சிங்கள மொழி மூலமான குர்ஆன் மொழிபெயர்ப்பு வெளியீட்டிற்கு சிங்களத்தில் ஒரு வசனம் கூடத் தெரியாத PJ ஐ அழைத்து வந்து சுகததாஸ அரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை விளையாட்டுக் காட்ட SLTJ போட்ட திட்டத்தில் மண் விழுந்துள்ளது.
2005 ஆம் ஆண்டு PJ இலங்கை வந்த பொழுது அவருக்கு பாரிய வரவேற்புக் காணப்பட்டது. அப்பொழுது தவ்ஹீத் இயக்கங்கள் ஒரே அணியில் இருந்தன. இப்பொழுது எல்லாம் பிரிந்து சின்னாபின்னமாகி, SLTJ தனி மதம் என்கின்ற நிலைக்கு சென்றுவிட்டது.
முஸ்லிமை தீர்மானிக்கும் அடிப்படை கலிமா என்பதை மாற்றி, முஸ்லிமை தீர்மானிக்கும் அடிப்படை சூனியம் என்று மாற்றியதன் காரணமாகவே PJ மதத்தினராக SLTJ, TNTJ ஆகியவை மாறி தனித்துப் போயுள்ளன. அத்துடன் 2005 ஆம் ஆண்டு PJ யை அழைத்து வந்த முக்கிய நபர்கள் (ஜனாப் வஸ்னி நிஸார் உட்பட) அனைவரும் இன்று PJ இற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளனர்.
PJ ஐ மீண்டும் அழைத்து வந்தால் கூட்டம் சேர்க்கலாம் என்று SLTJ கணக்குப் போட்டது, சிங்கள மொழி மூல அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு வெளியீட்டிற்கு சிங்களமே தெரியாத PJ யை அழைத்து வர முயன்றதன் பின்னணி இதுதான். அதே நேரம் இன்னொரு பக்கம், முன்னாள் SLTJ தாயியான முஜாஹித் மெளலவி அவர்கள் PJ ஐ நேரடி விவாதத்திற்கு அழைத்து வருகின்றார், எனினும் PJ அதிலிருந்து தொடர்ந்தும் நழுவியே வருகின்றார்.
PJ இலங்கை வருவதை தடை செய்யும் முயற்சியில் அகில இலங்கை ஜமியத்துல் உலமா உட்பட, பல முக்கிய அமைப்புக்கள், பிரபல பிரமுகர்கள் என்று பலர் களத்தில் குதித்து உள்ளனர்.
ஜமியத்துல் உலமா இது தொடர்பில், அதன் CEO ஜனாப். ஆதம் அலி (மெளலவி அல்ல) மூலம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு உள்ளது.
இந்நிலையில், PJ இலங்கை வருவது தடைப்படும் என்று பல தரப்புகள் மிக உறுதியாக தெரிவித்து உள்ளனர்.
உலமா சபை முதல் தடவையாக அதன் அறிக்கை ஒன்றை ஜமாத் கேம்ஸ் இணையத்திற்கும் அனுப்பி வைத்துள்ளது. அந்த அறிக்கை இதோ :
தென்னிந்தியாவைச் சேர்ந்த பீ. ஜைனுலாப்தீன் அவர்கள் ஒரு நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொள்ள இருப்பதாக ஊடகங்களினூடாக அறிய முடிகிறது.
கடந்த கால அவரது விஜயத்தின் பொழுது ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகள் மற்றும் சமூக ஒற்றுமையையும், சக வாழ்வையும் சீர்குலைக்கும் சம்பவங்கள் ஏதும் ஏற்படாமலிருப்பதை கவனத்திற் கொண்டு இலங்கையின் பல முன்னணி இஸ்லாமிய நிறுவனங்களும், அமைப்புக்களும், அறபுக் கல்லூரிகளும் அவரது விஜயம் ஆரோக்கியமற்றது என எழுத்து மூலமும், தொலைபேசி மற்றும் நேரடியாகவும் ஜம்இய்யாவுக்கு அறிவித்த வண்ணம் இருக்கின்றனர்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் மேற்படி காரணங்களை கருத்திற் கொண்டு அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறது என்பதையும் நாட்டு மக்களுக்கு அறியத் தருகிறோம்.
அத்துடன் அவர் கூறும் சில கருத்துக்கள் மற்றும் கொள்கைகள் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமாக இருப்பதாலும் இது விடயத்தில் சகலரும் மிக அவதானமாகவும், எச்சரிக்கையாகவும் நடந்துகொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.
இது தொடர்பாக குறித்த ஏற்பாட்டாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சகோ. ஆதம் அலி
பிரதம நிறைவேற்று அதிகாரி
No comments:
Post a Comment