Monday, July 20, 2015

தனியாக பெருநாள் தொழுத தெளஹீத் கார்கள் மீது ஊர் மக்கள் தாக்குதல், 3 பேர் கைது (படங்கள் இணைப்பு)


இஸ்லாமிய இயக்கங்கள் வந்ததைத் தொடர்ந்து மார்க்க அறிவு மக்களிடம் பெருகியதாகச் சொல்லப்பட்டாலும், பெருநாள் என்பது கொண்டாடப்பட வேண்டிய மகிழ்ச்சியான நாள் என்கின்ற நிலைமை மாறி ஆளாளுக்கு பிரிந்து, பிளவுபட்டு அடிதடியில் கழிக்கும் வன்முறை, குரோத, விரோத, வெறுப்பு நிறைந்த நாளாக மாறிவிட்டதன் ஒரு வெளிப்பாடே கல்முனையில் நடைபெற்ற வன்முறை நிகழ்வு ஆகும்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள கல்முனை சவளக்கடைஎன்னும் சிறிய முஸ்லிம் ஊரில், தாங்கள் SLTJ என்று சொல்லிக்கொள்ளும் சிலர் ஒரு வீட்டுக் கொல்லைப் புறத்தில் தனியாக பெருநாள் தொழுகை நடாத்த முற்பட்ட பொழுது, ஆவேசம் கொண்ட ஊர் மக்கள் சிலரால் பொல்லு, தடிகள் கொண்டு அடித்து விரட்டப் பட்டதாக அறிய முடிகின்றது.


இதன் பொழுது SLTJ காரர்கள் மீது சரமாரியான அடியும் விழுந்துள்ளது. ஊரார் பித்அத் செய்கின்றார்கள் என்று தனியாக சென்றவர்கள் அடிவிளுந்ததும், அலறி அடித்துக்கொண்டு ஓடிபோய் போலீசில் சென்று முறைப்பாடு செய்துள்ளனர், அதனைத் தொடர்ந்து ஊர் மஹல்லாவை சேர்ந்த மூன்று பேர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

ஊரையும் மார்க்கத்தையும் பிரிக்கும் பொழுது "அல்லாஹ்விற்காக எதை வேண்டுமானாலும் செய்வோம்" என்று உசுப்பேற்றி சாதித்துக் கொள்பவர்கள், அடிவிளுந்ததும், தஞ்சம் கேட்டும் நீதி கேட்டும் ஓடிப்போவது காபிரான பொலிசாரிடம்.

பித்அத் காரன் வேண்டாம் என்று வீர வசனம் பேசிப் பிரிந்து போனவர்கள், அடிவிளுந்ததும் பாதுகாப்புக் கேட்பது அல்லாஹ்விடம் அல்ல, அல்லாஹ்வையே நிராகரிக்கும் காபிரிடம். பித்அத்தை விட ஷிர்க் சிறந்தது என்றாகிவிட்டது.

பெருநாள் தொழுகையின் பேரால் நடைபெறும் கேவலங்கள் தொடர்பான விசேட கட்டுரை விரைவில்....


நபி வழி பேசும் தெளஹீத் வாதியின் அழகிய வழி வார்த்தைகள்.


பெண்கள் மீது வீரம் காட்டும் ஜிஹாதிகள்






No comments:

Post a Comment