அரசாங்கக் கலண்டரின் விடுமுறைக்கு அங்கீகாரம் வழங்கும் விதமாக மீண்டும்மொரு பிறை விவகாரம் முடிவிற்கு வந்து, அரச விடுமுறைக்கு மாற்றமில்லாமல் இலங்கையில் பெருநாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக இலங்கையில் பார்க்கப்பட்ட பிறைகளை விட, எடுக்கப்பட்ட முடிவுகளை நோக்கின், அரசாங்கக் கலண்டரின் விடுமுறை தினத்திற்கு ஏற்பவே எல்லா முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த வருடத்தின் நோன்புப் பெருநாள் தினமும் விடுமுறை தினத்திலேயே மிகவும் சரியாகவே அறிவிக்கப் பட்டுள்ளது. விஞ்ஜானி ஆகில் அஹமத் அறிவித்திருந்ததைப் போன்று இம்முறை பிறை இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை.
இலங்கையில் எந்தப் பகுதியிலும் பிறை கண்டதாக இதுவரை எந்த செய்தியும் கிடைக்கவில்லை.
உலகத்தில் அதிகமான முஸ்லிம் நாடுகள் நாளை திங்கட்கிழமை பெருநாளைக் கொண்டாடுகின்றன. இந்தோனேஷியா, மலேசியா, சவூதி அரேபியா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் பிறை தென்பட்டதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
(உலகத்தில் எந்தப் பகுதியிலும் பிறை தென்படாது என்று விஞ்சானி ஆகில் அஹமத் குறிப்பிட்டு இருந்தார். ஆகவே, இன்று முதல் சவூதி அரேபியா, இந்தோனேசியா, மலேசியா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் செவ்வாய்க் கிரகத்தில் உள்ளன என்று அறிவிக்கப்படுகின்றது.)
இலங்கையில் பிறை தென்பட்டதாக எந்த செய்தியும் இதுவரை வெளியாகாததால், எவ்வித சர்ச்சைகளும் ஏற்படவில்லை, ரிஸ்வி முப்தியின் தலை தப்பியது, தலைமைத்துவ கனவுகளுடன் குழி பறிக்க காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது, ஆகவே இன்னுமொரு வருடம் காத்திருக்க வேண்டிய நிலைமை.
பிரபல விஞ்ஞானிகளும், அவர்களின் கண்டுபிடிப்புகளும்
ReplyDelete* அலெக்ஸாண்டர் கிரகம் பெல் - டெலிபோன்
* சந்தி ஹோட்டல் அலியார் கோக்கி - கொத்துரொட்டி
* நார்சா நைனா லெப்பை - கத்தச் சோறு
* லியாகத் துவான் (லியாத்தூன்) - மாசிச் சம்பல்
* செல்லம்மா - மூக்குத்தூள்
* ஈக்கில் அடமன்ட் சரிபுத்தியீனன் - தலைப்பிறை
(தலைப்பிறையைக் கண்டுபிடித்த பிரபல வீண்சாணி ஈக்கில் அடமன்ட் சரிபுத்தியீனன் ஆவார். இவர் அக்கரைப்பற்றைச் சேர்ந்த பிரபல ஹோமியோபதி பைத்தியர் ஆவார். இவர் புண்ணுக்கு மருந்து கட்டுவதில் புகழ் பெற்றவர். சிறிய புண்ணாக இருந்தால் மூன்று மாதத்தில் குணமாக்கி விடுவார்.)
தலைப்பிறை : ஹலோ, ஹலோ
ReplyDeleteஈக்கில் அடமன்ட் சரிபுத்தியீனன் : ஹலோ, ஹவ் விஸ் கிஸ் ஸ்கீப்பிங்? (யார் போன் பண்றது என்று அமெரிக்கன் இங்க்லீஷ் இல் கேட்கின்றார்)
தலைப்பிறை : சேர், நான் தலைப்பிறை கதைக்கிறேன்
ஈக்கில் அடமன்ட் சரிபுத்தியீனன் : யெஸ், ஐ ஆம் டாக்டர், வீண்சாணி மிஸ்டர் ஈக்கில் அடமன்ட் சரிபுத்தியீனன் ஸ்கீப்பிங், வாட்ஸ் இயர் புரோபளம்?
தலைப்பிறை : நான் இலங்கைக்கு வரலாமா சேர்?
ஈக்கில் அடமன்ட் சரிபுத்தியீனன் : நோ, நோ, இந்தப் பக்கமே வரக் கூடாது, என்னுடைய மானம் மரியாதை எல்லாம் என்னாகிறது?
தலைப்பிறை : ஞாயிற்றுக்கிழமை மாலை கட்டாயம் வரவேண்டிய நாள், உங்கள் அனுமதியைக் கேட்கின்றேன்.
ஈக்கில் அடமன்ட் சரிபுத்தியீனன் : சொறி, இந்தப் பக்கமே தலையைக் காட்டக் கூடாது, அனுமதியில்லை. நான் எனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதையில் தலைப்பிறை தென்படாது என்று சொல்லிவிட்டேன், கலண்டரில் செவ்வாய்க்கிழமை பெருநாள் என்றுதான் போட்டு இருக்கு.
(தலைப்பிறையின் எஜமான் ஈக்கில் அடமன்ட் சரிபுத்தியீனன் இலங்கைக்கு வர அனுமதி மறுத்ததால், தலைப்பிறைக்கு இந்தியா, பாகிஸ்தான் பக்கமே வர முடியாமல் போய்விட்டது.)
அக்கரைப்பற்று ஜமிய்யா போய்ஸ் : டேய், நம்ம ஈக்கில் சேர் பிறைக்கு வரக் கூடாது எண்டு சொல்லிப் போட்டாராமே?