Wednesday, August 20, 2014

பொது பல சேனாவிடம் ஹஜ்ஜை அடகு வைக்கும் முஸ்லிம் முகவர்கள்

மார்க்கம் என்பது வியாபாரமாக மாறியதில் மிக முக்கிய பங்கு மெளலவிகளுக்கே சாரும். சீசனுக்கு ஏற்ற மாதிரி பயான் பண்ணி பிஸ்னஸ் பண்ணிய மெளலவிகளால், ஹஜ்ஜுக் கடமை பொது பல சேனாவிடம் அடகு வைக்கப்படும் நிலமை தோன்றியுள்ளது. பொது பல சேனா முஸ்லிம் பிரிவு உண்மை என்கின்ற நிலை உறுதியாகி வருகின்றது.

மார்க்கத்தில் எதை எதையெல்லாம் விற்று ஏமாற்றி பணம் சம்பாதிக்க முடியுமோ, அத்தனைக்கும் மெளலவிகள் துணை போகின்றனர். உங்களில் அநேகமானவர்களைப் பொறுத்தவரை ஹஜ் என்பது மிகப் புனிதமான ஒரு மார்க்க கடமை. ஆனால், மெளலவிககளையும், ஹஜ் முகவர்களையும் பொறுத்தவரை ஹஜ் என்பது உங்களை பக்திப் பரவசமூட்டி உங்களிடம் இருக்கும் பணத்தை முழுமையாக புடுங்கும் வருடாந்தகொள்ளையடிப்புஆகும்.


ஒன்றரை லட்சம் இலங்கை ரூபாவிற்கும் குறைவான தொகையில் மிக இலகுவாக செய்ய முடியுமான ஹஜ் கடமையை, முகவர்களும் மெளலவிகளும் இணைந்து பகல் கொள்ளை அடிப்பதன் மூலம் 5 முதல் 7 லட்சம் வரை கட்டணமாக செலுத்தி, ஏனைய செலவுகளுடன் சுமார் 8 லட்சம் ரூபாய் செலவுள்ள ஒரு மிகப்பெரிய சுமையான விடயமாக மாற்றியுள்ளனர்.

தற்பொழுது இலங்கைக்கான ஹஜ் கோட்டா குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஹஜ் முகவர்களுக்கு மத்தியில், அதிகம் கொள்ளை அடிக்கப்போகும் பெரிய திருடன் நீயா நானா என்கின்ற போட்டி உருவாகி நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஒரு குழுவினர் பொது பல சேனாவை சந்தித்து பத்வா கேட்டுள்ளனர். நிலைமை எப்படி இருக்கின்றது? ஒவ்வொரு ஹஜ் குழுவிலும், ஹஜ்ஜு மற்றும் உம்ராவிற்காக பல மெளலவிமாரும் ஒரு ஆஸ்தான மெளலவியும் நிச்சயம் இருப்பார்கள். பொது பல சேனா சந்திப்பு இவர்களின் ஆசியுடன் தானா நடைபெற்றது?

அடுத்தமுறை ஹஜ் வழிகாட்டிகளாக மஞ்சள் நிறத்தில் இஹ்ராம் உடுத்த சில பெளத்த துறவிகளை அழைத்து செல்வதும் நடக்கலாம்.


அடுத்த ஹஜ்ஜுப் பெருநாள் பிறையை பொது பல சேனா தீர்மானித்தாலும் ஆச்சரியம் இல்லை.

இது குறித்து விடியல் இணையத்தளம் வெளியிட்டுள்ள விரிவான செய்தி :


பொது பல சேனா - ஹஜ் முகவர்கள் சந்திப்பு : விடியல் செய்திக்கு இங்கே அழுத்தவும்

http://www.vidiyal.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/3009-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81



No comments:

Post a Comment