Thursday, July 31, 2014

சூனியம் பலித்தால் PJ தற்கொலை செய்துகொள்வார் : ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், சிரி லங்கா தவ்ஹீத் ஜமாத் ஆகியவற்றின் ஸ்தாபகரும், தலைவரும், ஆன்மீக வழிகாட்டியுமான PJ என்று அழைக்கப்படும் P. ஜெய்னுலாப்தீன், சூனியம் என்று ஒன்று இல்லை என்றும், தனக்கு சூனியம் செய்தால் 50 லட்சம் இந்திய ரூபாய் பரிசு தருவேன் என்றும் விளம்பரம் செய்து இருந்தார். இவரது சவாலை ஏற்று, அரியமங்கலம் சாபநதிக்கரையைச் சேர்ந்த ஒருவர் சூனியம் செய்ய முன்வந்துள்ளார்.


இது தொடர்பான ஒப்பந்தத்தையே நீங்கள் மேலே உள்ள படத்தில் காண்கின்றீர்கள். (முழுமையாக பார்க்க படத்தின் மீது Click செய்யவும்)

திருச்சி அரியமங்கலம், சாபநதிக்கரையைச் சேர்ந்த அகோரி மணிகண்டன் என்னும் சூனியக்காரன், PJ க்கு சூனியம் செய்து 50 லட்சம் ரூபாய்களை வெற்றிகொள்ள முன்வந்துள்ளான்.

ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து 48 நாட்களுக்குள் இந்த சூனியம் நிறைவேற்றப்படும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

சூனியம் நிறைவேறினால் PJ சூனியம் உண்மை என்று பிரச்சாரம் செய்வார், அல்லது தற்கொலை செய்துகொள்வார் என்று இருதரப்பாரும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

சூனியம் நிறைவேறாவிட்டால், சூனியக்காரனான அகோரி மணிகண்டன் இஸ்லாத்தை ஏற்று, சூனியம் பொய் என்று பிரச்சாரம் செய்வார். இதுவே ஒப்பந்தம்.


சூனியம் பலித்தால், PJ தற்கொலை செய்துகொள்வார் என்று ஒப்பந்தம் உள்ளதால், "சனியன் செத்துத் தொலைந்தால் நிம்மதி" என்ற உன்னத நோக்கத்தில், அதிகமான மாற்று இயக்க சகோதரர்கள், தரீக்கா, மத்ஹபு பிரியர்கள் என்று பெரிய ஒரு கூட்டமே, சூனியம் பலிக்க வேண்டும் என்று தஹஜ்ஜத் தொழுது, பல்வேறு வணக்கங்களில் ஈடுபட்டு இரவு பகலாக துஆ கேட்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.


இன்னும் 48 நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம், வெற்றி யாருக்கு என்று........

அகோரி மணிகண்டனின் புகைப்படம் கிடைக்கவில்லை,            PJ யின் புகைப்படம்
ஆனால் இது ஒரு அகோரியின் புகைப்படம் ஆகும்,


அனைவரினதும் கவனத்திற்கு : உலமாக்கள், மெளலவிகள் என்பவர்கள் செய்யும் அட்டூழியங்கள் குறித்தும், இவர்களாலும், இவர்கள் போன்றவர்களாலும் முஸ்லிம்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், இஸ்லாத்திற்கு செய்யப்படும் அநியாயங்கள் குறித்தும் தொடர்ந்தும் நீங்கள் அறிவுறுத்தப் படுகின்றீர்கள். இன்று முஸ்லிம்கள் படும் பாட்டில், குறைந்த பட்சம் 50 லட்சம் இந்திய ரூபாயில் 100 பேரையாவது பலஸ்தீனுக்கு கூட்டிச் சென்று போராடாமல், எனக்கு சூனியம் செய், நான் உனக்கு 50 லட்சம் ரூபாய் தந்துவிட்டு தற்கொலை செய்துகொள்கின்றேன் என்று ஒருவன் சொகின்றான் என்றால்........ இப்பொழுது செருப்பை தேடுவீர்கள், ஆனால், நாளை அவனையும் மெளலவி என்பீர்கள்....... எப்பொழுதுதான் இந்த நிலைமை மாறுமோ...

தற்பொழுது கிடைத்த தகவல் : (தகவல் : பின்த் ஜவ்ஸி)
இந்த விஷயம் எவ்விதத்தில் உண்மை என்று நாம் நம்புவது ???
இது பீஜேயின் சதி திட்டமோ தெரியவில்லை
ஒரு வேளை பீஜேயே காசை கொடுத்து அவரிடம் சூனியம் செய்வது மாதிரியும் அது தனக்கு பழிக்காதது போன்றும் நடித்து முஸ்லிம்களிடம் சூனியம் இல்லை என்று நம்ப வைப்பதற்காக நடிகர் திலகம் பீஜே நடத்தும் நாடகமா இது என்று என்னத் தோன்றுகிது.
இன்ஷா அல்லாஹ் பொருத்து இருந்து பார்ப்போம் பீஜே சாவு நிச்சயமா இல்லை கண் துடைப்பு நாடகமா என்று.
(அல்லாஹ் அஃலம்)


4 comments:

  1. சிக்கந்தர் அமின்August 7, 2014 at 9:35 AM

    இவை நாடகம் எனில். உங்களில் ஒருவர் சூனியம் செய்து சம்பந்தப்பட்டவரை தூக்கில் ஏற்றவேண்டியதுதானை... சூனியம் என்று... ஒன்று இருந்தால் நிருபியுங்கள் இல்லையெனில் அல்லாஹ்வினால் மட்டுமே அனைத்தும் நிகழும் என ஒப்புக்கொள்ளுங்கள்..! மேலும் சூனியம் என்பது பொய்தான் என்பதை அவர்கள் நிருபிப்பது போல்... நீங்களும் சூனியம் இருக்கு என நிருபியுங்கள்... அவைதானை அறிவுத்திறன்...!!!

    ReplyDelete
  2. Nee oru poiyan nee nadu nilayanavana?

    ReplyDelete
  3. சூனியம் பற்றி நாங்களா சொன்னோம்? குர்ஆண்தானே சொல்கிறது. அப்படியானால் கதீஸ் குர்ஆண் எல்லாம் சூனியம் உள்ளதாக பொய்யா சொல்கிரது?

    ReplyDelete