Wednesday, July 2, 2014

பள்ளிவாசல் மீது பொது பல சேனாவின் முஸ்லிம் பிரிவு தாக்குதல்


இலங்கையின் பெளத்த சிங்கள இனவாத அமைப்பான பொது பல சேனா பயங்கரவாதிகள் முஸ்லிம் பிரிவு ஒன்றை ஆரம்பிப்பது குறித்து கடந்த காலங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அளுத்கமை, பேருவளை பகுதிகளில் இந்த பயங்கரவாத இயக்கத்தின் சிங்கள பெளத்த வெறியர்கள் முஸ்லிம்கள் மீதும் பள்ளிவாசல்கள் மீதும் அண்மையில் தாக்குதல் நடாத்தி இருந்தனர். தற்பொழுது இந்த பயங்கரவாத இயக்கத்தின் முஸ்லிம் பிரிவினர் தமது கைவரிசையை காட்டியுள்ளனர்.


இலங்கையின் கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தில் பொது பல சேனாவின் முஸ்லிம் பிரிவினரால் பள்ளிவாசல் ஒன்று உடைத்து சேதமாக்கப் பட்டுள்ளது.

சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்திருந்த தெளஹீத் ஜமாஅத் என்று அறியப்படும் SLTJ அமைப்பினரின் பள்ளிவாசல் ஒன்று புனித ரமழான் மாதத்தின் ஆரம்பத்தில், மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலில் கலந்து கொண்டவர்கள் முஸ்லிம்கள் போன்ற தோற்றத்தில் இருந்ததாகவும், நாரே தக்பீர், அல்லாஹு அக்பர், அடிடா, உடைதா, மசிரு, பு*****, உம்மாட *****, ****, போன்ற தமிழ்ச் சோனக அரபுச் சொற்களை தாராளமாக பயன்படுத்தியதாகவும் அறிய முடிகின்றது.

பொது பல சேனா பயங்கரவாதிகள் பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் வீடுகள், வியாபார நிறுவனங்கள் என்பவற்றை உடைத்து, தீயிட்டு வரும் நிலையில், கிழக்கு மாகாணத்தில் பொது பல சேனாவின் முஸ்லிம் பிரிவு தனது கைவரிசையை காட்டியுள்ளது.

இந்த தாக்குதலின் பின்னணியில், தாக்குதலை தூண்டி விட்டதன் பின்னணியில் நிச்சயமாக ஒரு மெளலவி இல்லாமல் இருக்க முடியாது என்பது மட்டும் நிச்சயம்.

பொது பல சேனாவின் முஸ்லிம் பிரிவினர் சம்மாந்துறையில் மட்டுமின்றி, நாட்டின் பல பகுதிகளிலும் பல்வேறு பெயர்களில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொது பல சேனா முஸ்லிம் பிரிவினர் மாதம்பையிலும் இவ்வாறான ஒரு தாக்குதலை மேற்கொண்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




1 comment:

  1. Appattamaana poi. I am from sainthamaruthu. And there is no masjid was destroyed. It's and a tent. You bloody idiot you have to verify the news before post it.

    ReplyDelete