வாசகர் ஆக்கம் : அரபாத்
கண்டி மாவட்டத்தில் கம்பளைக்கும் நாவலப்பிட்டியவுக்கும் நடுவில் அமைந்துள்ள ஓர் அழகான இஸ்லாமிய சூழலுள்ள ஒரு ஊர்தான் இந்த உலப்பணை என்பது. இந்த ஊரில். தஃஹீத் , தப்லீக் ,ஜமாதே இஸ்லாமி போன்ற எல்லா கொள்கையுடையவர்களும் கலந்து வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று காலைநேரம் சுகவீனமுற்று நாவலப்பிட்டிய வைத்தியசாலையில்
அனுமதிக்கபட்டு, பின்னர் மாலை 4.30 மணியளவில் மரணத்தை தழுவினார் தவ்ஹீத்
ஜமாத்தின் உலப்பணை கிளை தலைவர் சகோதரர் Nawshad
அவர்களின் அன்பு தாயார் அவர்கள் (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஹூன்)
பின்னர் அவர்களுடைய குடும்த்தார்கள் இன்று (17/08/2014)காலை 10 மணியளவில்
தமது வீட்டில் இருந்து ஜனாஸாவை அடக்கம் செய்ய எடுப்பதாக அறிவித்தல்
செய்தனர்.
உலப்பணை பள்ளி நிர்வாகத்தால் அந்த ஊரில் யாரேனும்
மரணமடைந்தால் , அடக்கம் செய்ய முன்னர். மையத்துக்கு செய்ய வேண்டிய கடமைகளை
ஊர்மக்களுக்கு தத்தமது கொள்கைக்கு ஏற்ப அடக்கம் செய்து கொள்ளலாம் என
முடிவு செய்து,அது சம்மந்தமாக ஒரு விண்ணப்ப படிவம் தயார் செயப்பட்டுள்ளது.
நான் கேள்விப்பட்ட வகையில்..
விண்ணப்ப படிவத்தில் அடங்கும் கேள்விகள் பின்வருமாரு..
மௌலவி யார் உங்களுடையதா? எமது பள்ளி மௌலவியா? ***பள்ளியில் பயான்
நடாத்தப்படுமா?*** மையவாடியில் பயான் நடாத்தப்படுமா ?*** கூட்டு துஆ உண்டா?
இல்லையா?***தல்கீன் உண்டா?** இல்லையா?****
இது போன்று மார்க்த்தை கூருபோட்டு பள்ளியில் ஒரு விண்ணப்ப படிவமும் தயாரிக்கப்பட்டுள்ளதாம்.
சகோதரர் நவ்சாட் அவர்களின் குடும்பத்தை பொருத்த வரை குர்ஆனும் சுன்னாவும்
மட்டுமே தனது வாழ்க்கை முன்மாதிரயாக கொண்ட தஃஹீத் வாதிகள் என்று உலப்பணை
பகுதி முழுவதும் தெளிவாக அறியப்பட்டவர்கள்.
அதனை புறிந்து
வைத்திருந்த ஊர் நிருவாகம் ஜனாஸாவை அடக்கும் விடயத்தில் நீங்கள் உங்களுடைய
கொள்கை(குர்ஆன் ஸுன்னா) அடிப்படையில் ஊர் பள்ளியில் செய்து கொள்ளலாம் என
தெறிவித்தனர் .
ஏற்கனவே நிருவாகத்தால் ஏற்பாடு செய்த விண்ணப்ப படிவம் தற்போது தமது கைவசம் இல்லை,
எனவே நாம் நிருவாகம் சார்பாக வாய்மூலம் உத்தரவாதம் தருகிரோம் நீங்கள்
நபிவழி அடிப்படையில் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் சகோதர்ர் நவ்ஷாட் அவர்களால் , ஜனாஸாவின் இருதியில் உரை
நிகழ்த்தவுதற்காகவும் ,ஜனாஸாவின் கடமைகளை நபிவழி பிரகாரம் நடாத்தவும்
SLTJ தலைமை தாயியான Hisham Misc அவர்கள் வரவழைக்கப் பட்டிருந்தார்கள்.
ஜனாஸாவை சரியான காலை 10 மணியளவில் வீட்டில் இருந்து எடுத்து சென்று ஊர் பள்ளியில் வைக்கப்பட்டு,
தனது தாயின் இருதி கடமைகளில் ஒன்றான ஜனாஸா தொழுகையை நடாத்த முன்சப்பில்
நின்றிருந்த வேலையில் மௌலவி ஹிஷாம் அவர்கள் ஒழி வாங்கியை எடுத்து நபிவழி
அடிப்படையில்,
ஜனாஸா தொழுகையின் சட்ட திட்டங்களை சொல்ல ஆரம்பித்தார்.
ஒவ்வொன்றாக சொல்லி விட்டு #நான்கு தக்பீர்கள் சொல்லப்பட வேண்டும், #முதல்
தக்பீர் சொல்லும் போது கைகளை உயர்த்தி கட்டிக்கொள்ள வேண்டும், என்றும்,
#நான்கு முறையும் கைகளை உயர்த்தி உயர்த்தி கட்ட தேவை இல்லை ,என்றும் #அவ்வாறு உயர்த்தி உயர்த்தி கட்டுவதற்கு எந்த ஆதாரமும் நபிவழியில் கிடையாது ,#தக்பீர்
என்பது வாயால் மொழிவதேயன்றி கட்டுவது கிடையாது என்று சொல்லி க்கொண்டு
இருக்கும், போது பள்ளி தலைவர் ஜபிர் என்பவர் முன்னாடி வந்து மௌலவி
ஹிஷாமிடம் ஓழிவாங்கியை, பள்ளி மௌலவியடம் ஒப்படைகுமாரும் நாம் ஊர்
வழமையில்தான் தொழுகை நடாத்துவோம், என்றும் கூறி சபையை அமலிதுமலியாக்கினார்.
"பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன."
(அல்குர்ஆன் 72:18)
அல்லாஹ் குர்ஆனிலே பள்ளிவாசல் அல்லாவுக்குறியது அதில் அல்லாஹ்வின்
சட்டங்கள் மட்டுமே நிலைநாட்டப்பட வேண்டும் என கூறியிருக்கும் போது இங்கு.
அல்லாஹ்வின் சட்டம் பிட்போடப்பட்டு ஊர்வழமைமை முற்படுத்த . சகோதர்ர் ஜபிர்
அவருக்கு அதிகாரம் கொடுத்தது யார்????????????
நடு நிலையாக சிந்திக்கவும்..
அந்த சந்தர்ப்பத்தில் SLTJ மௌலவி ஹிஷாம் அவர்கள் கூறினார்,
நான் இந்த ஜனாஸாவின் உறவினர்கள் சார்பாக வந்துள்ளேன், ஊர் வழமையைத்தான்
செய்வோம் என்றால் அல்லாஹ்வின் மாளிகையில் நபிவழிக்கு இடம் இல்லையா...???
என்றும்
சகோதர்ர்.ஜபிர் அவரகளே நீங்கள் நிச்சயமாக இந்த விடயத்துக்காக அல்லாஹ்விடம் மருமையில் பதில் சொல்லியாக வேண்டும் என்றார்.
அதனிடையில் ஜனாஸவின் குடும்பத்தார் சார்பாக நிர்வாகம் விரும்பாவிட்டால்
அல்லஹ்வின் மாளிகையில் பிரச்சிணையை நாம் விரும்பவில்லை. நாம் ஜனாஸாவை
கொண்டு சென்று வெளியில் தொழுகை நாடாத்திவிட்டு அடக்கம் செய்து கொள்கிறோம்
என்ற கோறிக்கையும் வைக்கப்பட்டது .
அப்படியே சில நிமிடங்கள் பள்ளியில் மக்கள் ஒழுங்கில்லாமல் இருந்த நிலையில்
அல்லாஹ் தனது திருமறையில் கூருகையில்
"அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் "நாங்கள்
அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக்
கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?" எனக் கூறுவார்கள்.
(அல்குர்ஆன் 33:66)
"எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள்
கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்" எனவும்
கூறுவார்கள்.
(அல்குர்ஆன் 33:67)
"எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!" (எனவும் கூறுவார்கள்.)
(அல்குர்ஆன் 33:68)
ஊர்மக்கள் இந்த அல்லாஹ்வின் வசனங்களுக்கு அஞ்சினார்களோ என்னவோ ?அல்லாஹ் எல்லாம் அறிந்தவன் !!!!!
ஊர்மக்கள் இருதியாக பள்ளியிளேயே தொழுகை நடாத்த கோறியதன் பின்னர்
சகோ.நவ்ஷாட் அவர்கள் ஜனாஸா தொழுகை தொழுவிக்க அணைவரும் நபிவழியில் ஜனாஸாத்
தொழுகையை நிரைவேற்றினார்கள்.
இருதியாக ஸுன்னா முறையில் ஜனாஸா அடக்கம்
செய்யப்பட்டு ,லௌலவி ஹிஷாம் அவர்களின் உருக்கமான உரையுடன் ஜனாஸாவுடைய
கடமைகள் நபிவழியில் நிறைவேறியது.
(அல்ஹம்துலில்லாஹ்)
( முக்கிய குறிப்பு : மேற்படி கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாசிரியருக்கே சொந்தம்,
அவை "மெளலவி லீலைகள்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை. )
الله أكبر الله أكبر الله أكبر
ReplyDeleteஉலப்பனை பள்ளித் தலைவர் ஜாபிர் தொடர்பான தகவல்களை அனுப்பியவரின் கவனத்திற்கு,
ReplyDeleteஇது பள்ளிவாசல், காதி நீதிமன்றம் தொடர்பு பட்ட செய்தி என்பதால் தனியாக பிரசுரிக்க முடியும்.
தயவு செய்து மேலதிக விடயங்களுடன், முடியுமாக இருந்தால் ஜாபிரின் புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும்.
jamathgames@hotmail.com
allah akber
ReplyDeleteநபி வழி ......
ReplyDeleteபிற ஊருக்கு சென்றால் அவர்களது வழக்கத்துக்கு மதிப்பு அளிப்பது அழகிய முன் மாதிரி எங்கோ படித்த ஞாபகம் ......
@admin போட்டோ எதற்கு ? அவரை மான பங்க படுத்த தவா தவறு செய்தால் அவரிடம் எடுத்து சொல்லுங்கள் .
நபி வழி ...
தனது சகோதரரின் (மூஃமினின்) மானத்தை காப்பது அழகிய. முன் மாதிரி
உங்கள் கருத்தை வரவேற்கிறேன், அவரை மான பங்க படுத்த தவா தவறு ..
Deleteya allah sagalavitha kulappavadhigalai vittum naam anaivarayum kaapatruvayaga.aameen
ReplyDeleteஎங்கள் முஸ்லிம்களின் நிலை ??ஒரு மையத்தை நிம்மதியா அடக்கம் செய்ய முடியல , ஒரு சுன்னதான விடயத்துக்காக ஒரு ஊர் இரண்டுபடுவது இதைவிட பெரிய பாவமாகும்.
ReplyDeleteivarkalathu (Thaouheedh vaadhikalin) karuththu sari enraal. makka vil haram sharief ilum nabi valikku maatrame nadaiperuginradhu................. check on youtube....
ReplyDelete