Wednesday, July 29, 2015

தந்தைக்கு அடித்து பெருநாள் கொண்டாடிய SLTJ ரவ்டிகள் (வீடியோ இணைப்பு)


இலங்கையின் கிழக்கில் அமைந்துள்ள கல்முனை சவளக்கடை என்னும் ஊரில் ஒரு வீட்டின் கொல்லைப் புறத்தில் பெருநாள் தொழுகின்றோம் என்று கூடிய சில SLTJ காவாலிகள் தாக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து மூன்று பேர் கைது செய்யப் பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. தற்பொழுது இது குறித்த உண்மைகள் வீடியோ ஆதாரத்துடன் வெளியாகியுள்ளன.

தனது தந்தைக்குச் சொந்தமான காணியில், தந்தையின் அனுமதி இன்றி பெருநாள் தொழுகைக்கு மகன் ஏற்பாடு செய்ததைத் தொடந்து இந்த அடிதடி இடம்பெற்றுள்ளது.

மகன், தனது SLTJ ரவ்டிகளுடன் சேர்ந்து தந்தையை தாக்கியதை தொடந்து, ஊர் மக்கள் மகனையும், அவனது SLTJ ரவ்டிகளையும் தாக்கி உள்ளனர். இந்த வீடியோவை பார்த்து மேலதிக விபரங்களை இலகுவாக தெரிந்து கொள்ளலாம்.


குர்ஆன், நபிவழி என்று பேசி, ஊரைப் பிரித்து தனியாக பெருநாள் தொழுகை தொழுகின்றவர்களுக்கு, தந்தையின் காணியில் கூட அனுமதியின்றி தொழ முடியாது என்று தெரியாதா? நபிவழி எங்கே போய்விட்டது?

மார்க்கத்தின் பெயரால் நடக்கும் இந்த கேவலமான செயலை எப்படி முஸ்லிம்கள் சகித்துக் கொள்ளப் போகின்றார்கள்? முஸ்லிம்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய பெருநாள் தினத்தன்று, தன்னை வளர்த்து ஆளாக்கிய தந்தையை தாக்கும் இப்படியான கேவலம் கெட்ட ரவடிகளை உருவாக்கவா நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து சகலதையும் துறந்து மதீனா சென்றார்கள்? இதுதானா PJ சொல்லும் இனிய மார்க்கம்?

இந்த விடயம் தொடர்பில் தாங்கள் செய்த தவறை முற்றாக மறைத்து, குற்றத்தையும் அடுத்தவர்கள் மீது போட்டு, கேவலமான பிரச்சாரம் ஒன்றை SLTJ மேற்கொண்டு வந்தது, எனினும் தற்பொழுது உண்மை வெளியாகிவிட்டது.







1 comment:

  1. yarda nee made shampraniye thidelil tholuwathuthan nabi wali

    ReplyDelete