Friday, August 15, 2014

கப்பம் கேட்கும் மெளலானா சம்சுதீன் காஸிமி, ஒரு தந்தையின் கண்ணீர்க் கடிதம்

வாசகர் ஆக்கம் : செய்யது அஹமதுமக்கா மஸ்ஜித் இமாம் மெளலவி ஷம்சுதீன் காஸிமி முஸ்லிம் சமுதாயத்திற்கு சேவை செய்கிறார் என்று எண்ணி அவரிடம் பொருளாதாரத்தையும் அவருக்கு ஆதரவையும் கொடுக்கும் அனைவரும் நாளை மறுமை நாளில் பாதிக்கப்பட்ட இந்த பள்ளி மாணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர்கள் படும் இன்னல்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் ஷம்சுதீன் காஸிமி மற்றும் அவருடைய ஆதரவாளர்களே


அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்!

இவ்வாண்டு (2014) SSLC பொதுத்தேர்வில் எனது மகன் S . முஹம்மது முஹ்சின் 468 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றான்! அல்ஹம்து லில்லாஹ்!

மத்திய அரசின் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்திட்டத்தின் அடிப்படையில் தமிழகம் & புதுவை மாநிலத்திலிருந்து SSLC ல் அதிக மதிப்பெண்கள் பெற்ற 100 மாணவ-மாணவியர்களை தேர்ந்து எடுத்து கல்வி பயிலச்செய்வது என்ற முழக்கத்துடன் சென்னை அண்ணா சாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் இமாம் சம்சுதீன் காசிமியின் தலைமையில் இயங்கிடும் ILMI ( islamic Literacy Movement of India) என்ற NGO பிரச்சாரம் செய்தது.

100 மாணவ-மாணவியர்களை தேர்வு செய்து ,கீழக்கரையில் உள்ள இஸ்லாமியா மேற்றிகுலாசன் மேல்நிலை பள்ளியில் படிக்க வைத்தனர். எனது மகனும் தேர்வு செய்யப்பட்டு படிக்கவைக்கப்பட்டான்.கல்வி நிலையம் வேறாக இருப்பினும் ILMI SCHEME-100 திட்ட மாணவர்கள் & ஆசிரியர்கள்- நிர்வாகம் போன்றவற்றின் சர்வ அதிகாரமும் காசிமியிடமே இருந்து வருகிறது .

கல்வி பயில சேர்ந்த அன்றே சில மாணவர்களை பெற்றோர்கள் அழைத்து சென்றுவிட்டனர்! சில நாள்கழித்து மேலும் சில மாணவர்களை பெற்றோர்கள் அழைத்து சென்றுவிட்டனர்!அந்த அளவு அன்பும் -அரவநைப்பும - கவனிப்பும் இருந்துள்ளது! மாணவர்கள் அனைவரும் மிகவும் கஷ்டத்துக்கு ,மன உளைச்சல்கலுக்கும் உடல்நிலை பாதிப்புக்கும் ஆளாகி விட்டனர்!( விபரம் பிறகு)
.
இதனிடையே! மானவர்களின் கருத்துக்களை கேட்டறிய என்ற பெயரில் காசிமி அங்கு சென்று மாணவர்களிடம் கருத்துக்களை எழுதி தாருங்கள் என்று கேட்டுள்ளார்! மானவர்களும் எழுதி கொடுத்துள்ளனர்.. உண்மையை தைரியமாக எழுதிய மாணவனான எனது மகனை, அவரது சர்வ அதிகாரத்தை பயன்படுத்தி, எந்த சட்ட- ஒப்பந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல், நியாயம் - தர்மம் - மனிதாபிமானம் - மனசாட்சி போன்ற எதுவும் இல்லாமல் எந்த முன் அரிவிப்பும் இன்றி எனது மகனை டிஸ்மிஸ் செய்து வீட்டிற்கு அனுப்பி விட்டார்!

இதுவரை TC யையும் தர வில்லை. தர மறுத்துவருகிறார்! முப்பதாயிரம் ரூபாய் அபராதம் கட்டிவிட்டு TC யை பெற்று செல்லும்படி இப்போது புதிய உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளார்!.

எனது மகனின் மேற்படிப்பு கேல்விக்குரியாகி அந்தரத்தில் தொங்கிக்கொண்டு உள்ளது!எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. நோன்பு பிறை 25 லிருந்து எங்கள் கும்பம் சோகத்தில் மூழ்கி உள்ளது. அல்லாஹ்விடம் முறையிட்டு விட்டேன். இப்போது அவன் பெயரால் அவனது அடியார்களிடம் தகவல் சொல்கிறேன்.

தன்னை சுற்றி பெரும் பெரும் செல்வந்தர்கள் - உயரபதவியில் உள்ளவர்கள் -.... என்று ஒரு பெரும் கூட்டத்தை வைத்துகொண்டு இப்படி அநியாயமாக செயல்படும் இவரை தட்டி கேட்கவோ , சட்டத்தின் முன் நிறுத்தவோ எனக்கு போதிய வலிமை கிடையாது! எளியவனான என்னை அளவுக்கு மேல் நசுக்குகிறார்! அதற்கான எந்த நியாயமான காரணமும் இல்லை.

முழுக்க முழுக்க அவர் மேல் தவறை வைத்து கொண்டு மக்களை வஞ்சிப்பதன்மூலம் அவர் என்ன எதிர்ப்பார்க்கிறார் என்பது புரியவைல்லை!

அநீதிக்கு எதிராக -நியாயத்துக்கு ஆதரவாக - எனக்கு உதவி ஒத்துழைப்பு செய்பவர்கள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். அநீதிக்கு எதிரான - பாதிக்கப்பட்டவனக்கு ஆதரவான உங்களுக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நல்லருள் புரிவானாக! அமீன்.

எனது அலை பேசி எண்கள்:9842538285 /9150601633 / 9543442993

தங்களின்,
செய்யது அஹமது
காரைக்கால்



( முக்கிய குறிப்பு :
ட்டுரையின் கருத்துக்கள் கட்டுரியாயாசிரியருக்கே சொந்தம், அவை "மெளலவி லீலைகள்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை. )





No comments:

Post a Comment