Sunday, August 17, 2014

காஸாவின் இரத்தத்தில் காசு உழைக்கும் ஜமாத்தே இஸ்லாமியின் துரோகம்

வாசகர் ஆக்கம் : இப்ஸான்
ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் உதவியை மிகவுமே எதிர்பார்ப்பது இக்கட்டானதும், பலவீனமானதும் நேரத்திலேயே ஆகும். காலம் காலமாக பாலஸ்தீனத்தினதும், காஸாவினதும், ஹமாசினதும் பெயரால் மக்களை தம் பக்கம் கவர்ந்தவர்கள், இக்கட்டான நேரத்தில் எப்படி நழுவினார்கள் என்று அறியும் பொழுது ஆச்சரியமாகவும், நம்பமுடியாமலும் உள்ளது.


ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமியைப் பொறுத்தவரை, ஏனைய இயக்கங்கள் போன்று அமல், இபாதத், பிக்ஹு, பித்அத், தொழுகை, ஹஜ்ஜு என்று மார்க்க விடயங்களுக்குள் தம்மை வரையறுத்துக் கொண்ட இயக்கமாக காட்டிக் கொள்ளமால், மிகப் பாரிய சமூக சிந்தனையும், சர்வதேச இஸ்லாமியப் பார்வையும் கொண்ட தூரநோக்குள்ள ஒரு இயக்கமாகவே தன்னை அது வெளிப்படுத்தி வந்துள்ளது.

இலங்கையில் ஜமாத்தே இஸ்லாமியின் வளர்ச்சி என்பது, பெரும்பாலும் அந்த இயக்கம் முன்னெடுத்த ஆப்கானிஸ்தான், கஷ்மீர், பாலஸ்தீன், பொஸ்னியா, செச்னியா போன்ற சர்வதேச விவகார ஆதரவுப் பிரச்சாரத்தினாலே கவரப்பட்ட முஸ்லிம் சகோதரர்கள் அந்த இயக்கத்தில் இணைந்ததாலேயே சாத்தியமாகியது. எனினும் இன்று, காஸா மக்கள் மிகவும் இன்னலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், குறித்த இயக்கம் என்ன செய்தது என்பது பெரும் கேள்விக் குறியாக மாறியுள்ளது.

ஹமாஸ், ஹனியா, ஷேய்க் யாசீன், அய்யாஷ் என்று உணர்ச்சி பொங்கப் பேசியது மட்டுமின்றி அய்யாஷ் பெயரில் புத்தகம் கூட வெளியிட்டு, விற்பனையில் சாதனை படைத்தது ஜமாத்தே இஸ்லாமி.

இரண்டாம் உலக மாக யுத்தத்திற்குப் பின்னர் முதல் தடவையாக யூத சியோனிஸ்டுகளுக்கு எதிராக பாரிய எதிர்ப்பலைகள் உலகளாவிய ரீதியில் வெளிப்படுத்தப்பட்டு வரும் முக்கியமான சூழலில், பிக்ஹு விடயங்களுக்காக போர்க்கொடி தூக்கும் SLTJ மட்டுமின்றி, மார்க்சிஸ சிந்தனை கொண்ட இடதுசாரிக் கட்சியான JVP கூட இஸ்ரவேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை இலங்கையில் வெற்றிகரமாக முன்னெடுத்து காஸாவிற்கான தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ள நிலையில், காலம் காலமாக காஸாவை முதலீடாக பயன்படுத்தி இயக்கத்தை வளர்த்துக்கொண்ட ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமி தந்திரமாக நழுவிக் கொண்டது.

சமூக சிந்தனையும், சர்வதேச இஸ்லாமியப் பார்வையும் கொண்ட தூரநோக்குள்ள ஒரு இயக்கம் என்ற மாயயை, பிரமிப்பை ஏற்படுத்தி, அதையொட்டி பிரச்சாரங்களை முன்னெடுத்து, அதன் மூலம் தனது வளர்ச்சியை திறமையாக திட்டமிட்டுக் கொண்ட ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமி, இக்கட்டான சூழ்நிலையில் காஸாவை மட்டுமின்றி, இந்நாட்டு முஸ்லிம்களையும் கைவிட்டு நழுவியுள்ளது.

இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது முதல், அளுத்கமை, பேருவளை வன்முறை இடம்பெற்றது வரை ஜமாத்தே இஸ்லாமி ஒருவித நழுவல் போக்கையே கடைப்பிடித்து வருகின்றது, காஸா விவகாரத்திலும் இதுதான் நிலைமை. எனினும் மிகவுமே கவலையான விடயம், காஸாவைக் காட்டி தம்மை வளர்த்தவர்கள், காஸாவிற்காக எதுவும் செய்யவில்லை என்பதுடன் ஒதுங்கியிருந்தாலும் பரவாயில்லை, ஆனால் தமது அல்ஹசநாத் சஞ்சிகையின் இம்மாத வெளியீட்டில்
காஸாவின் குருதி தேய்ந்த போராட்டத்தை அட்டகாசமான முன் அட்டைப்படமாகப் போட்டு அதன் மூலம் சஞ்சிகை விற்பனை அதிகரிப்பை தந்திரமாக குறி வைத்துள்ளனர் என்பது மிகவும் கவலையானதும், வெட்கக் கேடானதும் ஆகும்.

உண்மையான நண்பனை இக்கட்டான நேரத்தில் கண்டுகொள்ளலாம் என்பார்கள், உண்மையில்லாத நண்பனை கண்டுகொண்டது காஸா மட்டுமல்ல, நாமும்தான்.


( முக்கிய குறிப்பு :  மேற்படி கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாசிரியருக்கே சொந்தம், அவை "மெளலவி லீலைகள்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை. )




6 comments:

  1. தௌஹீத் ஜமாத்தினர் கடந்த வாரம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்து விட்டதால் தைரியமாக குறை சொல்லி எழுதியுள்ள கட்டுரை. கடந்த வார ஆர்ப்பாட்டம் நடந்திரா விட்டால் இக்கட்டுரையே வந்திருக்காது. ஜமாத்தே இஸ்லாமி சமகால முஸ்லிம்களை மேலும் சிக்கலுக்கும் சிரமத்திற்கும் தள்ளி இலங்கையை இன்னுமொரு காசாவாக மாற்றாமல் யோசித்து தமாதிப்பது போல் தெரிகிறது.

    அசாத் கனேதன்ன

    ReplyDelete
    Replies
    1. அடே அசாத்….. பொரம்போக்கு நாயே…. ஒன்ட மகள் ஆயிஷா சித்திகாவில படிச்சுட்டு வந்து சொல்லி தந்ததாவ இந்த சமகால அரசியல்… சிங்களவனுக்கு கூட்டிகுடுத்து பெக்டரி செய்ற நீயெல்லாம் ஆர்பாட்டம் பத்தி பேச கூடாது… இனிமே ஏதாவது எழுதினா மௌலவி லீலைக்கு ஒன்னபத்திய உண்மை அனுப்பப்படும்…… ஒன்ட பொண்டாட்டி டிரைவரோட போட்ட கூத்து போட்டோவெல்லாம் வெளியிட வேண்டி வரும். ஹஜ்ஜுல் அக்பருக்கு நீ பையத் சென்சதே பிசினசுக்கு அவனிடம் இருநது சல்லி எடுக்க தானே….

      மாவனல்லை உண்மைக்குரல் (முன்னால்)

      Delete
    2. பெரிய அறிவாளி போல பேசுற இவன் கடப்புளியன் தான்…. குடும்பத்துல தாத்தா தங்கச்சி மார்ட புள்ளேளவவே உட்டுவெக்கல…. 5 வருசத்துக்கு முன்னாடி சரியான வருமானம் இல்லாம இருந்தான்.. இப்ப எங்கிருந்தோ அரபி காரண்ட சல்லி எடுத்து பிசினஸ் செய்றான்... பணக்காரன்டு செனச்சி கொண்டு டவுன்ல சுத்துறான். சட்டம் பேசுறான். எல்லாத்தைலயும் தன்ட பெயர் போடுற பழக்கத்துல இங்கயும் பெயர் போட்டு மாட்டிகிட்டான். அசாத் ப்ரெண்ட்

      Delete
    3. Enna Asath Nana onnume pesa kanam. Wayadaithu poitingala.

      Delete
  2. கேனையன் ஹஜ்ஜுல் அக்பரின் பின்பக்கம் நக்கும் முர்ஷித்August 18, 2014 at 7:05 AM

    இலங்கை முஸ்லிம்களின் சமகால சிந்தனையின் அடிப்படையில், எமது தலைவர் கண்மணி நாயகம் ஹஜ்ஜுல் அக்பர் (ஸல்) அவர்கள் ஒரு மதீனா வெற்றியை நோக்கி திட்டமிட்டு வருகின்றார், அதற்கான ஹுதைபியா உடன்படிக்கை காலமே இப்பொழுதைய காலம்.

    ஆகவே, அவர் அவரது அன்பு அக்குரணை மகாராணியின் அந்தப் புறத்தில் உல்லாசமாக ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கின்றார். அடுத்த கட்டமாக, இலங்கையில் இருந்து ஒரு ஹமாஸ் லங்கா விங் விரைவில் வெளியாகி, அமீரின் தலைமையில் இஸ்ரவேலை கைப்பற்றி பாலஸ்தீனர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்கும். அதற்காக அணு குண்டு, ஏவுகணை, நீர்மூழ்கிக் கப்பல் வாங்குவதற்காக அமீர் அவர்கள் இப்பொழுது நாம் கலஷன் செய்து வருகின்றார்.

    உங்களின் மேலான நன்கொடைகளை வாரி வாரி அமீருக்கு வழங்குங்கள்.

    (அமீர் எப்படியும் ஸ்ரீ லங்காவின் பில் கேட்ஸ், புரூணை சுல்தான் ஆகிவிடுவார் என்பது பொறாமைக்காரர்களின் குற்றச்சாட்டு ஆகும்)

    ReplyDelete
  3. உங்களது பக்கத்தில் நீங்கள் கருத்துக்களை தொடர்ந்து படிடத்து வருகிறேன்.

    இயக்க பேதம் இல்லாமல் மாஷா அல்லாஹ் என அனைவரையும் விமர்சிக்கிரீர்கள். மேற்படி விமர்சனங்களை தமிழ் பேசும் இந்துக்கள் பார்க்கின்ற்னர்.
    தமிழ் பேசும் கிறிச்தவர்களும் பார்க்கின்ற‌னர்.
    இப்பொழுது தமிழ் கற்றுக் கொள்ளும் சிங்கள மாணவர்களும் இருக்கின்றனர்.
    இவர்களும் பார்க்கின்றனர்.
    போதாததுக்கு இனவாதிகளுக்கு துப்புக் கொடுக்கும் முனா பிக்குகளும் ............

    இது போன்ற‌வற்றை அவர்கள் ஒரு ஆவனமாக தயாரிக்கும் முன்னெடுப்புகளும் நடைபெறுகின்றன என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியதில்லை.

    அவர்கள் எமது சமூகத்தின் மீது சுமத்தும் குற்றச் சாட்டுகளுக்கு ஆதார‌ங்கள் எம்மிடமிருந்தே தொகுக்கபடுகிறது.

    அந்த தொகுப்புகளை அள்ளி வழங்கும் உங்கள் சேவையை அல்லாஹ் ......................

    ReplyDelete