினை வந்தடைந்தோம். கற்களும் மலைகளும் நிறைந்த
சஞ்சாரமற்ற நிலவியல் அமைப்பினை உடைய முகாமை அடைய சிறிது தூரம் நடந்து செல்ல
வேண்டும். நாங்கள் கேம்பை நோக்கி ஏற ஆரம்பித்தோம். மலையின் ஒவ்வொரு
படிக்கட்டும் எங்களிற்கு சொற்கத்தின் வாசற்படியை நோக்கிய படிகற்களாகவே
தெரிந்தன.
அல்-பத்ர் பிரகேட். காஷ்மீரின் விடுதலைக்காக 1971 ல்
உருவாக்கப்பட்ட அமைப்பு. ஆஸாத் கஷ்மீர், ஜம்மு கஷ்மீர் என இரண்டிலும் இதன்
செயற்பாடு காணப்பட்டது.
ஸ்ரீநகர் பாராமுல்லா, அனந்தாங், குப்வாரா, பூஞ் என அது பரவலாக பல பிரதேசங்களிலும் இயங்கிய அமைப்பு. காஷ்மீரை பிரித்து அந்த மக்களின் அபிலாஷைகளிற்கும் அப்பால் பலவந்தமாக பாகிஸ்தானுடன் இணைப்பதற்காக ஐ.எஸ்.ஐ. அதனை உருவாக்கியிருந்தது.
( ஐ.எஸ்.ஐ - ISI என்பது வேறு ISIS என்பது வேறு என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ளவும். ஐ.எஸ்.ஐ என்பது பாகிஸ்தானின் உளவுப் பிரிவு ஆகும் )
ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற பெயரின் கீழ் அது இயங்கினாலும் அதன் தாயமைப்பு ஐ.எஸ்.ஐ. ஆகும். சியா சென்னிலும், கார்க்கிலிலும் கூட இதன் போராளிகள் பாகிஸ்தானிய இராணுவத்தின் துணைக்குழுக்களாக இயங்கினர்.
காஷ்மீரில் பலம்வாய்ந்த பிரிவிணைவாத இராணுவத்தை உருவாக்குவதன் ஊடாக பாகிஸ்தானும், அமெரிக்காவும் இந்திய உப கண்டத்தில் தங்கள் பிராந்திய பூகோள நலன்களை நாடி நின்றதன் உருவாக்கமே அல்-பத்ர் பிரிகேட்.

இந்த பிரிகேட் ஹிஸ்பி இஸ்லாமி தலைவர் குல்புதீன் ஹிக்மதியாரின் கண்காணிப்பின் கீழ் மேற்கு பாகிஸ்தானில் அதன் பயிற்ச்சி தளங்களை அமைத்திருந்தது. ஜம்மு காஷ்மீரில் இருந்தும், ஆஸாத் காஷ்மீரில் இருந்தும் திரட்டப்பட்ட இளைஞர்களிற்கு பயிற்ச்சியளிப்பதற்காக இரண்டு முகாம்களை ஆப்கானில் அமைத்திருந்தனர் ஐ.எஸ்.ஐ.யினர்.
ஆஸாத் காஷ்மீரின் எல்லைப்புற பாகிஸ்தானிய இளைஞர்களையும் காஷ்மீர் சண்டைக்களங்களிற்கு அனுப்ப ஐ.எஸ்.ஐ.யினர் தேர்வு செய்திருந்தனர்.
அல்-பத்ர் 1 மற்றும் அல்-பத்ர் 2.
நாங்கள் சென்றடைந்தது அல்-பத்ர் 1 இற்கு. முதல் முகாமில் பிஸிகல் பயிற்சிகளையும், இரண்டாம் முகாமில் ஆர்.டீ.எக்ஸ், சீ4 போன்ற எக்ஸ்புளோசிவ் வெடிகுண்டுகளை கையாள்வதும் கற்றுக்கொடுக்கப்பட்டது.
ஆப்கானிய ஜிஹாத்திற்காக புறப்பட்டு பாகிஸ்தானுடன் காஷ்மீரை இணைக்கும் அசைன்மென்டின் ஒரு புரொஜக்டில் இறக்கப்பட்ட வரலாறு இது.
ஆனால் எம்மை பொறுத்தவரை இந்த விளக்கங்கள் அப்போது புரியவில்ல. அல்-பத்ர் பயிற்ச்சி முகாம் கூட எமக்கு ஆப்கானிய முஜாஹிதாவின் ஒரு களமாகவே புலப்பட்டது. இல்லை புலப்படவைக்கப்பட்டது. இது ஜிஹாத் என்ற பெயரில் அவர்கள் எம்மை ஏமாற்றிய முதல் கட்டம். மேலே சொல்ல இன்னும் நிறையவே உள்ளன. அவற்றையும் சொல்கிறேன்.
பென்டகன் உருவாக்கும் ஜிஹாத் களங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இதனை நான் பதிவிடுகின்றேன். அல்லாஹ்விற்காக மரணிக்க முன்வந்து அமெரிக்காவிற்காக மரணிக்கும் முட்டாள்தமான முஜாஹிதாவின் முகமூடி கிழிக்கப்படல் வேண்டும். இளைஞர்களை அமெரிக்க அரசியல் அஜண்டாவிற்கு ஏற்ப கொத்தாக காவு கொடுக்க துணை போகும் இஸ்லாமிய இயக்கங்கள் என்ற பெயரில் செயற்படும் நயவஞ்சக கூட்டங்கள் பற்றி முஸ்லிம்களிற்கு தெளிவு ஏற்படல் வேண்டும்.
அல்-குர்ஆனும், அல்-ஹதீஸும் சொல்லும் அந்த மகோன்னதமிக்க ஜிஹாத் களங்களை உலகில் தேடுவதில் முஸ்லிம்கள் அவதானமாக செயற்படல் வேண்டும். சரி இப்போது மீண்டும் ஆப்கான் பக்கம் திரும்புவோம்.....
நாங்கள் ஒருவாறாக அல்-பத்ர் 1 கேம்பினை வந்தடைந்தோம். கற்களும் மலைகளும் நிறைந்த சஞ்சாரமற்ற நிலவியல் அமைப்பினை உடைய முகாமை அடைய சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டும். நாங்கள் கேம்பை நோக்கி ஏற ஆரம்பித்தோம். மலையின் ஒவ்வொரு படிக்கட்டும் எங்களிற்கு சொற்கத்தின் வாசற்படியை நோக்கிய படிகற்களாகவே தெரிந்தன. வீர சொர்க்கம் நாடியல்லவா நாம் சொந்த தேசம் தொலைத்து கந்தக தேசம் வந்தோம்.
ஒரு இயக்க முகாமில் என்னென்ன வழிமுறைகளும் விதி முறைகளும் இருக்குமோ அது இங்கேயும் இருந்தது. ட்ரெய்னிங். பனிஸ்மென்ட் என்ற இரண்டு சக்கரங்களிற்கு நடுவில் எங்கள் காலங்கள் நகர்ந்தன. சில மாதங்களில் என்னை அந்த முகாமின் பொருப்பாளராக நியமனம் செய்தார்கள். அதற்கு காரணம் எனது இராணுவ மூளையல்ல. எனக்கு தெரிந்த மார்ஷல் ஆர்ட்ஸ் அவர்களை கவர்ந்தது. பிஸிகல் ட்ரெயினிங் கொமாண்டராக நான் எமது கேம்பினை பாரமெடுத்தேன்.
அடுத்து என்ன நடந்தது என்பதனை அடுத்த பகுதியில் எதிர்பாருங்கள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்......
No comments:
Post a Comment