Friday, September 26, 2014

பெருநாளைக் கூட தீர்மானிக்க தெரியாத அறிவிலிகளா உலமாக்கள்?

ஹஜ்ஜுப் பெருநாள் எப்பொழுது என்று அறிவித்தல் வெளியாகியுள்ளது. அல்லாஹ்வின் மார்க்கத்தில் அடிக்கடி குழப்பத்தை உண்டுபண்ணும் உலமாக்கள் என்னும் உலக்கைகள் இந்த விடயத்திலும் வழமை போலவே குழப்பத்தையே உண்டு பண்ணியுள்ளனர்.

சவூதி அரேபியாவில் சனிக்கிழமை பெருநாள், அத்துடன் மேலும் 71 நாடுகளில் சனிக்கிழமையே பெருநாள் கொண்டாடப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை 19 நாடுகளில் பெருநாள் கொண்டாடப்பட உள்ளது. அடுத்து திங்கட்கிழமை இலங்கை உட்பட 4 நாடுகளில் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. செவ்வாய்க்கிழமை கனடாவில் உள்ள PJ யின் TNTJ உம்மத்தினர் சிலர் பெருநாள் கொண்டாட உள்ளதாக அறிய முடிகின்றது.

பெருநாள் கொண்டாடுவதைக் கூட, இந்த அளவு கோமாளித்தனமான ஒரு விடயமாக மாற்றியுள்ளனர் உலமாக்கள் எனப்படும் புரோகிதர்கள்.

இதில் யார் சரி, யார் பிழை என்பதனை விட, இவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை முறையாக கற்றவர்கள் என்றால், ஏன் இவர்களால் பிறை குறித்து ஒரு முடிவிற்கு வர முடிவதில்லை?

பெருநாள் என்கின்ற விடயத்தில் கூட ஒருமித்த முடிவிற்கு வர முடியாதவர்கள், அல்லாஹ்வின் மார்க்கத்தின் மற்ற விடயங்களில் நமக்கு சரியாக வழிகாட்டுவார்கள் எனபதில் என்ன நம்பிக்கை உள்ளது?

இம்முறை இலங்கையில் பெருநாள் திங்கட்கிழமை என்று அறிவிக்கப்ட்டுள்ளமை, ஒரு வகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும், ஆம், கலண்டரில் குறிப்பிடப் பட்ட நாளை விட ஒரு நாள் பிற்படுத்தப்பட்டுள்ளது. இது வரலாற்றில் ஒர் ஏடு ஆகும்.


சர்வதேசப் பிறை என்று சொல்லிக்கொண்டு, பெரும்பாலும் சவுதிப் பிறையை மட்டுமே பின்பற்றுபவர்கள், சனிக்கிழமை பெருநாள் கொண்டாடி, ஞாயிற்றுக்கிழமை இடைவெளியும் கடந்த பின்னர், உலமா சபையை பின்பற்றுபவர்கள் ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்று திங்கட் கிழமை பெருநாள் கொண்டாடப் போகின்றனர்.

அதே நேரத்தில், அந்த அந்த ஊரில் பிறை பார்க்க வேண்டும் என்றும் ஊர் என்றால், இலங்கை ஒரு ஊர், தமிழ் நாடு ஒரு ஊர் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்று புதிய புவியியல் கற்றுக் கொடுக்கும் மேதாவி PJ யை பின்பற்றும் TNTJ மத்ஹபினர் பல அரபுநாடுகளில் வாழ்கின்றனர்.

பல அரபு நாடுகள் சவுதியை பின்பற்றி சனிக்கிழமையே பெருநாள் கொண்டாடப் போகின்றன. அப்படியானால், சவூதி அல்லாத மற்ற நாடுகளில் வாழும் PJ உம்மத்தினர் என்ன என்ன செய்யப் போகின்றனர் என்று தெரியவில்லை. இலங்கை, இந்தியா, கனடாவில் போன்று அரபு நாடுகளில் தனியாக பெருநாள் கொண்டாட முடியாது. ஆகவே, எல்லா அரபு நாடுகளும் ஒரு ஊர் என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்று PJ யின் ஞான அறிவுரைகள் ஏதாவது வெளியாகியுள்ளதா என்றும் தெரியவில்லை.

உலமாக்கள், மார்க்கத்தை உணமையிலேயே கற்றவர்கள் என்றால், பெருநாள் விடயத்தில் கூட இப்படியான முரண்பாடுகள் எப்படி வர முடியும்?

ஆகவே, உலமாக்கள் என்ற பெயரில், ஏமாற்றுக்காரர்கள் வேடம் போட்டுக் கொண்டு, வேடத்தையும், பட்டத்தையும் வைத்துக்கொண்டு சமூகத்தை ஏமாற்றுகின்றனர் என்கின்ற முடிவிற்கே வரவேண்டியுள்ளது. புர்ஹான், பளீல், ரிஸ்வி போன்றவர்களின் செயல்பாடுகளும் இதனையே உறுதிப்படுத்துகின்றன.



14 comments:


  1. ஜமாத்தே இஸ்லாமி இயக்கம் பெருநாள் பிறை தொடர்பில் சமூகத்தின் மத்தியல் குழப்பத்தை தோற்றுவிப்பதில்லை. இலங்கையின் பெரும்பான்மையானோரின் முடிவிற்கு மதிப்பளித்து. சமுகம் ஒற்றுமையை காத்து செயற்படுவதை பாராட்ட வேண்டும். ஏனைய இயக்கங்களும் இலங்கை முஸ்லிம்களின் நலனை கருத்திற்கு கொண்டு ஒரூ சுமூகமான தீர்வு காணும் வரை ஒரே தினததில் கொண்டாடினால் நல்லது என்பது எனது கருத்து. நான் இங்கு யாரையும் ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை. சமூகம் அந்நியர்கள் முன்னால் பிரிந்திருப்பது போல் தோன்றக்கூடாது என்பதை சுட்டி காட்டுகிறேன்.

    அசாத் கனேதன்ன

    ReplyDelete
    Replies
    1. அசாத், மகள் ஆயிஷா சித்திகாவில் படித்துவிட்டு வந்து இப்படி எழுத சொன்னாவா?

      முட்டாள் தனமான கருத்து, தப்லீக் ஜமாத்தும் சமூகத்தின் மத்தியில் பிறை குழப்பத்தை தோற்றுவிப்பதில்லை.

      Delete
    2. உங்கட சுமூகமான பிறை முடிவை உலகம் அழிந்ததற்கு பிறகா வழிகெட்ட ஜமாதே இஸ்லாமி அறிவிக்கப்போகின்றது. போன முறை கண்ணால் கண்ட பிரையை கூட ஏற்றூக் கொண்டு அறிவிக்க துப்பிள்ளாத இந்த இயக்கம் ஒரு முடிவுக்கு வரும்வரை காத்து இருக்கின்றார்களாம்.கேற்பவன் கேனயனாக இருந்தால் ஹஜ்ஜுல் அக்பர் போன்றவர்களுக்கு கொண்டாட்டமாம்.

      Delete
    3. Mr. anonymous WROTE """"""""முட்டாள் தனமான கருத்து, தப்லீக் ஜமாத்தும் சமூகத்தின் மத்தியில் பிறை குழப்பத்தை தோற்றுவிப் பதில்லை.""""""
      தப்லீக் ஜமா அத் இன் சரியான பெயர் ." தப் ( பு ) லீக் " ஜமா அத் .

      ...இந்த கூட்டம் பிறை பிரச்சாணியில் குழப்பம் செய்யும் முதல் கூட்டம் ,
      ஏனென்றா இந்த தப்பு லீக் காரனுகல்தான் உ ( லக்க ) மா ( ட்டு ) ஷபையில் உள்ளாராக்ள்... இந்த ஷபயின் தலைவன் RISVI யே இந்த தப்பு லீக்காரன்தான்............அ த்தோட இந்த " த ப் ( பு ) லீக் "கார கூட்டத்துக்கும் இஸ்லாமிய அறிவுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லயே....பொறகு எப்படி பிறை பற்றி சிந்தித்த்து விளங்க முடியும்.......
      இந்த கூட்டத்துக்கு தெரிந்தது எல்லாம் விலாசம் இல்லா பெரியவர் கதைகளும் மற்ற புராணங்களுமே....... சிந்தியுங்கள் சகோ.....

      Delete
    4. அசாத் அவர்களே நீங்கள் ஒற்ருமையாக பன்செலைக்குச் சென்று ஏன் சிலைகளை வணங்க கூடாது... ஏன் ஜனராசாவுடைய மதத்தை பின் பற்ற கூடாது... அப்ப எமக்கு எந்த பிரெச்சினையும் இல்லை அல்லவா?? உங்களுக்கு மார்க்கம் என்ன வென்று உங்கட அமீர் சொல்லி தர வில்லயா அல்லது நீங்கள் படிக்க வில்லயா அல்லது உங்கட மூலய அடகு வைத்துள்லீர்களா? ஜாமேதே ஏ இஸ்லாமி எனும் கிணற்றில் இருந்து வெலியே வாருங்கள், உருப்டுவீர்கள்...

      Delete
  2. பிரச்சினைகளை பற்றி மட்டும் எழுதுகிறீர்களே.. எழுதினால் மட்டும் பிரச்சினைகள் தீர்ந்து விடுமா? இவற்றிற்கெல்லாம் என்ன தீர்வென்று ஏன் யோசிக்கக் கூடாது?

    -நலன் விரும்பி

    ReplyDelete
  3. இலங்கை முஸ்லிம்களுக்கு,,,,,,,,

    பல வருடக் கணக்காக நாங்கள் ( நான் ) சொல்லி வருகிறேன்..... உலமா சபையின் அங்கத்தவருக்கு பல முறை எழுதி உள்ளேன்.. எதுவுமே கேட்க மாட்டார்கள் .மாறாக முஸ்லிம் சமூகத்தை வழி கேட்டில் செல்வதற்கே பயான் செய்கின்றனர்..... இதன் விளைவு .........,

    இலங்கை பிறை பாக்கும் குழு , வியாழக் கிழமை , 25 , செப்டம்பர் 2014 மஹ்ரிப் பின்னர் ஹஜ் முதல் பிறையை கண்ணால் பாக்க colombo பெரிய பள்ளியில் கூட்டம் போடுகிறார்கள்…… என்ன அறிவு ???

    இந்த மாவ்லவி கூட்ட த் தினால் முஸ்லிம்கள் , ஹஜ் பெருநாள் அன்று அரஃபா நோன்பு பிடிக்கப் போகின்றனர்….. நோன்பு பெருநாள் தினத்தில் பிடிப்பது ஹராம் என்பது இவர்களுக்கு தெரிந்தும் செய்கிறார்கள் என்றால் இந்த கூட்டம் யாருக்கு பயப்படுகிறார்கள் , யாரை பின்பற்றுகிறார்கள்.??

    அரஃபா நோன்பு எது , ..
    அரஃபா நாளில் ,அரஃபா வெளியில் ஹஜ் செய்பவர்கள் ஒன்று திரண்டு இருக்கும்போது , உலகின் மற்ற நாடுகளில் , பகுதிககளில் உள்ளவர்கள் பிடிக்கும் நோன்பு…..

    இது நடை பெறுவது எதிர்வரும் 03 OCTOBER 2014 , வெள்ளிக்கிழமை …… எனவே பெருநாள் சனிக்கிழமை 04 ஆம் திகதி......

    ஆனால் , இலங்கயிலோ ,03 OCTOBER 2014 , வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் நல்ல ரேடியோ பாட்டு கேட்டுகிட்டு , டீவீ ல போட்ற எல்லாப் படத்தயும் TV பட CALENDAR படி பாத்து பொழுதை போக்கி விட்டு , அடுத்த நாள் 04 septemeber, சனிக்கிழமை பெருநாள் அன்று அரஃபா நாள் நோன்பு என்று ஒரு நோன்பை பிடித்து ( முஸ்லிம் மக்களை பிடிக்க வைத்து ) பெரும் அநியாயம் செய்ய போகிறாரகள்….

    ஆனால், உலக்க மாட்டு சபை காரனுகள் , இதையும் மீறி ஒரு படி போய் , அரபா நாள் நோன்பு ஞாயிற்று கிழமை , 05 இல் பிடிக்க சொல்லி , பெருநாளை திங்கள் 06 ஆம் திகதி கொண்டாடவும் என்று முஸ்லிம்களை கேட்டுள்ளது......... இந்த உல ( க்க ) மா ( ட்டு ) சபை க்காரனுகள் சொல்கின்றபடி பாத்தா, இந்த கூட்டம் , பிறை 09 இல் பிடிக்க வேண்டிய அரபா நோன்பை , பிறை 11 இல் பிடித்து , பிறை 10 இல் கொண்டாடவேண்டிய பெருநாளை பிறை 12 கொண்டாட போறானுகள்....... ஐயோ....சமூகத்துக்கு நாசமே..........
    .இந்த பித் ஆன பாவத்துக்கு காரணம் இலங்கை உ . ஷபயின் ” வானவியல் அறிவியல் விஞ்ஞானி ( ??? ) யும் மற்றும் அந்த ஷபயின் மவ்லவிகளுமே….இவர்களுக்கே இந்த பாவம் சேரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை…..

    ReplyDelete
  4. என் பெயரை குறிப்பிட்டு கருத்து பதிவு செய்தவருக்கு... சரியான ஆண்மகன் என்றால் உங்கள் பெயரை குறிப்பிட்டு வேண்டியதொரு கருத்தை முன் வைக்கவும்.

    எனது விடயத்தில் மட்டு மல்ல பிறகும் வாழ்க்கையில் முன்னிற்க இந்த பழக்கம் உதவும்.

    எங்கள பார்த்தாவது கண்ணியம் என்பதை கற்றுக் கொள்ளுங்கள்.

    அசாத் கனேதன்ன..

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் நீங்கள்தான் அசாத் என்றால், Anonymous என்று ஏன் பதிவு செய்கிறீர்கள்? அதனால் தானே இந்தக் குழப்பம்.. உங்கட ஏதாவது ஒரு Account ஐ பாவித்தால் இந்த பிரச்சினை இல்லையே..

      - நலன் விரும்பி

      Delete
    2. பெயரை போட்டு கருத்து பதிவு செய்வதால் "சரியான ஆண்மகன்" என்று அர்த்தம் ஆகிவிடாது. பாத்திமா ரிசானா என்பவர் பாத்திமா ரிசானா என்று சரியான பெயரை போட்டு கருத்து பதிவுசெய்தால் அவர் "சரியான ஆண்மகன்" என்று ஆகிவிடுமா?

      மிஸ்டர் அசாத் of கனேதன்ன ஒரு அரைப்படித்த முட்டாளாக இருக்க வேண்டும் போல.

      யார் "சரியான ஆண்மகன்" என்று செக் பண்றது மட்டும்தான் ஒன்களின் வேலை என்றால் அசாத் தனது வீட்டுப் பெண்களை தனியாக அனுப்பி வைத்துவிட்டு, பிறகு அவர்களிடம் கேட்டுப் பார்த்தால் புரியும்.

      இம்தியாஸ்

      Delete
  5. இந்த இணைய பக்கத்தை நான் அவ்வப்போது பார்த்து வருகிறேன். இங்கு சில நல்ல மற்றும் பல பிழையான கருத்துக்கள் ஆசிரியர் மற்றும் ஏனைய வாசகர்களினால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


    இந்த தலைப்புடன் சம்பந்தப்பட்ட சில விடயங்களை மாத்திரம் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஒரு வாசகர் தப்லீக் ஜமாத் பிறை விடயத்தில் எவ்வித சர்ச்சையும் ஏற்படுத்துவதில்லை என்றார்; அது உடனடியாக என்னை ஏற்றுகொள்ள வைத்தது. ஆனால் இன்னுமொருவர் உலமா சபையில் பெரும்பாலானோர் தப்லீக் ஜமாத் ஆதரவாளர்கள் அதனால் எதிர்ப்பதில்லை மேலும் பிழையான முடிவிற்கும் அவர்களே காரணம் என்ற உண்மையை வெளிப்படுத்தினார். இந்த பதில் என்னை சிந்திக்கவும் தூண்டியது. உண்மையில் சில நல்ல விடயங்கள் இங்கு வெளிப்படுவதை வரவேற்கிறேன்.


    அவ்வாறே அசாத் என்பவரின் உள்நோக்கம் கொண்ட ஒரு கருத்தை, ஒருவர் அவரின் மகளை மேற்கோள் காட்டி நிராகரித்தார். இவர் அசாத்தை தெரிந்தவராக இருக்கக்கூடும். நிராகரிக்கும் போது மகளை மேற்கோள் காட்டியிருக்கக் கூடாது.

    அது போல் அசாத அதற்கு பதிலளிக்கும் போது தன்னை கண்ணியமானவர் போல் காட்டியுள்ளார். எனக்கு தெரிந்த ஒரு நண்பர் குறிப்பிடுகையில் அசாத் என்பவர் எவ்வித அடிப்படை இஸ்லாமிய அறிவோ கல்வி அறிவோ அற்றவர் என்பதுடன் தன்புகழ்வினை விரும்புபவர் என்பதை தெரிவித்தார். அசாத்தின் முகநூல் அறிமுக பக்கத்தில் தான் கண்டியில் வதிவதாகவும், தன்னை மாவனல்லை சாகிரா பழைய மாணவன் என்றும் பொய் உரைத்துள்ளமை அவர் கூறிய உதாரணங்களில் ஒன்று. மேலும் பல தனி;ப்பட்ட முறை கேடுகளையும் கூறினார்;.நான் இங்கு தெரிவிப்பது என்னவெனில் மௌலவிகளை போலவே மேலும் பல போலிகள் எம்மத்தியில் உள்ளனர்.

    மௌலவி லீலைகள் இணையதளம் இயக்கப்படுவதன் காரணத்தை அவர்கள் பல தடவை கூறிவிட்டனர். இது பிழைகளை சுட்டிக்காட்டும் ஒருவகையான முயற்சி. இதனை நாம் ஆரோக்கியமாக அணுக வேண்டும் என வாசகர்களை நான் கேட்டு கொள்கிறேன். அதே போல் இதனை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்பதையும் மௌலவி லீலைகளுக்கு தெரிவிக்கிறேன். அதனால் ஒன்றுக்கு இரண்டு தடவை யோசித்து சரியான தகவல்களின் பிரகாரம் மாத்திரம் செயற்படுங்கள்.

    இந்த இணையத்தளம் சரியா அல்லது பிழையா என என்னால் ஒரு முடிவிற்கு வர இயலவில்லை.

    எம்.எஸ்.எம். ஐயூப் – திப்பிட்டிய

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்திற்கு நன்றி.

      //ஒன்றுக்கு இரண்டு தடவை யோசித்து சரியான தகவல்களின் பிரகாரம் மாத்திரம் செயற்படுங்கள்//

      முடிந்தவரை இதனை கடைப்பிடிக்க எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஓரளவுக்கேனும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியாத காரணத்தால் கிடைக்கப்பெற்ற பல செய்திகளை இதுவரை வெளியிட முடியவில்லை.

      Delete
    2. //இது பிழைகளை சுட்டிக்காட்டும் ஒருவகையான முயற்சி. இதனை நாம் ஆரோக்கியமாக அணுக வேண்டும் என வாசகர்களை நான் கேட்டு கொள்கிறேன்.//

      உண்மையில், பிழைகளை ஆரோக்கியமாக சுட்டிக்காட்டுவதே ஆரோக்கியமானது.

      //இந்த இணையத்தளம் சரியா அல்லது பிழையா என என்னால் ஒரு முடிவிற்கு வர இயலவில்லை.//

      நிச்சயமாக உங்களால் அதனை முடிவு செய்ய முடியாது. வெறுமனே மற்றவர்கள் சொல்வதை வைத்துக்கொண்டு முடிவெடுக்கும் உங்களால், எந்தவொரு சரியான முடிவையும் எடுக்க முடியாது.

      -நலன் விரும்பி

      Delete
  6. Mohamed in islam, nawanellaOctober 1, 2014 at 4:57 AM

    Why all these people spreading the islam in wrong way....... I think you all sharing things each other just blaming the all jamaths. Our massenger beloved mohamed nabi spread the islam like this??? Pls do not hate the people its not the mater of muslim or non muslim..... Please we have to make people as unity..... if i am wrong in islanic point of view, you all have rights to correct me. Allah knows the best... wasalam

    ReplyDelete