Thursday, March 6, 2014

பெண்ணின் ஜனாஸாவில் தவ்ஹீத் ஜமாத் மீது சுன்னத் ஜமாத் தாக்குதல், 10 பேருக்கு காயம்

இயக்கங்கள், ஜமாத்துக்கள் எந்த அளவுக்கு முஸ்லிம்களை சீரழிக்கின்றன என்பது குறித்து பல்வேறு ஆதாரங்கள் தொடர்ந்தும் முன்வைக்கப் பட்டு வருகின்றன. தற்பொழுது கிடைத்துள்ள தகவலின் படி தவ்ஹீத் ஜமாஅத் - சுன்னத் ஜமாஅத் மோதலில் ஒரு பெண்ணின் ஜனாஸா மூன்று நாட்கள் வரை அடக்கம் செய்யப்படவில்லை.



தமிழ்நாடு, கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பின்னத்தூரில் வசித்துவரும் ஹபீபுர் ரஹ்மான் என்பவரது மனைவி ஷசாத் பேகம் (வயது 46) என்கின்ற பெண்மணி நோய் காரணமாக, இம்மாதம் மூன்றாம் திகதி காலமானார்.

இவரது குடும்பத்தினர் TNTJ ஐ சேர்ந்தவர்கள், ஆனால் பள்ளி நிர்வாகம் தரீக்கா கொள்கையை சேர்ந்தது. பள்ளி நடைமுறைப் படி மட்டுமே ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய முடியும், இல்லாவிட்டால் ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய முடியாது என்று பள்ளி நிர்வாகம் கூறிவிட்டது.

இதனால் 2 நாட்களாகியும் மையத்தை அடக்கம் செய்ய முடியவில்லை. இரண்டாம் நாள் இந்த விடயம் அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து TNTJ மாநிலத்தலைவர் அப்துல் ரஸ்ஸாக் தலைமையில் குறித்த ஊருக்கு சென்று ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக எடுத்துச் சென்ற பொழுது, அப்துல்லாஹ் ஜமாலியின் சுன்னத் ஜமாஅத் என்று சொல்லப்படும் இயக்கத்தினர் பொல்லுகள், தடிகள் கல்லுகள் கொண்டு ஜிஹாத் செய்துள்ளனர்.

இதன் பொழுது ஜனாஸாவை தூக்கிக் கொண்டு ஓட வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது. மேற்படி வீர ஜிஹாதில் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காபிரான போலீசார் வந்து, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மறு நாள் 6 ஆம் திகதி ஜனாஸா போலிஸ் பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இயக்க வெறி பிடித்த நாய்கள் ஜனாஸாவை மீண்டும் தோண்டி எடுத்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

மெளலவிகள் என்று சொல்லப்படும் பூசாரிப் பயல்களால் வழிநடத்தப்படும் இயக்க மோதலால் ஒரு மையத்தைக் கூட அடக்கம் செய்ய முடியாமல் மூன்று நாட்கள் சீரளித்துள்ளனர். இவை அனைத்திற்கும் காரணம் சாதாரண பொதுமக்கள் அல்ல, இரண்டு பக்கமும் இதன் பின்னணியில் மெளலவிமார் எனப்படும் புரோகிதர்களே உள்ளனர்.

இவர்கள்தானா நபிமார்களின் வாரிசுகள்? இப்படிப் பட்ட பூசாரிகளை இல்மைச் சுமந்தவர்கள் என்று சொல்லி மரியாதை கொடுப்பதில் என்ன அர்த்தம்? அடுத்தவனின் மையத்திலும் பிழைப்பு நடத்தும் மையத்தின் மாமிச உண்ணிகள் இந்த போக்கிரி பூசாரிகள்.

இயக்கங்களையும், மெளலவிகளையும் புறக்கணிப்போம்.







1 comment: