Monday, June 16, 2014

ரிஸ்வி முப்தி லண்டனில் - அளுத்கமை முஸ்லிம்கள் நெருப்பில் எரிகின்றனர்

இலங்கையின் அளுத்கமை பேருவளை, களுத்துறை, வெட்டுமங்கடை, தெஹிவளை, பதுளை போன்ற பல முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம்கள் வெட்டப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். பள்ளிவாசல்கள் தீவைக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன. இதுவரை பல முஸ்லிம்கள், சிங்கள பெளத்த இனவாதிகளால் கொல்லப் பட்டுள்ளனர், நூற்றுக்கணக்கானோர்
காயமடைந்துள்ளனர், பல பள்ளிவாசல்கள் தீக்கிரையாக்கப் பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாக்கப் பட்டுள்ளனர்.

சிங்கள பெளத்த இனவாதிகளால் திட்டமிட்டு செயற்படுத்தப் பட்டுள்ள இந்த இனக்கலவரம் குறித்து நிறைய முஸ்லிம் ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆகவே அந்த விபரங்களை மீண்டும் இங்கே பதியத் தேவையில்லை.


அரசாங்க ஆதரவு இந்த வன்முறைக்கு உள்ளது என்பது தெளிவு. ஜனாதிபதி நாட்டில் இல்லாத நேரமே இந்த தாக்குதல்களுக்கு தெரிவு செய்யப் பட்டுள்ளது. ஜனாதிபதி, முக்கிய அமைச்சர்கள் நாட்டில் இல்லாத நேரத்தில், இது நன்கு திட்டமிடப்பட்டு, முன்னேற்பாட்டுடனேயே முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இதில் முக்கிய கேள்வி, ஜமியத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி ஏன் லண்டன் சென்றார் என்பதாகும்.

இலங்கையில் முஸ்லிம்கள் தாக்கப்படும் பொழுது, தானும் நாட்டில் இருக்கக் கூடாது என்கின்ற முன்னேற்பாட்டின் அடிப்படையிலேயே ரிஸ்வி முப்தி நாட்டில் இருந்து வெளியேறி லண்டன் சென்றுள்ளதாக அறிய முடிகின்றது.



ஜமியத்துல் உலமா என்ற பெயரில் ஹலால் சான்றிதழ் வியாபாரம் என்று ஆரம்பித்து செலிங்கோ நிறுவனத்திற்குக் கூட ஹலால் சான்றிதழ் வழங்கி, அதில் கோடி கோடியாக முஸ்லிம்களின் பணத்தை கொள்ளை அடிப்பதில் தனது துரோகத்தை ஆரம்பித்த ரிஸ்வி முப்தி தலைமையிலான உலமா சபை, தம்புள்ளை பள்ளிவாசல், மகியங்கனை பள்ளிவாசல், அனுராதபுரம் மல்வத்தை பள்ளிவாசல், நோன்புப் பெருநாள் பிறை என்று எல்லா விடயங்களிலும் நாட்டு முஸ்லிம்களுக்கு தொடர்ந்து துரோகமே செய்து வருகின்றது.


இந்த நிலையில், இலங்கை முஸ்லிம்கள் தாக்கப்படப் போவதை முன்கூட்டியே ரிஸ்வி முப்தி அறிந்திருந்தாரா என்கின்ற கேள்வி எழுகின்றது.

லண்டனில் இருந்து ஷேய்க் ரிஸ்வி முப்தி வழங்கியுள்ள அரிவுரையில், அளுத்கமை முஸ்லிம்களை வீடுகளில் இருக்குமாறு கூறியுள்ளார். வீடுகளுக்குள் புகுந்து தாக்கி, வீடுகளுக்கும் தீ வைக்கப்படுகின்றது என்பது இவருக்குத் தெரியாதா? அல்லது, முஸ்லிம்கள் வீட்டுடன் சேர்ந்து ஒட்டு மொத்தமாக எரிந்து நாசமாகட்டும் என்கின்ற ஆசையா?

இவர் தானா உலமா சபைத் தலைவர்? சிந்தியுங்கள் முஸ்லிம்களே....

இவரை நம்பியா உங்கள் மார்க்க விடயங்களையும், நோன்பையும், பெருநாளையும் தீர்மானிக்கின்றீர்கள்?

-------------------------------------------------------------------------------------------------------------

புகைப்படத்தின் ஓரத்தில் உள்ள மூன்று ஜனாசாக்களும் பர்மா முஸ்லிம்களுடையது என்பது உண்மையே. குறித்த புகைப்படம் தற்பொழுது செய்தியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.  சுட்டிக் காட்டிய வாசகர்களுக்கு நன்றிகள்.


ரிஸ்வி முப்தி தொடர்பான விடியோ ஆதாரம் இங்கே தரப்பட்டுள்ளது.


http://jamathgames.blogspot.com/2014/06/blog-post_16.html


6 comments:

  1. We are muslims why we are fighting together

    ReplyDelete
  2. slamiya Thagawal Nilayam-iic அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் செய்தி:

    உன் இடுப்பில் இருக்கும் கோவணம் கழட்டப் பட்டு நீ நிர்வாணமாக்கப் பட்டாலும் சகிப்புத் தன்மையுடன் பொறுமையாக இரு.

    அல்லாஹ்வினதும் ரசூளினதும் செய்தி:

    ஒருதடவை நபியவர்களிடம், ஒருவன் என் வீடு புகுந்து தாக்குதல் தொடுத்தால் நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், நீ அவனை எதிர்த்து பதில் தாக்குதல் தொடுத்திடு என்றார்கள்” ‘அப்பொழுது அவன் என்னைக் கொன்றால்?”
    ‘அவன் உன்னைக் கொன்றால் நீ ஷஹீத் எனும் வீரத் தியாகி”
    ‘நான் அவனைக் கொன்றால்? ”
    ‘நீ அவனைக் கொன்றால், அவன் நரகத்தில் வீழ்வான்”
    எனப் பதில் அளித்தார்கள் நபி(ஸல்) அவர்கள் (நூல்: முஸ்லிம்)

    ஈமான் கொண்டோரிடமிருந்து அவர்களின் உயிர்களையும் செல்வங்களையும் சொர்க்கத்திற்கு பகரமாக அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர்.அவர்கள் கொல்கின்றனர், கொல்லப் படுகின்றனர். இது தவ்ராத், இன்ஜீல், மற்றும் குர்ஆனில் அவன் தன் மீது கடமையாக்கிக் கொண்ட வாக்குறுதி, அல்லாஹ்வை விட தன் வாக்குறுதியை நிறைவேற்றுபவன் யார்? நீங்கள் ஒப்பந்தம் செய்த இந்த வியாபாரத்தில் மகிழ்ச்சியடையுங்கள், இதுவே மகத்தான வெற்றியாகும். (சூரா அத்தவ்பா 111)

    "வேட்டைப் பிராணி வேட்டை பொருளின் மீது பாய்வதை போன்று எதிரிகள் ஒட்டு மொத்தமாக உங்களை (முஸ்லிம்களை) தாக்கும் காலம் வரும்." என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அப்போது நங்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருப்போமா" என்று சஹாபாக்கள் வினவினார்கள். அதற்கு நபியவர்கள் "இல்லை, நீங்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்களாக இருப்பீர்கள். ஆனால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் சருகுகளைப் போன்று சருகுகளாக இருப்பீர்கள். அல்லாஹ் எதிரிகளின் உள்ளங்களில் இருந்து உங்களைப் பற்றிய பயத்தை அகற்றிடுவான்.உங்கள் உள்ளங்களில் 'வஹ்ன்' ஏற்பட்டிருக்கும் என்று கூறினார்கள். சஹாபாக்கள் " 'வஹ்ன்' என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "உலகத்தை அதிகம் ஆசை படுவதும் மரணத்தை வெறுப்பதுமாகும்" என்று பதிலளித்தார்கள். (அபூதாவூத்)

    ReplyDelete
  3. நோன்பு பிறை பார்க்க லண்டன் சென்றிருப்பாரோ...........

    ReplyDelete
  4. Be aware ! don't blame anyone without evidence. Don't "And hold fast, all of you together, to the Rope of Allah (i.e. this Quran), and be not divided among yourselves, and remember Allah's Favour on you, for you were enemies one to another but He joined your hearts together, so that, by His Grace, you became brethren (in Islamic Faith), and you were on the brink of a pit of Fire, and He saved you from it. Thus Allah makes His Ayat (proofs, evidences, verses, lessons, signs, revelations, etc.,) clear to you, that you may be guided." (Al Quran 3:103).

    ReplyDelete
  5. மொத்தல்ல இந்த page admin அ கல்லால் அடிச்சோனும்

    ReplyDelete
  6. Rizvi Mufthi London poyirundal arikkai vidum inda admin engirundeenga? Aden unakku iduppula see wan illaya? Poy JIHAD seithu Shaheed aahi irukkalame. Onga aanmai eluththula thanda.

    ReplyDelete