Sunday, August 11, 2013

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் பறிபோகின்றது, அரசாங்க தீர்மானம்

கிராண்ட்பாஸ் பகுதியில் பெளத்த இனவெறியர்களால் ஏற்படுத்தப் பட்ட பிரச்சினைகள், தாக்குதல்களுக்கு தீர்வு காணும் படியான மாநாடு ஒன்று சற்று நேரத்திற்கு முன்னர் பெளத்த சாசன அமைச்சில், அமைச்சர்கள், முஸ்லிம் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதில் எடுக்கப்பட்ட முடிவின் விபரங்கள் வெளியாகியுள்ளன.



சம்பிக்க ரணவக்க, உதய கம்மன்வில போன்ற அரசாங்க இனவாதிகளும் இதில் கலந்து கொண்டனர்.


அதில் மேற்கொள்ளப் பட்ட தீர்மானத்திற்கு அமைய, தாக்குதல் நடத்தப் பட்ட, புதிய பள்ளிவாசலை கைவிடுவது என்றும், பழைய பள்ளிவாசலில் மீண்டும் தொழுகை நடத்துவது என்றும் முடிவு செய்யப் பட்டுள்ளது.


இது முஸ்லிம்களுக்கு ஒரு பின்னடைவு ஆகும்.இது முஸ்லிம்களுக்கு ஒரு தோல்வி என்றே கருதப் படுகின்றது.


மேற்படி விடயங்கள் எதிலும் ஜமியத்துல் உலமாவோ, ரிஸ்வி முப்தியோ இதுவரை வாய் திறக்கவோ, கலந்துகொள்ளவோ, திரும்பிப் பார்க்கவோ இல்லை.


கண்ட பிறையை மறைத்து, உண்மையயை மறைத்து ரேடியோவில் பொய் சொல்லி வீர வசனம் பேசிய துரோகிகள், பள்ளிவாசல் உடைக்கப்பட்டு முஸ்லிம்கள் தாக்கபப்ட்ட பொழுது கொஞ்சம் கூட கணக்கெடுக்க வில்லை.


முஸ்லிம்களின் 980 கோடிக்கு மண்ணைப் போடுவதிலும், ஹராத்தில் நோன்பு பிடிக்க வற்புறுத்துவதிலும் ஈடுபட்டவர்கள், முஸ்லிம்கள் துன்பத்தில் விழுந்து, பள்ளிவாசல் உடைக்கப்பட்டு, தொழுகையாளிகள் தாக்கப்பட்ட பயங்கரமான சூழலில் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.



மீண்டும் ஒரு தடவை பிறையில் பகல் மோசடி செய்து, ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஹஜ்ஜுப் பெருநாளை, 14 ஆம் திகதி திங்கட்கிழமைக்கு, அல்லது 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றி, அரசாங்கத்திற்கு நன்றியுள்ள பிராணியாக வலம் வருவதற்கு மீண்டும் ரிஸ்வி முப்தியும், ஜமியத்துல் உலமாவும் தலை காட்டலாம்.


அதுவரை அவர்கள் தங்கள் உல்லாச பங்களாக்களில் சுகபோகம் அனுபவிப்பதிலும், கோடிக்கணக்கில் பணம் புரளும் வியாபாரங்களை கவனிப்பதிலும் பிசியாகி விடுவார்கள்.


1 comment: